• English
  • Login / Register

மாருதி எர்டிகா 2015 – ஒரு முழுமையான சிறப்பு கண்ணோட்டம்

published on அக்டோபர் 08, 2015 02:18 pm by manish for மாருதி எர்டிகா 2015-2022

  • 11 Views
  • ஒரு கருத்தை எழுதுக

மாருதி நிறுவனம், தற்போது சந்தையில் உள்ள எர்டிகா காரில் சிறப்பான மேம்பாடுகளைச் செய்து, புதுப்பிக்கப்பட்ட 2015 எர்டிகா MPV காரை வெளியிட முழுமையாக ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறது. இந்த புதிய காரை, அக்டோபர் மாதம் 10 –ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த கார், முழுமையாக மாற்றி அமைக்கப்பட்ட முகப்பு பகுதியுடன் வெளிவரும். மாருதி நிறுவனத்தின் MPV வகை கார்களுள் எர்டிகா கார், மக்களின் மத்தியில் நன்மதிப்பை பெற்று, அறிமுக நாளிலிருந்து பிரபலமாக இருந்து வருகிறது. மூன்று வருடத்திற்கு முன், 2012 -ஆம் வருடத்தில் முதல் முதலாக எர்டிகா MPV வெளியான போது, இரண்டு மாதத்திற்குள் கணிசமான எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்டது. கடுமையான போட்டி நிலவும் இத்தருணத்தில், தற்போது வெளிவரவுள்ள மாடல், அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் பலவிதமான ஆக்கபூர்வமான உபகரணங்கள் பொருத்தப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

தோற்ற அமைப்பு

புதிய எர்டிகாவில், அழகிய குரோமிய வேலைப்பாடுகள் மிகுந்து காணப்படுகிறது. இதில் முக்கியமாக, இதன் முன்புற கிரில் பட்டையான குரோமியத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது, புதிய வித்தியாசமான வடிவத்தில் உள்ள முன்புற முட்டுத்தாங்கியில் (பம்பர்) பொருத்தப்பட்ட பனி விளக்குகளும், குரோமிய வேலைப்பாடு செய்யப்பட்ட அமைப்புக்குள் உள்ளன. பின்புறத்தில் பார்க்கும் போது, பின்விளக்குகள் நளினமாக பூட்டின் மூடி வரை நீட்டிக்கப்பட்டு, அங்குள்ள வசீகரமான குரோமிய தகடில் பொரிக்கப்பட்ட எர்டிகா சின்னத்துடன் இணைந்து, இந்த காரின் பின்புறத்தை இணையற்ற அழகில் மிளிரச் செய்கிறது.

கவர்ச்சிகரமான சிறப்பம்ஸங்கள்

2015 மாருதி எர்டிகாவின் அடிப்படை மாடலில், விசை திருப்பி (பவர் ஸ்டியரிங்), சிறிதே சாய்ந்த ஓட்டுச் சக்கரம் (டில்ட் ஸ்டியரிங்), ஆளியக்க (மனுயல்) குளிர்சாதன அமைப்பு, ஓட்டுனர் அருகில் பாதுகாப்பு காற்றுப் பை மற்றும் இருக்கை பெல்ட் அணியாமல் இருந்தால் நினைவு படுத்தும் ஒலிப்பான் (பஸ்ஸர்) போன்றவை இடம்பெறுகின்றன. 2015 எர்டிகாவின் உயர்தர வரிசையில் அனைத்து விதமான அம்ஸங்களும் முழுமையான முறையில் பொருத்தப்பட்டுள்ளன. இதில் உள்ள அம்சங்கள் அனைத்தும் அடிப்படை மற்றும் இடைப்பட்ட மாடல்களிலும் இடம்பெறுகின்றன, ஆனால் உயர்தர வகையில் உள்ளதைப் போல விரிவானதாக இருக்காது.

