சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

சோதனை செய்யப்படும் போது படம் பிடிக்கப்பட்டுள்ள Mahindra Scorpio N பிக்அப்

mahindra global pik up க்காக பிப்ரவரி 10, 2025 10:12 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

ஸ்கார்பியோ N பிக்கப்பின் சோதனைக் கார் சிங்கிள் கேப் லேஅவுட்டில் சோதனை செய்யப்படும் போது படம் பிடிக்கப்பட்டுள்ளது.

  • ஸ்கார்பியோ N பிக்கப் அதன் வழக்கமான எதிரொலியில் காணப்படும் அதே ஹெட்லைட்கள், LED DRL -கள் மற்றும் அலாய் வீல்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

  • இது 2023 ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் குளோபல் பிக் அப் கான்செப்ட் ஆக உலகளவில் அறிமுகமானது.

  • ஸ்கார்பியோ N -ன் 2.2-லிட்டர் டீசல் இன்ஜினின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பைப் பயன்படுத்தக்கூடும்.

  • இந்தியாவில் அறிமுகம் உறுதிப்படுத்தப்பட்டால் இது 2026 ஆண்டுக்குள் ்வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

மஹிந்திரா ஸ்கார்பியோ N நாட்டின் மிகவும் பிரபலமான எஸ்யூவி -களில் ஒன்றாகும். அதன் மிரட்டலான தோற்றம், சக்திவாய்ந்த இன்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் திடமான தன்மைக்கு பெயர் பெற்றது. மஹிந்திரா ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவில் குளோபல் பிக் அப் எஸ்யூவி -யின் பிக்கப் டிரக் பதிப்பை ஒரு கான்செப்டாக காட்சிப்படுத்தியுள்ளது. ஸ்கார்பியோ N -ன் பிக்கப் டிரக் பதிப்பின் இறுதிப் பெயர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் சமீபத்தில் இமாச்சலப் பிரதேசத்தின் மணாலியில் ஒரு சோதனைக் கார் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே:

என்ன பார்க்க முடிந்தது?

ஸ்கார்பியோ N பிக்கப் டிரக்கின் சோதனை கார் சிங்கிள் கேப் செட்டப்பில் காணப்பட்டது. அதன் பின்னால் நீட்டிக்கப்பட்ட டிரக் ஃபுளோர் உள்ளது. சோதனைக் கார் முற்றிலுமாக உருவம் மறைக்கப்பட்டிருந்தாலும் கூட, ஹெட்லைட்கள் மற்றும் LED DRL -கள் வழக்கமான ஸ்கார்பியோ N -ல் காணப்படுவது போலவே இருப்பதை பார்க்க முடிந்தது. அலாய் வீல் அதன் வழக்கமான காரில் உள்ளதை போலவே உள்ளது.

தென்னாப்பிரிக்காவில் காட்சிப்படுத்தப்பட்ட குளோபல் பிக் அப் கான்செப்ட் ஆனது ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் முன்பக்கம் மாற்றியமைக்கப்பட்டிருந்தது. மேலும் ஸ்பைட் டெஸ்ட் மியூல் ஒரு கேப் அமைப்பில் காணப்பட்டது. அதே நேரத்தில் குளோபல் பிக் அப் கான்செப்ட் டூயல் கேப் அமைப்பில் காட்சிப்படுத்தப்பட்டது.

மேலும் பார்க்க: Skoda Kylaq மற்றும் Mahindra XUV 3XO: பாரத் NCAP கிராஷ் டெஸ்ட் முடிவுகள் ஒப்பீடு

எதிர்பார்க்கப்படும் வசதிகள்

எல்இடி DRL -களுடன் கூடிய LED ஹெட்லைட்கள், 8 இன்ச் டச்ஸ்கிரீன், ஆட்டோ ஏசி மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற வசதிகளுடன் ஸ்கார்பியோ N பிக்கப்பை மஹிந்திரா கொடுக்கலாம். இது ஒற்றை-பேன் சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் போன்ற வசதிகளும் கிடைக்கும். பாதுகாப்புக்காக பல ஏர்பேக்குகள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TOMS) மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவை அடங்கும்.

எதிர்பார்க்கப்படும் பவர்டிரெயின்கள்

ஸ்கார்பியோ N -ல் பயன்படுத்தப்பட்டுள்ள அதே 2.2-லிட்டர் டீசல் இன்ஜினே இதிலும் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிக்கப் டிரக்கில் 4 வீல் டிரைவ் (4WD) வழங்கப்படும். எடுத்துக்காட்டுக்கு ஸ்கார்பியோ N -ன் 2.2-லிட்டர் டீசல் இன்ஜின் 175 PS மற்றும் 400 Nm வரை அவுட்புட்டில் ட்யூன் செய்யப்பட்டிருக்கும். இது 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

மஹிந்திரா ஸ்கார்பியோ பிக்அப் டிரக்கின் அதிகாரப்பூர்வ வெளியீடு இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. என்றாலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் உறுதி செய்யப்பட்டால் 2026 ஆம் ஆண்டுக்குள் விற்பனைக்கு வரலாம். மஹிந்திரா இதன் விலை ரூ. 25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) ஆக இருக்கலாம். இந்தியாவில் இது இசுஸூ V-கிராஸ் மற்றும் டொயோட்டா ஹைலக்ஸ் -க்கு மாற்றாக இருக்கும்.

பட ஆதாரம்

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

Share via

Write your Comment on Mahindra global pik up

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் பிக்அப் டிரக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
பேஸ்லிப்ட்
Rs.9 - 17.80 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.11.82 - 16.55 லட்சம்*
எலக்ட்ரிக்
புதிய வேரியன்ட்
Rs.44.90 - 55.90 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை