எந்த வித திரைமறைவும் இல்லாமல் மும்பையில் இருந்த மஹிந்த்ரா S101: உளவாளிகளின் கண்களில் தென்பட்டது
published on டிசம்பர் 03, 2015 06:13 pm by manish
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
தற்காலிகமாக மஹிந்த்ரா S101 என்று பெயர் சூட்டப்பட்டுள்ள மஹிந்த்ராவின் ப்ரோடொடைப் கார், ஒரு விளம்பரப் படப்பிடிப்பின் போது உளவாளிகளின் கண்களில் தென்பட்டது. எந்த வித திரை மறைவும் இல்லாமல், இந்த கார் படப்பிட்ப்பு இயந்திரங்களை சுமந்து கொண்டு மும்பை தெருக்களில் சுற்றித் திரிந்த போது, கவனிக்கப்பட்டது. இந்திய வாகன வலைப்பூ (ப்லாக்) வாசகரான ‘rjrohra’ என்பவரால் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள அனுமானங்களின் படி, அடுத்த வருட ஜனவரி மாதத்தின் மூன்றாவது வாரத்தில், இந்த கார் அறிமுகப்படுத்தப்ப்டும் என்று தெரிகிறது.
அறிமுகப்படுத்தும் வேளையில், அனேகமாக இந்த காருக்கு ‘மஹிந்த்ரா XUV 100’ என்ற பெயர் சூட்டப்படலாம். மஹிந்த்ரா S101, க்ராஸ் ஓவர் கார்களைப் போல தோற்றமளிக்கிறது, எனவே, மாருதி வேகன் R, டாடா ஜிக்கா மற்றும் செவி பீட் போன்ற கார்களுக்குப் போட்டியாக இருக்கும். அமெரிக்க ஹாட்ச் பேக் கார்களைப் போல, S 101 காரின் பின்புற கதவின் கைப்பிடி, காரின் C பில்லரில் பொருத்தப்பட்டுள்ளது.
ஸ்டைலாக தோற்றமளிக்கும் இந்த காரில், மேலும் சில கவனிக்கத்தக்க சிறப்பம்ஸங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அவை, ரூஃப் ரைல்ஸ், அலாய் சக்கரங்கள், பின்புறத்தில் மாறுபட்ட சில்வர் வண்ணம், பின்புற வைப்பர் மற்றும் வாஷர் ஆகியவை ஆகும். மஹிந்த்ரா நிறுவனம், தன் ஆலையிலேயே முதல் முதலாக தயாராகும் பெட்ரோல் இஞ்ஜினை, அடுத்து அறிமுகமாக உள்ள தனது S101 காரில் பொறுத்தப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. புதிய பெட்ரோல் இஞ்ஜின் வரிசை பட்டியலில் உள்ள 1.2 லிட்டர், 1.6 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் இஞ்ஜின்களுடன் இந்த புதிய இஞ்ஜினும் இணைந்திருக்கும் என்று மஹிந்த்ரா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. தற்போது வந்துள்ள விவரங்களின் படி, மஹிந்த்ராவின் கச்சிதமான SUV காரான TUV 300 –இல் உள்ள டீசல் இஞ்ஜின் S101 காரிலும் பொருத்தப்பட்டு வரும் என்று தெரிகிறது. மேலும், இந்த இஞ்ஜின்கள் 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் போன்ற ஆப்ஷன்களுடன் வரும் என்று இந்த விவரங்கள் தெரிவிக்கின்றன. S101 கார், மஹிந்த்ராவின் இரண்டாவது ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் காராகும்.
மேலும் வாசிக்க
புதிய அறிமுகங்கள் இப்போது பிரபலமாகின்றன: மஹிந்திரா XUV500 AT
0 out of 0 found this helpful