மாருதி 20 புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவுள்ளது
published on ஜூலை 31, 2015 06:49 pm by manish
- 17 Views
- 1 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
மாருதி சுசூக்கி இந்தியா நிறுவனம் 2020 ஆம் ஆண்டுக்குள்ளாக வருடத்திற்கு 20 லட்சம் கார்கள் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை அடையும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தியா முழுதும் பரவலாக புது மாடல் கார்களை அதிக எண்ணிக்கையில் அறிமுகப்படுத்தி வருகிறது. இதனை முன்னிட்டு, தன்னுடைய சொகுசு மற்றும் விலை குறைந்த மாடல் கார்களை இந்தியாவில் அந்தந்த பகுதிக்கேற்ப உள்ளூர் மொழியிலேயே அந்த கார்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டு மக்களிடம் தனது நேர்த்தியான கார்களை கொண்டு சேர்க்க முடிவுசெய்துள்ளது.
மற்றுமொரு ஆச்சர்யகாரமான தகவல் என்னவென்றால், அடுத்து வரும் 5 வருடங்களுக்குள் 20 புதிய மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளது. அவற்றில் ஒரு சில மாடல்களை புதிதாக அமைக்கப்பட்ட ‘நெக்க்ஷா‘ என்ற உயர்தர விற்பனை பிரிவு வழிமுறையின் மூலம் வியாபாரம் செய்யவுள்ளது. பெரும்பாலான மாடல்கள் ஏற்கனவே உள்ள டீலர்கள் மூலமாக எப்போதும் போல் விற்பனை செய்யப்படும், ஆனால் S - க்ராஸ் போன்ற உயர்தர மாடல்கள் நெக்க்ஷா என்ற சிறப்பு வகை டீலர்கள் மூலமாகவே விற்பனை செய்யப்படும்.
மாருதி நிறுவனம் அடுத்த மாதம் S –க்ராஸ் மாடலை வெளியிடுவதற்கு தயாராக உள்ளது. மேலும் சேலெரியோ டீசல் ரக மாடலை ஏற்கனவே அறிமுகபடுத்தியுள்ளது. மிக பெரிய வெற்றியை அடைந்த அதிக அளவு விற்பனையாகும் மாடல்களை கொண்டு மிகப்பெரிய இந்திய சந்தையில் ஆழமாக வேரூன்ற எண்ணியுள்ளது.
ஃபியட் நிறுவனம் வடிவமைத்து தயாரித்த இஞ்ஜினை இறக்குமதி செய்து பொருத்தப்பட்டு இந்த S - க்ராஸ் நவநாகரீகமாக சந்தைக்கு வருகிறது. இதன் இஞ்ஜினின் செயல் திறனும், பயன்பாடுகளும் ஏற்கனவே சர்வதேச சந்தையில் உள்ளது. மாருதி நிறுவனம், இந்த வருடத்திற்கு தேவையான ஆராய்சி மற்றும் அபிவிருத்தி, புது மாடல் அறிமுகம், சந்தை படுத்துதல் இன்னும் பிற செயல்பாடுகளுக்காக 4000 கோடி ரூபாயைத் தனியாக ஒதுக்கி வைத்துள்ளது.
நிலவி வரும் கடுமையான சந்தை சூழ்நிலையிலும் கூட, இந்நிறுவனம் முதல்முறையாக மாருதி கார் வாங்கும் நபர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்துள்ளது. முதல்முறை வாங்கும் நபர்களின் எண்ணிக்கை 43 சதவிகித்தில் இருந்து 46 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மேலும் மாருதி நிறுவனம் தானியங்கி ஆளியக்க செலுத்தி (AMT ) இஞ்ஜின் தயாரிப்பை ஒரு மாதத்திற்கு 4000 எண்ணிக்கையிலிருந்து 8000 எண்ணிக்கையாக அதிகரித்துள்ளது. அடுத்த 1.5 வருடத்தில் இதனை 12000 ஆக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.
மாருதி சுசூக்கி நிறுவனத்தின் தற்போதைய பொருளாதார வளமையும், உறுதியான வெற்றி உத்தியும் பங்குதாரர்கள் மத்தியில் இன்னிருவனத்திற்கு உள்ள ஆணித்தரமான நம்பிக்கையை சீராக உயர்த்தியுள்ளது. இதன் விளைவாக இந்த புதன் கிழமை மாருதி சுசூக்கி இந்தியா நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2 சதவிகிதம் அதிகரித்து ரூபாய் 4273.95 அளவில், B S E பங்கு சந்தையில் முடிவுற்றது.