வேகன்ஆர் ஏவன்ஸ் என்ற லிமிடேட் பதிப்பை மாருதி அறிமுகம் செய்கிறது
published on செப் 11, 2015 11:50 am by konark for மாருதி வேகன் ஆர் 2013-2022
- 12 Views
- ஒரு கருத்தை எழுதுக
மும்பை: பண்டிகை காலம் நெருங்கிவிட்ட நிலையில், வேகன்ஆர் காரின் 3 மாத காலத்திற்கான ஒரு லிமிடேட் பதிப்பை, வேகன்ஆர் ஏவன்ஸ் என்ற பெயரில் ரூ.4,29,944 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயத்தில், மாருதி நிறுவனம் அறிமுகம் செய்கிறது.
ஏவன்ஸ் பதிப்பில், ப்ளூடூத் உடன் கூடிய 2-டின் ஸ்டீரியோ, டயல் டோன் டேஸ்போர்டு, பழுப்பு இன்செட்கள் மற்றும் பின்புற சீட் பவர் விண்டோ போன்ற புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. வெளிப்புற அமைப்பில், புதிய பாடி கிராஃபிக்ஸ், கன்மெட்டல் நிறத்திலான ரூப்-ரெயில்ஸ், கீலெஸ் என்ட்ரி உடன் கூடிய ரேர் ஸ்பாய்லர் மற்றும் சென்ட்ரல் லாக்கிங் / செக்யூரிட்டி ஆலாரம் ஆகியவற்றை கொண்டுள்ளது.
இது குறித்து மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் மார்க்கெட்டிங் துறையின் தலைவர் திரு.வினய் பந்த் கூறுகையில், “இந்த பண்டிகை காலத்தை கொண்டாடும் வகையில், பெரும்திரளான திறன்மிகுந்த புதிய அம்சங்களுடன் கூடிய வேகன்ஆர் ஏவன்ஸை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். வேகன்ஆர் ஏவன்ஸ் என்பது ஸ்டைல் மற்றும் திறன்மிகுந்த தன்மையின் ஒரு கூட்டு கலவை ஆகும். இந்த புதிய அம்சங்கள், அதை இன்னும் திறன்மிகுந்ததாக மாற்றி உள்ளது. எங்கள் பிராண்ட்டின் வளர்ச்சிக்கு, இது உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறோம்” என்றார்.
சூப்பிரியர் வைட், கிளிஸ்டனிங் க்ரே மற்றும் சில்க்கி சில்வர் ஆகிய 3 நிற தேர்வுகளில் வேகன்ஆர் ஏவன்ஸ் கிடைக்கிறது. வேகன்ஆர் ஏவன்ஸின் பேஸ் LXi பெட்ரோல் வகை கார் ரூ.4,29,944 லட்சம் மற்றும் LXi CNG வகை கார் ரூ.4,83,973 லட்சம் என எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வேகன்ஆர் தொடக்கத்தில் இருந்தே சிறப்பான விற்பனையை பெற்று, இதுவரை 1.5 மில்லியன் யூனிட்களுக்கும் அதிகமாக விற்பனையாகி, கடந்த 5 ஆண்டுகளாக நம் நாட்டில் அதிகமாக விற்பனையாகும் முதல் 5 வாகனங்களில் ஒன்றாக திகழ்கிறது.