சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

மஹிந்திரா TUV300 AMT வேரியன்ட் வாகனங்கள் ECU அப்டேட் செய்வதற்காக திருப்பி அழைக்கப்பட்டன .

published on பிப்ரவரி 01, 2016 02:37 pm by nabeel for மஹிந்திரா டியூவி 3ஓஓ 2015-2019

மஹிந்திரா சர்வீஸ் சென்டர் ஒன்றின் மூலம் கிடைத்த உறுதியான தகவலின் படி ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் வசதி கொண்ட TUV 300 வாகனங்களை மஹிந்திரா திரும்ப அழைத்துள்ளது. எந்த விதமான அறிவிப்பும் இன்றி காதும் காதும் வைத்தாற்போல டீலர்கள் நேரடியாக TUV 300 வாகன உரிமையாளர்களை தொடர்பு கொண்டு வாகனங்களை சரி செய்ய கொண்டு வருமாறு தெரிவித்துள்ளனர். கார் உரிமையாளர்களின் கூற்றுப்படி , கியர் மாற்றும் போது வாகனம் சற்று அதிர்வதாகவும் , கியர் மாற்றுவதற்கு முன் என்ஜின் தானாக 4000 rpm அளவுக்கு வேகமாக இரைவதாகவும் சொல்கின்றனர். அதே போல் க்ரீப் பங்க்ஷன் ( ப்ரேக் போட்டுவிட்டு காலை ப்ரேக் பெடல் மீது இருந்து எடுத்த பின்பும் , ஒரு அங்குலம் கூட வாகனம் நகராமல் இருக்கும் தொழில்நுட்பம் ) பிரேக் போட்ட 30 நொடிகளுக்கு பின்பு தான் இயங்கத் தொடங்குவதும் ஒரு குறைபாடாக இந்த காரின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த குறைகளை சரி செய்ய ECU மென்பொருள் அப்டேட் செய்யப்பட வேண்டும் என்பதால் வாகனத்தை திரும்ப பெற்று இலவசமாக அந்த அப்டேடை மஹிந்திரா நிறுவனம் செய்கிறது.

84bhp அளவுக்கு சக்தி மற்றும் அதிகபட்சமாக 230Nm அளவுக்கு டார்க் ஆகியவைகளை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் 3 -சிலிண்டர் mHawk80 டீசல் என்ஜின் இந்த SUV வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்களான முன்புற ஏயர் பேகுகள் (காற்று பைகள் ) EBD யுடன் கூடிய ABS ஆகிய அம்சங்கள் அனைத்து வேரியன்ட்களிலும் (அடிப்படை T4 மாடல் நீங்கலாக ) இணைக்கப்பட்டுள்ளது. அதிநவீன இன்போடைன்மென்ட் அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது. ப்ளுடூத் வசதியுடன் கூடிய 2 – DIN ஆடியோ சிஸ்டம் USB மற்றும் AUX கனக்டிவிடி ஆகியவை இந்த இன்போடைன்மென்ட் அமைப்பில் உள்ளது. ECO மோட் அனைத்து வேரியன்ட்களிலும் கொடுக்கப்பட்டிருந்தாலும் மைக்ரோ ஹைப்ரிட் டெக்னாலஜி T8 வேரியன்ட்களில் மட்டும் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

TUV 300 SUVயின் ஆட்டோமேடிக் வேரியன்ட் அறிமுகம் ஆன நாளில் இருந்தே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நவம்பர் 2015, மஹிந்திரா மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கூறியிருந்தபடி , புக்கிங் ஆன மொத்த TUV 300 வாகனங்களில் 50% சதவிகிதத்திற்கு மேல் ஆட்டோமேடிக் வசதி கொண்ட வேரியன்ட் வாகனங்கள் தான் புக்கிங் செய்யப்பட்டிருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆடோமேடிக் வேரியன்ட்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பைப் பார்த்து தனது பிரபலமான SUV வாகனமான XUV 500 வாகனத்திலும் ஒரு ஆட்டோமேடிக் வேரியன்ட் ஒன்றை மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்தது. அறிமுகமான 2 மாதங்களுக்குள் TUV 300 வாகனங்கள் 12,000 யூனிட்கள் இதுவரை புக்கிங் ஆகி உள்ளன. இதன் காரணமாக புக்கிங் செய்து விட்டு டெலிவரிக்காக காத்திருக்கும் காலம் அதிகரித்துள்ளது. இதை ஈடுகட்டும் வகையில் உற்பத்தி திறனும் உயர்த்தப்பட்டு மாதம் 5,000 யூனிட்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஏற்றுமதி தொடங்கும் வரை இது நீடிக்கும் என்றும் தெரியவருகிறது.

மேலும் வாசிக்க டெல்லியில் மஹிந்திரா XUV500 மற்றும் ஸ்கார்பியோ ஆகியவை 1.9L mஹாக் என்ஜின்களை பெறுகின்றன

n
வெளியிட்டவர்

nabeel

  • 15 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது மஹிந்திரா TUV 300 2015-2019

Read Full News

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
பேஸ்லிப்ட்
Rs.67.65 - 71.65 லட்சம்*
Rs.11.39 - 12.49 லட்சம்*
Rs.20.69 - 32.27 லட்சம்*
Rs.13.99 - 21.95 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை