சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

மாருதி சுசுகி நிறுவன வாகனங்களின் விற்பனை டிசம்பரில் 8.5% உயர்ந்துள்ளது

published on ஜனவரி 05, 2016 12:54 pm by sumit

மாருதி சுசுகி நிறுவனம் டிசெம்பர் மாதம் 8.5% விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த மாதம் உள்நாட்டு விற்பனை 13.5% உயர்ந்துள்ள போதிலும் ஏற்றுமதி 33.1%. குறைந்தே காணப்பட்டது.

இந்த இந்தோ - ஜப்பானிய கூட்டு கார் தயாரிப்பு நிறுவனம் 2014 டிசம்பரில் 98,109 வாகனங்கள் விற்பனை செய்தது. இது கடந்த 2015 டிசம்பர் மாதம் விற்பனையான 1,11,333 வாகனங்களை விட குறைந்த எண்ணிக்கையே ஆகும். எர்டிகா மற்றும் ஜிப்சி வாகனங்களை உள்ளடக்கிய பயன்பாட்டு வாகனங்கள் பிரிவில் 11.5% வளர்ச்சியை இந்நிறுவனம் பதிவு செய்துள்ளது. மிக அதிக விற்பனை உயர்வான 115% சதவிகிதத்தை சூப்பர் - காம்பேக்ட் பிரிவில் தான் மாருதி பதிவு செய்துள்ளது. 2014 டிசம்பரில் 1,676 டிசையர் டூர் கார்களை ( சூப்பர் காம்பேக்ட் பிரிவில் மாருதியின் ஒரே தயாரிப்பு ) விற்பனை செய்திருந்தது. ஆனால் கடந்த 2015 ஆம் வருடம் டிசம்பரில் 3,614 வாகனங்கள் என்ற அளவுக்கு அந்த விற்பனை உயர்ந்திருந்தது. ஏற்றுமதியை பொறுத்தவரை 2014 டிசம்பரில் 11,682 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்த எண்ணிக்கை கணிசமாக குறைந்து 2015 டிசம்பரில் 7,816 வாகனங்கள் தான் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு 2016 ஆம் ஆண்டு பலேனோ கார்களை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள நிலையில் , இந்த வருடம் ஏற்றுமதி விற்பனை, சரிவில் இருந்து மீண்டு கணிசமாக உயரும் என்று மாருதி நிறுவனம் எதிர்பார்க்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளர்களான மாருதி சுசுகி நிறுவனத்தினர் மொத்தத்தில் 2015 ஆம் ஆண்டு 13.0% வளர்ச்சியை மாருதி நிறுவனத்தார் பதிவு செய்துள்ளனர். 2014 ஆம் ஆண்டு விற்பனையான 9,45,703 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 2015 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை உயர்ந்து 10,68,846 வாகனங்களை மாருதி விற்பனை செய்து நல்ல விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஏற்றுமதி புள்ளி விவரங்களை பார்த்தாலும் கூட , 2014 ஆம் ஆண்டு ஏற்றுமதி செய்யப்பட்ட 92,171 வாகனங்களை விட கூடுதலாக 5.1% சதவிகிதம் வாகனங்கள் 2015 ஆம் ஆண்டு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏற்றுமதியான மாருதி வாகனங்களின் மொத்த எண்ணிக்கை 96,888 ஆகும். இந்த விற்பனை வளர்ச்சியில், இரண்டு மாதத்திற்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டு பெருத்த வரவேற்பை பெற்றுள்ள மாருதி சுசுகி பலேனோ கார்களுக்கு முக்கியமான பங்கு உள்ளது என்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

மேலும் வாசிக்க

புதிய 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் இஞ்சின் பொருத்தப்பட்ட பலேனோ கார்களை மாருதி சுசுகி சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தி வருகிறது.

s
வெளியிட்டவர்

sumit

  • 11 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your கருத்தை

Read Full News

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை