• English
  • Login / Register

மாருதி சுசுகி நீட்டிக்கப்பட்ட உத்தரவாதங்களில் சிறப்பான நன்மைகளுடன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பழுது நீக்கச் சேவைகளை அளிக்கிறது

published on ஜனவரி 21, 2020 05:08 pm by dhruv

  • 30 Views
  • ஒரு கருத்தை எழுதுக

உங்களுடைய மாருதியின் பழுது நீக்கச் சேவை அல்லது செப்பனிடுவதற்காக நல்ல ஒரு ஒப்பந்தம் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? நல்லது, உங்களுக்காகவே மாருதி இருக்கிறது. 

Maruti Suzuki Offering Special Benefits On Extended Warranties, Service For A Limited Time

இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்காக இந்தியாவின் 71 வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஒரு பழுது நீக்கச் சேவை முகாமை ஏற்பாடு செய்துள்ளது.  இந்த முகாம் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 15 முதல் 31 வரை நடைபெற இருக்கிறது.

இந்த முகாமின் ஒரு பகுதியாக, மாருதி சுசுகி உரிமையாளர்கள் பழுது நீக்கச் சேவைக்கான  தொழிலாளர் கட்டணங்கள் மற்றும் வாகனத்திற்குத் தேவையான புதிய பாகங்களை வாங்குவதற்குத் தள்ளுபடி பெற முடியும். அத்துடன் கூட, இது அவர்களின் வாகனங்களுக்கான நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தின் சிறப்புச் சலுகைகளையும் வழங்குகிறது.

Maruti Suzuki Offering Special Benefits On Extended Warranties, Service For A Limited Time

இந்த முகாம் இந்தியா முழுவதும் இருக்கும் மாருதி சுசுகியின் 3,800 தொடர்பு பகுதிகளிலும் நடைபெறும். இது குறித்து மேலும் படிக்கக் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அவர்களின் செய்திக்குறிப்பை பார்க்கவும். 

மேலும் படிக்க: 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் விற்பனை செய்யப்பட்ட முதல் 10 கார்கள் 

செய்தி வெளியீடு 

புது டெல்லி, 14 ஜனவரி 2020: மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனமானது இந்தியாவின் 71 வது குடியரசு தினத்தை முன்னிட்டு, நாடு தழுவிய ‘குடியரசு தின பழுது நீக்கச் சேவை முகாமை’  துவங்க இருக்கிறது. இது வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த முறையில் தரமான சேவைகளை வழங்க வேண்டும் என்ற நிறுவனத்தின் நோக்கத்திற்கு ஏற்ப நடைபெற இருக்கிறது. இந்த 17 நாள் பழுது நீக்கச் சேவை முனைவு 2020 ஆம் ஆண்டு ஜனவரி 15 முதல் ஜனவரி 31 வரை நடைபெறும்.

Maruti Suzuki Offering Special Benefits On Extended Warranties, Service For A Limited Time

இந்த அறிவிப்பின் போது பேசிய மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் (சேவை) திரு. பார்த்தோ பானர்ஜி அவர்கள், “எங்கள் வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளை அறிந்து கொண்டு, அவர்கள் தங்கள் சொந்த காருடன் ஒரு மகிழ்ச்சியான அனுபவம் பெறுவதை உறுதிப்படுத்துவதற்கு நாங்கள் அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்போம். ‘குடியரசு தின பழுது நீக்கச் சேவை முகாம்’ என்பது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உயர்தர பழுது நீக்கச் சேவை வசதிகளை வழங்குவதற்கான எங்களுடைய நோக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்தியா முழுவதும் இருக்கும் 3800 க்கும் மேற்பட்ட பழுது நீக்கச் சேவை தொடர்பு பகுதிகளில் நாளொன்றுக்கு, சுமார் 45000 கார்களுக்குப் பழுது நீக்கச் சேவையை செய்து வருகிறோம். இந்த முனைப்பியக்கத்தின் மூலம், பழுது நீக்கச் சேவைக்கான தொழிலாளர் கட்டணங்கள், உபரி பாகங்கள் மற்றும் துணைக் கருவிகள் மீதான அற்புதமான நன்மைகளையும் எங்கள் வாடிக்கையாளர்களுக்குப் பயனளிக்கும் வகையில் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தின் சிறப்புச் சலுகைகள் போன்ற அற்புதமான சலுகைகளையும் நாங்கள் வழங்குகிறோம். எப்போதும் போலவே, மாருதி சுசுகியின் பயிற்சி பெற்ற பழுது நீக்கச் சேவை தொழில்நுட்ப வல்லுநர்கள் ஒவ்வொரு வாகனத்தின் மீதும் முறையான கவனம் செலுத்தப்படுவதை உறுதி செய்வார்கள்.”

was this article helpful ?

Write your கருத்தை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • ஆடி ஆர்எஸ் க்யூ8 2025
    ஆடி ஆர்எஸ் க்யூ8 2025
    Rs.2.30 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • வோல்வோ எக்ஸ்சி90 2025
    வோல்வோ எக்ஸ்சி90 2025
    Rs.1.05 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வகைகள்
    மஹிந்திரா be 6
    மஹிந்திரா be 6
    Rs.18.90 - 26.90 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வகைகள்
    மஹிந்திரா xev 9e
    மஹிந்திரா xev 9e
    Rs.21.90 - 30.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience