• login / register

மஹிந்த்ராவின் TUV  300: இதுவரை சேகரித்த செய்திகள்

modified on sep 01, 2015 12:13 pm by raunak

  • 3 பார்வைகள்
  • ஒரு கருத்தை எழுதுக

இந்தியர்களுக்கு, கச்சிதமான க்ராஸ் ஓவர் – SUV  கார் வகையின் மேல் உள்ள மோகம் அதிகரித்து கொண்டே வருகிறது. ஆதலால் மஹிந்த்ரா நிறுவனம் இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு தனது TUV  300 மாடலுடன் இரண்டாவது சுற்றுக்குத்  தயாராகி வருகிறது. TUV  300 மாடல், சந்தையில் மிக பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. மக்களும், அதன் விலையை அறிய மிகவும் ஆவலாக காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

இந்திய நாட்டின் மிக பெரிய பயன்பாட்டு வாகன உற்பத்தியாளரான மஹேந்திரா நிறுவனம், தற்போது பிரபலமாகிக் கொண்டிருக்கும் 4 மீட்டருக்கு உள்ளடங்கிய SUV  வகை பிரிவினில் நுழைவதை கண்டு, மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதில் ஆச்சர்யமில்லை. 4 மீட்டருக்கு உள்ளடங்கிய க்ராஸ் ஓவர் SUV  வகை பிரிவு வடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த வகை பிரிவில் முதல் முதலில் அடி எடுத்து வைத்தது ஃபோர்ட்டின் எக்கோ ஸ்போர்ட் கார்.

TUV 300 -க்கு முன், ஜைலோவைப் போலவே வடிவமைக்கப்பட்டதால், மஹேந்திரா குவான்டோ மாடல் தோல்வியுற்றது. எனவே, இந்த 4 மீட்டருக்கு உள்ளடங்கிய க்ராஸ் ஓவர் -SUV  வகை பிரிவினில், வரும் மாதங்களில் புதிதாக வரவுள்ள மாருதி சுசூக்கியின் YBA  மாடல் மற்றும் டாடாவின் நெக்ஸான் மாடல்களுடன் மஹேந்த்ராவின் TUV 300, துரிதமாகவும் கடுமையாகவும் போட்டியிட தயாராகிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் நிச்சயமாக அறியலாம்.

இதற்கிடையில், TUV  300 மாடலை பற்றி நாம் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

இதன் பெயர் – TUV  300

மஹிந்திரா நிறுவனம், XUV  500 -ஐ உச்சரிப்பது போலவே, இதன் பெயரை  TUV 3 டபுள் 0 என உச்சரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. TUV  300 பெயரில் உள்ள T  என்பது ‘டஃப்’ (TOUGH) என்பதை குறிக்கும் என்றும் ‘300’ என்பது அதன் வரிசையை குறிக்கும் என்றும் விளக்கம் அளித்துள்ளது.

பின்னின்ஃபாரினா இருந்து பெற்ற உள்ளீடுகள் கொண்டு இந்தியாவில் வடிவமைக்கப்பட்டது

சென்னையில் உள்ள மஹேந்திரா ஆராய்ச்சி கூடத்தில் (மஹேந்திரா ரிசர்ச் வேலி MRV), பின்னின்ஃபாரினா இருந்து பெற்ற உள்ளீடுகள் கொண்டு, TUV  300 மாடல் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா TUV 3OO மாடலின் ஒட்டுமொத்த வடிவமைப்பும், போர் டாங்கியின் வடிவத்தை ஒத்து உருவாக்கப்பட்டது என்று மஹேந்திரா நிறுவனம் பெருமிதத்துடன் கூறியது. பின் புறத்தில் பொருத்தப்பட்ட உபரி சக்கரத்துடன் கூடிய இதன் பெட்டி போன்ற கம்பீர வடிவமும் அதையே பறைசாற்றுகிறது. மேலும், இதன் வடிவத்தை தவிர இதன் தொழில்நுட்பமும் (பிளாட்பார்ம்) கூட புதுமையாக இருக்கிறது என மஹேந்திரா கூறுகிறது.

புதிய இரட்டை வண்ண கருப்பு-பழுப்பு உட்புற முன்அறை

சமீபத்தில்,  மஹிந்திரா TUV  300 மாடலின் உட்புற அமைப்பின் அறிமுக காட்சி படத்தை வெளியிட்டது. புத்தம் புதிய பன்முக செயல்பாட்டு ஓட்டு சக்கரம் (மல்டி ஃபங்சனல் ஸ்டியரிங் வீல்), கவர்ச்சியான குரோமிய கம்பி வளையத்துடன் கூடிய இரண்டு கருவிகளை இணைத்த கருவிமய சாதனம் (டுயல்-பாட் இன்ஸ்ட்ரூமெண்டேஷன் க்லஸ்டர்) ஆகியவற்றை இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளதை, இந்த படத்தில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது. இதன் உட்புறம், பழுப்பு மற்றும் கருப்பு வண்ணத்தில் குரோமிய மற்றும் வெள்ளி நிற வேலைப்பாடுகளுடன் அழகுபடுத்தப்பட்டுள்ளது.

இஞ்ஜின் - mHawk80

இந்த mHawk80 இஞ்ஜின் பற்றிய விவரங்கள் மற்றும் சிறப்பம்ஸங்கள் இன்னும் வெளியாகவில்லை. எனினும், இது குவாண்டோவில் உள்ள 1.5 லிட்டர் 3 சிலிண்டர் பொருத்திய மோட்டாரைப் போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது 4 மீட்டருக்கு உள்ளடங்கிய வாகனமாதலால், இதன் இஞ்ஜினின் கொள்ளளவு 1.5 லிட்டருக்கு குறைவாக இருக்க முடியாது.

இதன் வர்க்கத்திலேயே முதன் முதலாக 235/65 R17 104 H ரேடியல் டயர்

மஹிந்த்ரா முதன் முதலில் வெளியிட்ட TUV 300 மாடலின் அறிமுக காட்சி படங்களின் மூலம், இதன் வர்க்கத்திலேயே முதன் முதலாக 17 அங்குல ரேடியல் டயர் TUV 300 –இல் பொருத்தப்பட்டுள்ளதை தெரிந்து கொள்ள முடிகிறது. 235/65 குறுக்கு பிரிவுகளைக் கொண்ட, R  17 ரேடியல் டயருடன் கூடிய 5 இரட்டை ஸ்போக் அலாய் சக்கரங்களின் மேல் கம்பீரமாக, இந்த வாகனம் உலா வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

  • New Car Insurance - Save Upto 75%* - Simple. Instant. Hassle Free - (InsuranceDekho.com)
  • Sell Car - Free Home Inspection @ CarDekho Gaadi Store
வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Mahindra TUV 3OO

Read Full News
×
உங்கள் நகரம் எது?