சென்னையில் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்ட மஹிந்திரா S101 உளவுப்படத்தில் சிக்கியது
published on அக்டோபர் 05, 2015 12:20 pm by manish
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
அடுத்து வரவிருக்கும் மஹிந்திரா S101-யின் சோதனை வாகனம், சென்னையில் உலா வந்த போது உளவுப்படத்தில் சிக்கியது. சோதனையில் ஓட்டத்தில் ஈடுபட்ட இந்த கார் மீது திரைசீலை சுற்றப்பட்டு மறைக்கப்பட்டிருந்தது. இதன் தோற்றத்தின் மூலம் இந்த கார், சில்வர் நிறத் திட்டத்தில் அமைந்துள்ளதை ஊகித்துக் கொள்ள முடியும். இந்த கார் வெளியிடப்படும் நிறங்களில், ஒருவேளை மேற்கூறிய நிறமும் ஒன்றாக இடம் பெறலாம். இந்த நிதியாண்டில் S101 காரை, மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தலாம் என்று தெரிகிறது. சப்-காம்பேக்ட் கிராஸ்ஓவரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த கார், TUV300-க்கு அடுத்தப்படியாக மஹிந்திரா நிறுவனம் வெளியிடும் இரண்டாவது மோனோகோயிக் அடிப்படையிலான தயாரிப்பாகும்.
அதிகம் கவனிக்கப்படாத நுட்பமான காரியங்களையும் சற்று ஆழ்ந்து பார்த்தால், சாங்யாங்-கின் ஒத்துழைப்பில் தயாரிக்கப்பட்ட புதிய 1.2-லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் mஹோக் 80 மூன்று-சிலிண்டர் 1.5-லிட்டர் டீசல் என்ஜின் ஆகியவை இந்த காரில் பொருத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃப்ரண்ட் வீல் டிரைவ் வசதி மட்டுமே கொண்ட இந்த காரின் என்ஜின்கள், 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது ஒரு ஆட்டோமேட்டேட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் பொருத்தப்பட்டிருக்கும்.
கடந்த முறை கிடைத்த உளவுப்படங்களில், தற்காலிகமாக பொருத்தப்பட்ட ஹெட்லெம்ப்களுடன் காணப்பட்ட S101 கார், தற்போதைய படங்களில் இந்த காருக்கென தயாரிப்பில் இறுதியாக தீர்க்கமானிக்கப்பட்ட ஹெட்லெம்ப்களை கொண்டு, உலா வந்ததை காண முடிந்தது. இந்த காருக்கு நேர்த்தியான கிரில் மற்றும் கிலாம்ஷேல் ஹூடு ஆகியவை சேர்ந்து தோற்ற பொலிவை அளிக்கின்றன. சிறுத்தைப் புலியின் உருவத்தை தழுவியதாக தயாரிக்கப்பட்ட XUV500 மற்றும் டேங் போர் வாகனத்தை தழுவியதாக தயாரிக்கப்பட்ட TUV 300 ஆகியவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக, இந்த வாகனத்தை மஹிந்திரா நிறுவனம் வடிவமைத்து காட்சிக்கு கொண்டு வந்துள்ளது.
சப்-காம்பேக்ட் பிரிவு மற்றும் புதியதாக உருவாக்கப்பட்ட பெட்ரோல் என்ஜின் ஆகியவற்றில் மஹிந்திரா நிறுவனத்தின் நிலைப்பாட்டை வலிமை மிகுந்ததாக மாற்ற இந்த கார் நிச்சயம் உதவும். மேலும் இந்த காரின் மூலம், தனது போட்டியாளர்களுக்கு எதிராக மஹிந்திரா நிறுவனத்தால் நிமிர்ந்த நிற்க முடியும்.
0 out of 0 found this helpful