சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

குளோபல் மார்கெட்டுக்கான Suzuki e Vitara கார் அறிமுகம்

மாருதி இ vitara க்காக நவ 05, 2024 04:47 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

சுஸூகி இ விட்டாரா -வில் 49 kWh மற்றும் 61 kWh என்ற இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 550 கி.மீ வரையிலான ரேஞ்சை இது கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • மாருதியின் முதல் ஆல் எலக்ட்ரிக் காராக சுஸூகி இ விட்டாரா உள்ளது.

  • வெளிப்புறத்தில் லைட்டிங் எலமென்ட்கள் மற்றும் பிளாக் கலர் சக்கரங்களுடன் மிரட்டலான வடிவமைப்பை பார்க்க முடிகிறது.

  • ஃபுளோட்டிங் இன்டெகிரேட்டட் ஸ்கிரீன் செட்டப் உடன் டூயல்-டோன் டாஷ்போர்டு கொடுக்கப்பட்டுள்ளது.

  • 2-வீல் டிரைவ் (2WD) மற்றும் AWD பதிப்பு என இரண்டு ஆப்ஷன் -களிலும் கிடைக்கிறது.

  • 2025 -ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

  • விலை ரூ.22 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இ விட்டாரா என அழைக்கப்படும் மாருதி eVX கான்செப்ட் -ன் தயாரிப்பு-ஸ்பெக் பதிப்பு காரை இத்தாலி நாட்டின் மிலன் நகரத்தில் சுஸூகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சர்வதேச மார்கெட்டில் இது சுஸூகி இ விட்டாரா என அழைக்கப்படும். இந்த ஆல் எலக்ட்ரிக் எஸ்யூவி 2025 -ம் ஆண்டு இந்தியாவில் வெளியிடப்பட உள்ளது. இந்த EV பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்களும் இங்கே உள்ளன. இது எங்கள் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள மாருதி சுஸூகியின் முதல் EV ஆகும்.

வடிவமைப்பு மற்றும் அளவுகள்

சுஸூகி இ விட்டாரா வடிவமைப்பை பார்க்கையில் அடிப்படையில் eVX கான்செப்ட் போலவே உள்ளது. இது ஸ்லீக்கரான எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் ஒய்-வடிவ எல்இடி டிஆர்எல் -களும் உள்ளன. பெரிய பம்பரில் ஃபாக் லைட்ஸ் கொடுக்கப்பட்டுள்ளன. பக்கவாட்டில் பார்க்கும் போது தடிமனான பாடி கிளாடிங் மற்றும் 19-இன்ச் பிளாக்-அவுட் அலாய் வீல்கள் (AWD பதிப்பிற்கு மட்டுமே) ஆகியவை காரணமாக இ விட்டாரா முரட்டுத்தனமாக தோற்றமளிக்கிறது. பின்புற டோர் ஹேண்டில்கல் சி-பில்லரில் கொடுக்கப்பட்டுள்ளன.

பின்புறத்தை பொறுத்தவரையில் இ விட்டாரா ஆனது அதன் கான்செப்ட் பதிப்பில் பார்த்ததைப் போலவே, 3-பீஸ் லைட்டிங் எலமென்ட்களுடன் கனெக்டட் LED டெயில் லைட்களை கொண்டுள்ளது. இ விட்டாரா 4 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் 180 மி.மீ கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளது.

நீளம்

4,275 மி.மீ

அகலம்

1,800 மி.மீ

உயரம்

1,635 மி.மீ

வீல்பேஸ்

2700 மி.மீ

கிரவுண்ட் கிளியரன்ஸ்

180 மி.மீ

மேலும் பார்க்க: காஸ்மெட்டிக் அப்டேட்கள் மற்றும் புதிய வசதிகளுடன் Citroen Aircross Xplorer எடிஷன் வெளியிடப்பட்டுள்ளது

பட்டு போன்ற இன்ட்டீரியர்

இ விட்டாரா -வில் டூயல்-டோன் பிளாக் மற்றும் ஆரஞ்சு கேபின் தீம் உள்ளது. இதில் 2-ஸ்போக் பிளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல் மற்றும் குரோம் கலர் உடன் வெர்டிகல் ஏசி வென்ட்கள் உள்ளன. கேபினுக்குள் இருக்கும் முக்கிய ஹைலைட்களில் ஒன்று அதன் இன்டெகிரேட்டட் ஃபுளோட்டிங் ஸ்கிரீன் செட்டப் ஆகும் (ஒன்று இன்ஃபோடெயின்மென்ட்டுக்காகவும் மற்றொன்று டிரைவர்ஸ் டிஸ்பிளேக்காகவும்).

இ விட்டாரா காரில் உள்ள விரிவான வசதிகளின் பட்டியலை சுஸுகி இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும் இது ஆட்டோமெட்டிக் ஏசி, வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் போன்ற வசதிகளுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவை உள்ளன.

பேட்டரி பேக் ஆப்ஷன்கள்

ஐரோப்பிய-ஸ்பெக் இ விட்டாரா 2 பேட்டரி பேக் தேர்வுகளுடன் வருகிறது: 49 kWh மற்றும் 61 kWh. விரிவான விவரங்கள் இங்கே:

பேட்டரி பேக்

49 kWh

61 kWh

பவர்

144 PS

174 PS

184 PS

டார்க்

189 Nm

189 Nm

300 Nm

டிரைவ் டைப்

2-வீல் டிரைவ் (2WD)

2-வீல் டிரைவ் (2WD)

ஆல்-வீல் டிரைவ் (AWD)

இ விட்டாரா -வுக்கான கிளைம்டு ரேஞ்ச் விவரங்களை சுஸூகி இன்னும் வெளியிடவில்லை. 550 கி.மீ வரை ரேஞ்ச் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

எதிர்பார்க்கப்படும் இந்திய வெளியீடு மற்றும் விலை

மாருதி சுஸூகி இ விட்டாரா 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ. 22 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் எதிர்பார்க்கப்படுகிறது. இ விட்டரா ஆனது MG ZS EV, டாடா கர்வ்வ் EV, மற்றும் வரவிருக்கும் ஹூண்டாய் கிரெட்டா EV போன்ற கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

Share via

Write your Comment on Maruti e vitara

explore மேலும் on மாருதி இ vitara

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை