மாருதி சுசூகி நிறுவனம், 15 மில்லியன் வாகனங்களைத் தயார் செய்து இந்தியாவின் முதல் வாகன நிறுவனமாக விளங்குகிறது
modified on மே 27, 2015 04:14 pm by raunak
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
இப்போது மாருதி 2020ஆம் ஆண்டுக்குள் ஒரு வருடத்திற்கு தலா 2 மில்லியன் வாகனங்கள் விற்கும் நோக்கம் மற்றும் இதற்கு அது எதிர்காலத்தில் பல்வேறு பிரிவுகளில் புதிய வாகனங்கள் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது!
ஜெய்ப்பூர்: நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளர் - மாருதி சுசுகி இன்று அவர்களுடைய 15வது மில்லியன் காரை தயாரித்தது என்று அறிவித்துள்ளது. அதை செய்த நாட்டின் முதல் கார்த்தயாரிக்கும் நிருவனமாகும்! 15வது மில்லியன் கார் மாருதி சுசுகி ஸ்விஃப்ட் டிசையர் VDI (chassis எண் MA3FJEB1S00740865) இந்நிறுவனத்தின் மனேசார் உற்பத்தி வசதியிலிருந்து வெளிவந்தது.
வரலாற்றை திருப்பிப் பார்க்கும்போது, 1983 டிசம்பர் மாதம் உற்பத்தி ஆலையில் இருந்து வெளிவந்த முதல் கார் மாருதி 800. நிறுவனம் 31 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்களில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, மார்ச் 1994-ல் அவர்கள் 1 மில்லியன் மைல்கல்லை எட்டினர், ஏப்ரல் 2005 - 5 மில்லியன், மார்ச் 2011 - 10 மில்லியன் மற்றும் மே 2015 - 15 மில்லியன்.
திரு ராஜீவ் காந்தி, நிர்வாக இயக்குனர், உற்பத்தி, மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் கூறியதாவது, "மாருதி சுசுகியின் பயணதில் கெய்சன் மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றமும் ஒன்றாக இருந்து வருகிறது. அடிமட்டத்தில் உள்ள நமது தொழிலார்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மேலும் சிறப்பாக வழங்க முடியும் என்று மகத்தான பங்களிப்பு செய்ய, மற்றும் அவர்களின் தேவைகள் மற்றும் அபிலாஷைகளை நிறைவேற்ற தங்களது பங்கை அளிக்கிறார்கள்”
அவர் கூறினார்: "நிச்சயமாக, நம் திறன் மற்றும் உந்துதளுடைய மக்கள் உதவியுடன் தரமான தயாரிப்புகள் மூலம், 20 மில்லியன் இலக்கை எட்டிப் பிடிக்க வேண்டும்".
டாப் மாடல் | ஒட்டுமொத்த உற்பத்தி (மில்லியன் கார்கள்) |
ஆல்டோ ( உட்பட கே 10 ) | 3.1 |
மாருதி 800 | 2.9 |
ஆம்னி | 1.7 |
வேகன்-ஆர் | 1.6 |
ஸ்விஃப்ட் | 1.3 |
டிசையர் | 1.0 |
0 out of 0 found this helpful