Maruti e Vitara: மாருதியின் புதிய காரில் எவற்றையெல்லாம் எதிர்பார்க்கலாம்
published on டிசம்பர் 24, 2024 07:27 pm by yashein for மாருதி இ vitara
- 26 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதிய மாருதி இ விட்டாரா காரின் விலை சுமார் ரூ. 20 லட்சத்தில் இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஹூண்டாய் கிரெட்டா EV உடன் போட்டியிடும்.
இந்தியாவை பொறுத்தவரையில் மாருதி பல ஆண்டுகளாக சந்தையில் முன்னிலையில் உள்ளது. மேலும் அதனிடம் பல்வேறு வகையான கார்கள் மற்றும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை கொண்டிருந்தாலும் கூட எலக்ட்ரிக் கார் பிரிவில் முன்னிலையில் இல்லை. இப்போது அதை மாற்றியமைக்கும் வகையில் விட்டாரா இவி -யை மாருதி நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இப்போது விட்டாரா இவி -யின் டீஸரும் வெளியாகியுள்ளது. ஜனவரி 17 மற்றும் 22 -க்கு இடையில் நடைபெறும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் புதிய இ விட்டாரா அறிமுககம் செய்யப்படவுள்ளது.
இப்போது மாருதியின் வரவிருக்கும் எலெக்ட்ரிக் எஸ்யூவி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்களோடு வெளிப்புறம், உட்புறம், பவர்டிரெயின், வசதிகள் மற்றும் விலை நிர்ணயம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவர் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை இங்கே பார்க்கலாம்.
முரட்டுத்தனமான வடிவமைப்பு
மாருதி வெளியிட்ட இ விட்டாராவின் முதல் டீஸர் ஆனது Y வடிவ LED DRL -களுடன் எலக்ட்ரிக் எஸ்யூவியின் முன்பகுதியை காட்டியது. லைட்டிங் எலமென்ட்களை தவிர சமீபத்தில் உலகளவில் வெளியிடப்பட்ட சுஸூகி இ விட்டாரா ஆனது பம்பரின் கீழ் பகுதியில் பிளாக் கலர்டு பெரிய பம்பர் மற்றும் ஃபாக் லேம்ப்களை கொண்டிருந்தது. இந்தியா-ஸ்பெக் பதிப்பின் ஒட்டுமொத்த வடிவமைப்பு எலமென்ட்கள் உலகளாவிய மாடலை போலவே இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
பக்கவாட்டில் இது 18-இன்ச் பிளாக்-அவுட் அலாய் வீல்கள் (AWD உடன் 19-இன்ச்) பெறும் என்று எதிர்பார்க்கலாம். மேலும் ஏராளமான பாடி கிளாடிங் மேக்கோ தோற்றத்தைக் கொடுக்கும். பின்புற டோர் ஹேண்டில்கள் சி-பில்லர் மீது கொடுக்கப்பட்டிருப்பதால் காருக்கு ஒரு நவீன தோற்றத்தை அளிக்கிறது.
பின்புறம் கனெக்டட் எல்இடி டெயில் லைட்ஸ், ஷார்க் ஃபின் ஆண்டெனா மற்றும் கூரையில் பொருத்தப்பட்ட ஸ்பாய்லர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
பிரீமியம் வசதிகளுடன் கூடிய அதிநவீன உட்புறம்
குளோபல்-ஸ்பெக் பதிப்பில் காணப்படுவது போல் உட்புறம் டூயல்-டோன் தீம் மற்றும் டூயல் ஸ்கிரீன் செட்டப்பை கொண்டிருக்கும் (ஒன்று இன்ஃபோடெயின்மென்ட்டுக்காக மற்றொன்று டிரைவர்ஸ் டிஸ்பிளேவுக்காக). கேபினில் ஸ்போர்ட்டி தோற்றமுடைய 2-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் மற்றும் குரோம் ஆக்ஸெண்ட்களுடன் கூடிய வெர்டிகல் ஏசி வென்ட்கள் உள்ளன.
இது ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், ஹெட்-அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் கனெக்டட் கார் டெக்னாலஜி போன்ற வசதிகளுடன் வரும் என்று எதிர்பார்க்கலாம்.
பாதுகாப்புக்காக இது 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா, முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஆட்டோ ஹோல்ட் மற்றும் லெவல்-2 ADAS கொண்ட எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் போன்ற வசதிகள் உடன் வரலாம். இந்தியா-ஸ்பெக் பதிப்பு ADAS உடன் வருமானால் மேம்பட்ட மற்றும் பிரீமியம் பாதுகாப்பு வசதிகளுடன் வரும் முதல் மாருதி காராக இது இருக்கும்.
எலக்ட்ரிக் மோட்டார் விவரங்கள்
இதன் உலகளாவிய பதிப்பில் கிடைக்கும் அதே பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் e விட்டாராவின் இந்தியா-ஸ்பெக் பதிப்பை மாருதி வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
பேட்டரி |
49 kWh |
61 kWh |
|
டிரைவ்டிரெய்ன் |
2WD |
2WD |
4WD |
பவர் |
144 PS |
174 PS |
249 PS |
டார்க் |
189 Nm |
189 Nm |
300 Nm |
சரியான கிளைம்டு ரேஞ்ச் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் இது 600 கி.மீ தூரம் வரை ரேஞ்ச் உடன் வரும் என எதிர்பார்க்கிறோம்.
போட்டியாளர்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் விலை
மாருதி இ விட்டாரா காரின் விலை சுமார் ரூ.20 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டாடா கர்வ்வ் EV, மஹிந்திரா பிஇ 6, MG ZS EV மற்றும் வரவிருக்கும் ஹூண்டாய் கிரெட்டா E ஆகியவற்றுடன் போட்டியிடும்.
0 out of 0 found this helpful