மாருதி சுசுகி நிறுவனம் "நெக்ஸா" பிரிமியம் டீலர்ஷிப்களை துவக்கியது.
published on ஜூலை 24, 2015 12:20 pm by akshit
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
டெல்லி: மாருதி சுசுகி இந்திய லிமிடெட் (எம்எஸ்ஐஎல்) தன்னுடைய புதிய விற்பனை சேனலை "நெக்ஸா" என்ற பெயரில் துவக்கியுள்ளது. மாருதி சுசுகி நிறுவனம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் மாருதி எஸ் - கிராஸ் கார்களை இந்த புதிய நெக்ஸா டீலர்ஷிப் மூலமாக விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கெனிச்சி ஆயுகவா ஒரு அறிக்கையில் பின்வருமாறு கூறினார். “ வாடிக்கையாளர்களுக்கு நெக்ஸா டீலர்ஷிப் ஒரு புது அனுபவாமாக அமையும்". இந்திய கார் சந்தையில் மட்டுமல்ல, இந்திய சமூகத்திலும் கூட மாற்றங்கள் ஏற்பட்டு புதிய பிரிவைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் வேகமாக உருவாகி வருவதைக் காண முடிகிறது. இந்த வாடிக்கையாளர்களின் பலதரப்பட்ட எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்ய வேண்டுமானால் நாம் புதிய முயற்சிகளை செய்ய வேண்டும்".
எஸ் - கிராஸ் கார்கள் இந்திய சந்தையில் அறிமுகமாகும் போது திட்டமிடப்பட்டுள்ள நெக்ஸா டீலர்ஷிப்களில்35 - 40 டீலர்ஷிப்கள் செயல்படத் தொடங்கி இருக்கும். இந்த எண்ணிக்கை 100 என்ற அளவுக்கு இன்னும் ஆறு அல்லது எட்டு மாதங்களுக்குள் விரிவாக்கப்படும்.ஏற்கனவே நெக்ஸாவிற்காக பிரத்யேகமாக வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆயிரம் பேரைத் தவிர கூடுதலாக இன்னும் 1500 பேரை வேலைக்கு அமர்த்த மாருதி சுசுகி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
" மை நெக்ஸா" என்ற பெயரில் விசுவாசமான வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் சலுகை திட்டத்தையும் மாருதி சுசுகி நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மாருதி நிறுவனம் பல பிரபல லைப்ஸ்டைல் ப்ரேண்டுகளுடன் வணிகதொடர்பு ஏற்படுத்திக்கொண்டுள்ளது.இதன் மூலம் நெக்ஸா வாடிக்கையாளர் குறிப்பிட்ட லைப்ஸ்டைல் பிராண்டுகளில் பொருட்கள் வாங்கும்போது நெக்ஸாவில் கொடுக்கப்பட்ட ரிவார்ட் பாயிண்ட்களை பயன்படுத்தி சிறப்பு சலுகைகளைப் பெறலாம்.
எம்எஸ்ஐஎல் இப்போது பயணிகள் பயன்பாட்டு( பாசெஞ்சர் கார்) கார் பிரிவில் தன்னிகர் இல்லா தலைவனாக ராஜநடை போட்டுக்கொண்டு இருக்கிறது என்று சொன்னால் மிகை இல்லை. இந்த பிரிவில் மொத்த விற்பனையில் சுமார் 45 சதவிதம் பங்கை தன் கையில் வைத்துள்ளது. இந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதி ஆண்டில் 1.17 மில்லியன் கார்களை மாருதி நிறுவனம் விற்றுள்ளது. இந்த எண்ணிகையை வரும் 2020 ஆண்டுக்குள் 2 மில்லியனாக உயர்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் மாருதி சுசுகி நிறுவனம் மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
0 out of 0 found this helpful