மஹிந்த்ரா S101, KUV100 என்று பெயரிடப்படுமா?
S101 என்ற புனைப் பெயரில் அழைக்கப்படும் மஹிந்த்ராவின் அடுத்த வெளியீடான புதிய காம்பாக்ட் SUV காரின் அதிகாரபூர்வ பெயர் KUV 100 –ஆக இருக்கும் என்று தற்போது அனுமானிக்கப்பட்டுள்ளது. இந்திய கார் தயாரிப்பாளரான மஹிந்த்ரா நிறுவனம், தனது புதிய காருக்கு XUV 100 (முன்னதாக, இந்த பெயர் வைக்கப்படும் என்ற வதந்தி வந்தது) என்ற பெயரைச் சூட்டாமல், KUV 100 என்ற பெயரைத் தேர்ந்தெடுக்கும், ஏனென்றால், தனது XUV என்ற பிரபலமான பிராண்ட் முத்திரைப் பெயரை ஒரு சிறிய மற்றும் விலை குறைவான காருக்கு வைக்காது என்று Autocar India வலைத்தளம் யூகித்துள்ளது. மேலும், XUV 500 மாடலை பொதுவாக வெகுஜனங்கள் ‘XUV' என்றே அழைக்கின்றனர். எனவே, வாடிக்கையாளர்கள் வேறு எந்த காரையும் தனது XUV 500 காருடன் இணைத்து குழப்பி கொள்ளக் கூடாது என்பதில் மஹிந்த்ரா கவனமாக இருக்கிறது. புதிய காரைப் பற்றிய கூடுதல் விவரங்கள், அதிகாரபூர்வமாக 2015 டிசம்பர் 18 –ஆம் தேதி வெளியிடப்படும். இந்த கார் B செக்மெண்ட் க்ராஸ்ஓவர்/ SUV பிரிவு காராக இருக்கும் என்பதால், KUV 100 என்ற பெயரில், ‘K' என்ற எழுத்து ‘Kompact' என்னும் சொல்லைக் குறிப்பதற்காகவே, இந்த பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.
சமீபத்தில் நடந்த விளம்பர படப்பிடிப்பின் போது, மிகக் குறைந்த மறைப்பில் இருந்த இந்த காரை உளவாளிகள் பார்த்து விட்டனர். தோற்றத்தில், இது SUV கார்களைப் போல இல்லாமல், க்ராஸ்ஓவர் கார்களில் உள்ள ரூஃப் ரைல்ஸ், கிளாடிங்க் மற்றும் சரிவான பாடி லைன்கள் போன்ற அம்ஸங்களைக் கொண்டுள்ளது. செவ்ரோலெட் பீட் காரில் வருவதைப் போலவே, பின்புற கதவுகளுக்கான கைப்பிடிகள் பில்லரில் பொருத்தப்பட்டுள்ளன. பின்புற கதவுகளில் ஆரம்பித்து, நெளிந்து சென்று பின்புற தோற்றத்தில் முடிவடையும் பட்டையான பாடி லைன், இந்த காரை பக்கவாட்டில் பார்க்கும் போது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. அது மட்டுமல்ல, இந்த பாடி லைன் அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் உள்ளது. பின்புறம் பொருத்தப்பட்டுள்ள ராப் அரௌண்ட் டெய்ல் லைட் யூனிட் அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது. சீராக செதுக்கப்பட்டதைப் போன்ற வடிவத்தில் உள்ள பின்புற ஸ்பாய்லர் மற்றும் சில்வர் அலாய் சக்கரங்களையும் நாம் சிறப்பாம்ச பட்டியலில் குறிப்பிட்டாக வேண்டும். ஹுண்டாய் i10, செவ்ரோலெட் பீட் மற்றும் மாருதி சேலெரியோ போன்ற கார்களின் மேல் மக்களுக்கு உள்ள மோகத்தை தன் பக்கம் திருப்பும் விதத்தில், இந்த கார் களத்தில் இறங்கி போட்டியிடும். இது மஹிந்த்ராவின் முதல் க்ராஸ்ஓவர் காராக இருக்கும் பட்சத்தில், இதற்கான விலை, ரூ. 4 லட்சங்கள் என்று நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதாரம்: Autocar India
மேலும் வாசிக்க