மஹிந்திரா தனது TUV 300 எஸ்யூவி வாகனத்தை இன்று அறிமுகம் செய்கிறது !
manish ஆல் செப் 09, 2015 07:25 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- 19 Views
- ஒரு கருத்தை எழுதுக
மஹிந்திரா நிறுவனம் தனது TUV 300 எஸ்யூவி ரக வாகனத்தை நாளை அறிமுகம் சியா ஆயத்தமாக உள்ளது. இந்தவாகனம் மிக வித்தியாசமான விளம்பர உத்திகளுடன் முதலில் வெளி வந்தது. அதன் மூலம் தன மீது இருந்த ஒரு எதிர்பார்ப்பை தியாகம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. TUV 300 வாகனம் விளம்பர படத்துக்கான படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்டு கொண்டிருந்த காட்சிகள் இணையதளங்களில் கசிந்த போதிலும் இந்த வாகனத்தை பற்றிய உற்சாகம் குறையாமல் இருந்தது என்றே சொல்ல வேண்டும். TUV 300 மாருதி எஸ் - கிராஸ் , போர்ட் ஈகோஸ்போர்ட் மற்றும் டஸ்டர் வாகனங்களுக்கு போட்டியாக களத்தில் இறங்கியுள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் புனேவில் உள்ள சக்கன் தொழிற்சாலையில் இந்த வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன.
TUV 300 6.50 லட்சம் - ரூ.8.50 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) விலைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. 80bhp என்ற அளவிலான சக்தியையும், 230Nm என்ற அளவிலான உந்து விசையையும் வெளிபடுத்தவல்ல 1.5 லிட்டர் mஹாக்80 ரக என்ஜின் பொருத்தப்பட்டு வெளிவந்துள்ளது. இந்த என்ஜின் 5 – வேக, கைகளால் இயக்கக் கூடிய (மேனுவல்) கியர் அமைப்பு மற்றும் AMT ட்ரேன்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளது. AMT தொழில்நுட்பம் சற்று விலை அதிகம் உள்ள டாப் - எண்டு மாடல்களில் மட்டுமே வழங்கப்படும் என்று அறியப்படுகிறது.
இதைத் தவிர இந்த வாகனம் 2 - டின் மியூசிக் சிஸ்டம் மற்றும் பெரிய தொடுதிரை இந்போடைன்மென்ட் இணைக்கப்பெற்றுள்ளது. தொடர்பை (கனெக்ட்டிவிடி) மேம்படுத்தும் விதத்தில் ப்ளூடூத், USB ம்அற்றும் ஆக்ஸ் -இன் வசதிகளும் பொருத்தப்பட்டுள்ளதையும் பார்க்க முடிகிறது. இவைகளை தவிர கூடுதல் சிறப்பம்சங்களாக பவர் விண்டோஸ் மற்றும் பல்கோணல் அமைப்பினாளன க்ளஸ்டர் உடன் கூடிய LCD டிஸ்ப்ளே மத்திய கன்சோல் அமைப்பு காணப்படுகிறது.