வரும் வாரங்களில் மஹிந்திரா பினின்பாரினா நிறுவனத்தை கையகப்படுத்தி கொள்ள உள்ளது
published on நவ 16, 2015 05:06 pm by manish
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர் :
வரும் வாரங்களில் இத்தாலிய நாட்டு வடிவமைப்பு நிறுவனமான பிநின்பாரினா நிறுவனத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. பெராரி மற்றும் இன்னும் பிற ப்ரீமியம் கார் ப்ரேன்ட்களுடன் இணைந்து பணியாற்றயுள்ளது இந்த நிறுவனம். இந்த கையகப்படுத்துதல் நடவடிக்கையில் சில சிக்கல்கள் இருந்து இப்போது அது சரி செய்யப்பட்டு விட்டது . பினின்பரினா நிறுவன கணக்கை நிர்வகித்து வரும் வங்கி சில ஆட்சேபங்களை எழுப்பி இருந்தது. அதை கூட்டாக மஹிந்திரா , பின்கர் ( பினின்பரினா நிறுவன பங்குகளை அதிகம் வைத்திருக்கும் நிறுவனம் ) மற்றும் பினின்பரினா நிறுவனங்கள் இணைந்து கலந்து பேசி சுமூகமான முடிவை எடுத்தன.
வாகன உலகில் நல்ல பெயர் பெற்றிருந்தாலும் , பினின்பரினா நிறுவனம் கடந்த இரண்டு வருடங்களாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. ஜூன் 2015 வரையில் எடுக்கப்பட்ட கணக்கில் மொத்த இழப்பு 52.7 மில்லியன் யுரோ , அதாவது சுமார் 375 கோடியாக இருந்தது. உலகளவில் மிக அற்புத வடிவமைப்புடன் உருவாக்கப்பட்ட பல கார்களின் பின்னணியில் பினின்பரினா நிறுவனத்தின் வடிவமைப்பு திறமை மறைந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகை இல்லை. ஆல்பா ரோமியோஸ் , ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் இன்னும் பல பிரபல கார்களை அதற்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம். இன்னும் சொல்ல போனால் சமீபத்திய மஹிந்திரா நிறுவனத்தின் வெளியீடான TUV 300 வாகனத்தின் வடிவமைப்பிலும் பினின்பரினா நிறுவனத்தின் பங்களிப்பு பெரிய அளவில் இருந்தது என்பது என்பது குறிப்பிடத்தக்கது. கார் தயாரிப்பாளர்கள் கை தேர்ந்த வடிவமைப்பாளர்களை தங்கள் நிறுவனத்தில் நேரிடையாக பணி அமர்த்த தொடங்கி உள்ளதாலும், பினின்பரினா போன்ற நிறுவனங்களை வடிவமைப்புக்காக அணுகாததாலும் தான் இது போன்ற நிறுவனங்கள் நஷ்டம் அடைய தொடங்கி உள்ளன. மஹிந்திரா நிறுவனமும் பினின்பரினா நிறுவனத்தை கையகப்படுத்திய பின் நிச்சயம் தன் டிஸைன் தேவைகளுக்கு வெளி நிறுவனங்களிடம் செல்லாது என்று உறுதியாக சொல்லலாம். மேலும் இந்த நடவடிக்கை உலக அளவில் மஹிந்திரா நிறுவனத்தின் பெருமையை உயர்த்தும் என்பதும் உறுதி
இதையும் படியுங்கள்
0 out of 0 found this helpful