அனைத்து விதமான மாடல்களிலும் பொருத்தப்பட்டுள்ள, வாடிக்கையாளர்கள் விரும்பும் கண்கவர் அம்சங்கள் என்று பார்க்கும் போது, பாதுகாப்பு அம்சங்களான ப்ரிடென்சனர், ஃபோர்ஸ் லிமிடர்; EBD –யுடன் வரும் ABS; புளு டூத், USB, AUX மற்றும் CD  வசதிகளுடன் வரும் ஆடியோ அமைப்பு; ORVM –ம்முடன் ஒருங்கிணைந்த திரும்பும் போது எரியும் விளக்கு; குரோமிய கிரில்; மின் சக்தியால் மாற்றவும் மடக்கவும் வல்ல ORVM; சாவி இல்லாமல் உள்ளே செல்லும் அமைப்பு; பின்புறமும் பொருத்தப்பட்ட குளிர் சாதன அமைப்பு; பின்புறத்தில் சென்று நிறுத்த உதவும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்; முன்புறம் மற்றும் பின்புறமும் பொருத்தப்பட்ட விசை மூலம் இயங்கும் ஜன்னல் கண்ணாடிகள்; பாதிப் பாதியாக பிரிக்கவல்ல மூன்றாவது வரிசை இருக்கைகள்; மற்றும் இரண்டாவது வரிசையில் உள்ள பவர் சாக்கெட் ஆகியவற்றை குறிப்பிடலாம்.

மேலும், புதிய வடிவத்தில் உள்ள அலாய் சக்கரங்கள்; ஓட்டுனர் இருக்கையின் உயரத்தை மாற்றி அமைக்கும் வசதி; ஒட்டுச்சக்கரத்தில் (ஸ்டியரிங் வீல்) அமைக்கப்பட்ட ஆடியோ அமைப்பை கட்டுப்படுத்தும் வசதி; பின்புறம் சென்று நிறுத்த உதவும் காமிரா; ஸ்மார்ட்பிளே தொடுதிரை பொழுதுப்போக்கு சாதனம்; தண்ணீரையும் பனியையும் துடைக்க பின்புறத்தில் பொருத்தப்பட்ட வைப்பர் மற்றும் டிஃபாகர் கருவிகள்; மற்றும் இஞ்ஜினை இயக்க ஸ்மார்ட் கீ பட்டன் ஆகியவை, உயர்தர மாடல்களில் வரும் தனிச்சிறப்பான அம்ஸங்களாகும்.

இஞ்ஜின் செயல்திறன்

மேம்படுத்தப்பட்ட் 2015 எர்ட்டிகவின் செயல்திறனை ஆராயும்போது, டீசல் மாடல்களில் பொருத்தப்பட்டுள்ள மாருதியின் பிரத்தியேகமான SHVS (ஸ்மார்ட் ஹைபிரிட் வேகிக்கில் பை சுசூக்கி) தொழில்நுட்பத்தைத் தவிர, வேறு சிறப்பான புதிய அம்சங்கள் எதுவும் இணைக்கப்படவில்லை. இந்த தொழில்நுட்பம், முதல் முதலில் மாருதியின் சியாஸ் சேடனில் அறிமுகமானது. இது தவிர, புதிய எர்ட்டிகாவின் V ரக கார், 4 வேக தானியங்கி ட்ரான்ஸ்மிஷன் மற்றும் 5 வேக அளியக்க ட்ரான்ஸ்மிஷன் போன்ற சிறிய மேம்பாடுகளைப் பெற்று வரும்.

was this article helpful ?

Write your Comment on Maruti எர்டிகா 2015-2022

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எம்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • M ஜி M9
    M ஜி M9
    Rs.70 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • க்யா கேர்ஸ் ev
    க்யா கேர்ஸ் ev
    Rs.16 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஏப், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ரெனால்ட் டிரிபர் 2025
    ரெனால்ட் டிரிபர் 2025
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜூன, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience