50,000 ஆட்டோ கியர் ஷிஃப்ட் கார்களை மாருதி சுசுகி விற்பனை செய்தது
published on செப் 25, 2015 12:41 pm by cardekho
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்: நம் நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி நிறுவனம், 50,000 ஆட்டோ கியர் ஷிஃப்ட் தொழில்நுட்பம் கொண்ட கார்களை விற்பனை செய்து மற்றொரு சாதனையை எட்டியுள்ளது. இந்த வெற்றியை பெற மிக குறைந்த காலஅளவான, 1.5 ஆண்டுகளுக்கும் குறைவாகவே எடுத்துக் கொண்டது. முன்னதாக, இந்த தொழில்நுட்பத்தை அந்நிறுவனத்தின் சிறிய காரான சிலிரியோவில் அறிமுகம் செய்யப்பட்டது. பிறகு, இதே தொழில்நுட்பத்தை மாருதி நிறுவனம் ஆல்டோ K10 காரில் அறிமுகம் செய்தது. 2020 ஆம் ஆண்டின் முடிவிற்குள் 2 மில்லியன் கார்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற அந்நிறுவனத்தின் இலக்கை நோக்கி, இந்த வெற்றி பயணம் தொடர்கிறது.
ஆட்டோ கியர் ஷிஃப்ட் தொழில்நுட்பம் கொண்ட கார்களை ஓட்டுவது எளிமை என்பதால், அதன் விற்பனை அதிகமாக உள்ளதாக, அந்நிறுவனம் தெரிவிக்கிறது. நெருக்கடியான போக்குவரத்து சாலைகளில், ஆட்டோ கியர் ஷிஃப்ட் தொழில்நுட்பம் கொண்ட கார்கள், ஓட்டுநரை பரபரப்பு இல்லாமல் வைத்துக் கொள்கிறது. அதே நேரத்தில் எரிபொருள் சிக்கனத்திலும் எந்த சமரசமும் எதிர்பார்ப்பது இல்லை.
மாருதி சுசுகி இந்தியாவின் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை பிரிவின் நிர்வாக இயக்குநர் R.S.கல்சி கூறுகையில், “ஆங்காங்கே நிறுத்தி செல்லும் போக்குவரத்து நெரிசல் கொண்ட சந்தர்ப்பங்களில், ஆட்டோ கியர் ஷிஃப்ட் தொழில்நுட்பத்தின் செலவீனம் போன்றவை தனித்துவமான பண்புகளை கொண்டதாகவும், ஓட்டுவதற்கு செளகரியமாகவும் உள்ளது. அதே நேரத்தில் எரிபொருள் சிக்கனத்தில் எந்த சமரசத்திற்கும் வாய்ப்பில்லாமல் இருப்பதால், இந்தியா முழுவதும் இந்த தொழில்நுட்பத்தை பிரபலமடைய செய்துள்ளது. மேலும், வருங்காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் பல தொழில்நுட்பங்களையும் கொண்டு வர, இந்நிறுவனம் செயலாற்றி வருகிறது” என்றார்.
ஆட்டோ கியர் ஷிஃப்ட் வகையை சேர்ந்த கார்களின் மொத்த விற்பனையில், இந்த தொழில்நுட்பத்தை கொண்ட சிலிரியோ மற்றும் ஆல்டோ K10 கார்கள் 25% விற்பனையை பகிர்ந்து கொண்டுள்ளது. இதன் மூலம் ஆட்டோமேட்டேட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (AMT) தொழில்நுட்பத்தின் மீது வாடிக்கையாளர்களின் விருப்பம் அதிகரித்து வருவதை அறிந்து கொள்ளலாம். ஆட்டோமேட்டிக் கார்களின் மீதான வாடிக்கையாளர்களின் விருப்பத்தை கண்டறிந்த மஹிந்திரா மற்றும் டாடா நிறுவனங்கள் கூட, தங்களின் சிஸ்ட் மற்றும் TUV 300 கார்களில் ஆட்டோமேட்டிக் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி உள்ளன.
0 out of 0 found this helpful