• English
  • Login / Register

வரும் 15 ஆம் தேதி (நாளை) புதுப்பிக்கப்பட்ட எர்டிகாவை, மாருதி அறிமுகம் செய்கிறது

மாருதி எர்டிகா 2015-2022 க்காக அக்டோபர் 14, 2015 11:30 am அன்று அபிஜித் ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 19 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்ப்பூர்:

புதுப்பிக்கப்பட்ட மாருதி எர்டிகாவை வரும் 15 ஆம் தேதி (நாளை) அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்ய தயாராக உள்ளது. இந்தோனேஷியா ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்ட இந்த வாகனத்தை அறிமுகம் செய்வதில் கணிசமான அளவு தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர, இந்த கார் நம் நாட்டில் பல முறை உளவுப் படங்களில் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதுப்பிக்கப்பட்ட காரில், மறுவடிவமைப்பு பெற்ற முன்புற பம்பர், கிரோமின் குறிப்பிடத்தக்க பயன்பாட்டுடன் கூடிய ஒரு புதிய கிரில் செட்அப், புதிய ஜோடி அலாய் வீல்கள், புதிய பின்புற பம்பர் லே-அவுட் என வெளிப்புறத்தில் ஒருசில எளிய மாற்றங்களை காண முடிகிறது. உட்புறத்தில், ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன், சியஸிடம் இருந்து பெறப்பட்ட ஸ்மார்ட்ப்ளே இன்ஃபோடெயின்மெண்ட் யூனிட் மற்றும் புதிய மெத்தை, விரிப்புகள் ஆகியவை கொண்ட அமைப்பு ஆகியவற்றை கொண்டிருக்கும். பெரிய மாற்றமாக, அதிகம் கவனிக்கப்படாத நுட்பமான விஷயங்களையும் சற்று ஆழ்ந்து பார்க்கும் போது, இதில் ஒரு புதிய CVT ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் மைலேஜை அதிகரிக்கும் வகையில் SHVS மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் உடன் கூடிய டீசல் மோட்டாரை கொண்டுள்ளது.

புதிய எர்டிகாவை இயக்க, அதே 1.3 லிட்டர் DDiS200 டீசல் மற்றும் 1.4 லிட்டர் பெட்ரோல் மோட்டார்களைக் கொண்டு, முறையே 88.8bhp/200Nm மற்றும் 93.7bhp/130Nm என்ற அளவில் ஆற்றலையும், முடுக்குவிசையையும் அளிக்கிறது. டிரைவிங் டைனாமிக்ஸில் பெரும்பாலும் அதேபோலவே ஒத்துள்ளது. ஆனால் CVT ஆட்டோமேட்டிக் பயன்பாடு மற்றும் சுசுகி மைல்டு ஹைபிரிடு தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் சிறிய அளவிலான மாற்றங்களை உணரலாம். மேலும் பெட்ரோல் என்ஜினின் மைலேஜ் லிட்டருக்கு 16.02 கி.மீ. என்றே தொடரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், டீசல் என்ஜினின் தற்போதைய மைலேஜான லிட்டருக்கு 20.77 கி.மீ. என்ற அளவை விட அதிகமாக கிடைக்கலாம்.

ஹோண்டா மொபிலியோ, ரெனால்ட் லாட்ஜி, டொயோட்டா இனோவா ஆகியவற்றுடன் போட்டியிட உள்ள எர்டிகா, அவற்றுடன் ஒப்பிட்டால் இதன் தற்போதைய விற்பனை சிறப்பாகவே உள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட மாடலின் மூலம் தற்போதைய MPV சந்தையில் உள்ள எர்டிகாவின் மதிப்பு அதிகரிக்கலாம். ஏனெனில் இந்த பிரிவில் ஒரு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வை, இதுவரை வேறெந்த தயாரிப்பாளரும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: மாருதியின் தயாரிப்பு பட்டியலுக்கு பெலினோவின் பங்களிப்பு

போட்டி: ஹோண்டா மொபிலியோ | ரெனால்ட் லாட்ஜி

was this article helpful ?

Write your Comment on Maruti எர்டிகா 2015-2022

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் எம்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience