மாருதி சுசூகியின் 2015 ஜூன் மாத விற்பனை 1,14,756 எண்ணிக்கையை எட்டியது
published on ஜூலை 10, 2015 11:31 am by sourabh
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்தியாவின் மிக பெரிய கார் விற்பனையாளர்களான மாருதி சுசூக்கி நிறுவனத்தார் இந்த 2015 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் 1,14,756 கார்களை விற்பனை செய்துள்ளனர். இந்த நிறுவனம் சென்ற ஆண்டு இதே மாதத்தில் 1,12,773 கார்களை விற்றது. இந்த விற்பனையை நடப்பு ஆண்டுடன் ஒப்பிடும் போது, 1.8 சதவிகிதம் அதிகமாக விற்பனை செய்து முன்னேற்றம் கண்டுள்ளது. மேலும், 2015 ஜூன் மாதத்தில் விற்பனை செய்த 1,14,756 கார்களில், ஏற்றுமதி செய்த 12,130 கார்களும் அடங்கும்.
அதுபோல், இந்த நிறுவனத்தார் நடப்பு காலாண்டில் 3,41,329 கார்களை விற்பனை செய்து 13.8 சதவிகித முன்னேற்றம் கண்டுள்ளனர். ஆரம்ப நிலை கார்களான அல்டோ மற்றும் வேகன்ஆர் ஆகியவற்றின் சென்ற ஆண்டு இதே மாதத்தில் (47,618) விற்பனையை ஒப்பிடும் போது இந்த ஆண்டு 34,336 கார்களை மட்டுமே விற்பனை ஆகியுள்ளது.
வசதி மிகுந்த வாகன பிரிவில் உள்ள கார்களான ஸ்விஃப்ட், ரிட்ஜ், சேலேரியோ, டிசையர், ஆகியன மொத்த விற்பனையில் 45,701 எண்ணிக்கைகளைக் கொண்டு அதிகமான பங்களிப்பை பெற்றுள்ளன. மேலும் இது சென்ற ஆண்டு விற்பனையான 36,741 எண்ணிக்கையை ஒப்பிடும் போது 24.4 சதவிகிதம் அதிகமான விற்பனையாகும். நடுத்தர வாகன பிரிவில் உள்ள கார்களான சியாஸ் மற்றும் SX4 (தயாரிப்பு நிறுத்தப்பட்டது, ஆனால் இருப்பு விற்பனை) வகைகளில் 3,700 கார்களை விற்பனை செய்து, சென்ற ஆண்டு இதே மாத விற்பனையான 322 என்பதை கடந்து இந்நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
அதிக பயன்பாட்டு பிரிவில் உள்ள கார்களான ஜிப்ஸி, கிராண்ட் விட்டாரா மற்றும் எர்டிகா ஆகியன விற்பனையில் 5,531 என்ற இலக்கை தொட்ட போது, எக்கோ மற்றும் ஆம்னி ஆகிய இரண்டும் இனைந்து 10,465 என்ற இலக்கை எட்டி உள்ளன.
சமீபத்தில், இந்த நிறுவனம் மாருதி சுசூகி எஸ் கிராஸ் என்ற மாடலின் சிறப்பு அறிமுக பார்வையை IIFA விருதுகள் 2015 விழாவில் நிகழ்த்தியது.