• English
  • Login / Register

மாருதி சுசுகி நிறுவனத்தின் குஜராத் தொழிற்சாலை ஒப்பந்தத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.

published on டிசம்பர் 18, 2015 03:07 pm by nabeel

  • 19 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்பூர்

மாருதி சுசுகி இந்தியாவின் 90 சதவிகித ( தோராயமாக ) மைனாரிட்டி பங்குதாரர்கள் குஜராத் தொழிற்சாலை ஒப்பந்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

குஜராத்தில் அமைக்கப்பட உள்ள தொழிற்சாலையில் சுசுகியை முதலீடு செய்ய அனுமதிக்கலாமா ? வேண்டாமா ? என்பது பற்றி முடிவு செய்ய ஓட்டெடுப்பை நடத்தியது. இந்த ஓட்டெடுப்பை மாருதியின் மைனாரிட்டி பங்குத்தாரரகள் நவம்பர் 16 முதல் டிசெம்பர் 15 வரை நடத்தினர். இதற்கான முடிவுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அதில் பெரும்பாலான பங்குதாரர்கள் ஒப்பந்தத்திற்கு சாதகமாகவே வாக்களித்திருந்தனர். இது சுசுகி நிறுவனம் வரும் 2017 முதல் தயாரிப்பு மற்றும் விற்பனையை துவக்க வழி வகை செய்துள்ளது. மேலும் தயாரிப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்த நிலத்தை குத்தகைக்கு எடுக்கவும் சுசுகி மோட்டார் கார்ப் நிறுவனத்திற்கு இது அனுமதி வழங்கி உள்ளது.

முதலில் போட்ட திட்டத்தின்படி இந்த குஜராத் தொழிற்சாலைக்கு மாருதி சுசுகி தான் உரிமையாளராக இருக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த குஜராத் தொழிற்சாலை கட்டுமானத்தில் $488 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்போவதாக சுசுகி மோட்டார் கார்பரேஷன் திடீரென்று அறிவித்தது. இந்த அறிவிப்பாலும் , தனது நிறுவன முதலீட்டாளர்களான சுசுகி மோட்டார் கார்பரேஷனிடம் இருந்து கொடுக்கப்பட்ட அழுத்தத்தாலும் மாருதி நிறுவனம் தனது மைனாரிட்டி பங்குதாரர்களின் அனுமதியை பெறவேண்டி இந்த ஓட்டெடுப்பை நடத்தியது. குஜராத் தொழிற்சாலைக்கு சுசுகி மோட்டார் கார்பரேஷன் உரிமையாளராவதற்கு ஆதரவாக 90% பங்குதாரர்கள் வாக்களிதன்னர். எஞ்சிய 10 சதவிகிதத்தினர் மட்டுமே எதிர்த்து வாக்களித்தனர். மாருதி சுசுகி இந்தியாவின் சேர்மன் RC பார்கவா , இது பற்றி கருத்து தெரிவிக்கையில் , “ எங்களக்கு ஒரு விதத்தில் இது லாபகரமான முடிவாகவே தோன்றுகிறது. ஏனெனில் இப்போது நாங்கள் எந்த ஒரு முதலீட்டையும் குஜராத் தொழிற்சாலையில் செய்ய வேண்டியதில்லை. ஆகவே அந்த தொகையை இப்போது எங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு பயன்படுத்துவோம். மேலும் எங்கள் மார்கெடிங் மற்றும் விநியோகஸ்தர்கள் நெட்வொர்கை மேலும் மேம்படுதுக் கொள்ள இந்த தொகையை பயன்படுத்துவோம்" என்றும் கூறினார். குஜராத் தொழிற்சாலைக்கு தேவைப்படும் மொத்த முதலீடு ரூ. 18,500 கோடியாகும். இதில் சுசுகி நிறுவனம் 8,000- ரூ. 10,000 கோடி வரை முதலீடு செய்யும் என்று தெரிகிறது. இப்போதைக்கு மாருதி நிறுவனத்திற்கு குர்காவுன் மற்றும் மனேசரில் இரண்டு பிரம்மாண்டமான தொழிற்சாலைகளில் வாகனங்கள் தயாராகி வருகின்றன. இந்த இரண்டு தொழிற்சாலையிலும் சேர்த்து மொத்தம் 15.5 லட்சம் வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன. புதிதாக அமைக்கப்பட உள்ள இந்த குஜராத் தொழிற்சாலைக்கும் வருடத்திற்கு 15 லட்சம் வாகனங்களை தயாரிக்கும் திறன் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தொழிற்சாலையை முழுமையாக சுசுகி மோட்டார் கார்பரேஷன் நிர்மாணித்து , வாகனங்களை தயாரித்து பின் அதனை மாருதி நிறுவனத்திற்கு உற்பத்தி விலையிலேயே விற்கும். அந்த தயாரிப்புக்கள் மாருதி சுசுகியின் தயாரிப்புக்களாக சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும்.

மேலும் வாசிக்க

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience