சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

மஹிந்திரா நிறுவனத்தின் TUV 300 ரூ. 7.14 லட்சத்திற்கு சென்னையில் அறிமுகமானது.

bala subramaniam ஆல் செப் 14, 2015 09:53 am அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

சென்னை: மஹிந்திரா நிறுவனத்தின் TUV 300 SUV வாகனம் செப்டம்பர் 10 ஆம் தேதி தேசிய அளவில் அறிமுகம் செய்யப்பட்ட பின் செப்டம்பர் 11 ஆம் தேதி ரூ. 7.14 லட்சம் எக்ஸ் ஷோரூம் விலையில் சென்னையில் அறிமுகமானது. . கச்சிதமான SUV பிரிவில் காலூன்ற இந்த TUV 300 வாகனத்தின் மூலம் மஹிந்திரா நிறுவனம் மேற்கொள்ளும் இரண்டாவது முயற்சியாகும். மஹிந்திரா வின் முந்தைய இதே கச்சிதமான SUV பிரிவு வெளியீடான குவாண்டோ கார்கள் எதிர் பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த முறை வெளியிடப்பட்டுள்ள TUV 300 ஒரு முழுமையான SUV ( மஹிந்திரா கூற்று படி ) என்றும் வேகமாக வளர்ந்து வரும் இந்த பயன்பாட்டு வாகனப் பிரிவில் ஒரு வித்தியாசமான அனுபவத்தை இந்த வாகனங்கள் தரும் என்றும் இந்நிறுவனம் கூறுகிறது. முற்றிலும் புதிய தொழில்நுட்ப அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த TUV 300 வாகனம் இந்த பிரிவு வாகனங்களிலேயே அதிக இட வசதி கொண்டதாகவும் , நல்ல செயல்திறன் மற்றும் மஹிந்திரா தயாரிப்புக்களின் அத்தனை சிறப்பம்சங்களும் கொண்டவையாக வும் இருக்கும் என்று சொல்லலாம்.

TUV 300 1.5 லிட்டர் இரண்டு நிலை டர்போ சார்ஜர் கொண்ட எம்ஹாக் என்ஜின் மூலம் சக்தியூட்டப்படுகிறது. இந்த என்ஜின் 84 hp என்ற அளவிலான சக்தியை உற்பத்தி செய்து இந்த பிரிவு வாகனங்களிலேயே அதிகமான 230 nm என்ற அளவிலான முடுக்கு விசையை வெளிப்படுத்துகிறது. . அதுமட்டுமின்றி இந்த கச்சிதமான SUV பிரிவிலேயே முதல் முறையாக 5 – வேக AMT கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டு TUV 300 வெளியாகியுள்ளது..கைகலாளியக்கி மாற்றக்கூடிய 5 - வேக கியர் அமைப்பும் தேவைக்கு ஏற்ப கிடைக்கிறது.



இந்த முறை உட்புற வடிவமைப்பையும் மஹிந்திரா நிறுவனம் மிகுந்த கவனத்துடன் விலை உயர்ந்த பிரிமியம் கார்களுக்கு இணையாக படு நேர்த்தியாக வடிவமைத்துள்ளது. . பிரபல இத்தாலிய வடிவமைப்பு நிறுவனமான பிநின்பரினா உடன் கூட்டாக இணைந்து அவர்கள் உதவியுடன் கண்கவர் வண்ணம் உட்புறத்தை அலங்கரித்துள்ளது.

பாதுகாப்பு அம்சங்களிலும் எந்த விதமான சமரசமும் செய்துக் கொள்ளாமல் EBD உடன் கூடிய காற்றுப்பைகள் மற்றும் ABS அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளது. கால் வைக்கும் இடவசதி (பூட் ஸ்பேஸ்) 384 லிட்டர் என்ற அளவிலும் அதுவே இரண்டாம் வரிசை இருக்கைகளை மடித்து விட்டால் 720 லிட்டர் என்ற அளவுக்கு அதிகப்படுத்திக் கொள்ளும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. ( ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த வசதி விலை கூடுதலான டாப் - எண்ட் மாடல்களில் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது ) . இவைகளைத் தவிர நிலையாக / திருப்பக்கூடிய முகப்பு விளக்குகள் (ஹெட் லேம்ப்) , வாகனத்தை பின் புறமாக நகர்த்தி பார்கிங் செய்ய உதவும் இன்டெலிபார்க் ரிவர்ஸ் அசிஸ்ட் வசதி , ஸ்டீரிங் உடன் இணைக்கப்பட்டுள்ள போன் மற்றும் ஆடியோவை இயக்குவதற்கான பொத்தான்கள் , குரல் மூலம் தகவல் அனுப்பும் வாய்ஸ் மெசேஜிங் சிஸ்டம் , மைக்ரோ ஹைப்ரிட் தொழில்நுட்பம் மற்றும் ப்ளுசென்ஸ் மொபைல் ஆப் ஆகிய சிறப்பம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

Share via

Write your Comment on Mahindra TUV 3OO

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
பேஸ்லிப்ட்
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
Rs.18.90 - 26.90 லட்சம்*
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
Rs.21.90 - 30.50 லட்சம்*
Rs.9 - 17.80 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.11.82 - 16.55 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை