சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

பிப்ரவரியில் மாத கார் விற்பனையில் ஹூண்டாயை முந்தியது மஹிந்திரா நிறுவனம்

shreyash ஆல் மார்ச் 04, 2025 07:45 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

ஸ்கோடா கடந்த மாதம் அதிகபட்சமான MoM (மாதம்-மாதம்) மற்றும் YoY (ஆண்டுக்கு ஆண்டு) வளர்ச்சியைப் பதிவு செய்தது.

2025 பிப்ரவரி மாதத்திற்கான விற்பனை விவரங்களில் எதிர்பார்த்தபடியே 1.6 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகி இந்த தரவரிசையில் மாருதி முதலிடத்தில் உள்ளது. மேலும் மஹிந்திரா நிறுவனம் ஹூண்டாயை முந்தி இரண்டாவது இடத்தை பிடித்தது. அதே நேரத்தில் ஸ்கோடா அதிக மாதாந்திர மற்றும் வருடாந்திர விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்தது. பிப்ரவரி மாதத்தில் ஒவ்வொரு நிறுவனங்கள் வாரியாக விற்பனை விவரங்களை இங்கே பார்க்கலாம்.

நிறுவனம்

பிப்ரவரி 2025

ஜனவரி 2025

MoM வளர்ச்சி%

பிப்ரவரி 2024

ஆண்டு வளர்ச்சி %

மாருதி சுஸூகி

1,60,791

1,73,599

-7.4

1,60,272

0.3

மஹிந்திரா

50,420

50,659

-0.5

42,401

18.9

ஹூண்டாய்

47,727

54,003

-11.6

50,201

-4.9

டாடா

46,437

48,075

-3.4

51,270

-9.4

டொயோட்டா

26,414

26,178

0.9

23,300

13.4

கியா

25,026

25,025

0

20,200

23.9

ஹோண்டா

5,616

6,103

-8

7,142

-21.4

ஸ்கோடா

5,583

4,133

35.1

2,254

147.7

எம்ஜி

4,002

4,455

-10.2

4,532

-11.7

ஃபோக்ஸ்வேகன்

3,110

3,344

-7

3,019

3

முக்கிய விவரங்கள்

  • மாருதி கடந்த பிப்ரவரி மாதம் 1.6 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது மஹிந்திரா, ஹூண்டாய் மற்றும் டாடாவின் ஒருங்கிணைந்த விற்பனையை விட அதிகம். இருப்பினும் மாருதி மாதாந்திர விற்பனையில் 7 சதவீதத்திற்கும் அதிகமாக இழப்பை சந்தித்தது.

  • கடந்த மாதம் மஹிந்திரா நிறுவனம் 50,000 மேற்பட்ட கார்களை விற்பனை செய்தது. அதன் காரணமாக இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்கள் பட்டியலில் ஹூண்டாயை முந்தி இரண்டாவது இடம் பிடித்தது. மாதந்தோறும் (MoM) தேவை சீராக இருந்தபோதிலும் மஹிந்திராவின் ஆண்டு விற்பனை கிட்டத்தட்ட 19 சதவீதம் அதிகரித்துள்ளது.

  • மாதாந்திர விற்பனையில் 6,000 யூனிட்டுகளுக்கு மேல் இழப்புடன் ஹூண்டாய் நிறுவனம் விற்பனை பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு சென்றது. அதன் ஆண்டு விற்பனையும் கிட்டத்தட்ட 5 சதவீதம் குறைந்துள்ளது.

  • மாதாந்திர மற்றும் ஆண்டு விற்பனை இரண்டிலும் எதிர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்த மற்றொரு நிறுவனமாக டாடா இருந்தது. பிப்ரவரியில் 46,000 கார்களை டாடா விற்பனை செய்தது.

  • டொயோட்டா பிப்ரவரி -யில் 26,000க்கும் அதிகமான கார்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த மாதம் கிட்டத்தட்ட 3,000 கார்களை விற்பனை செய்துள்ளது. டொயோட்டா மாதாந்திர (MoM) விற்பனையில் 1 சதவிகிதம் சிறிய வளர்ச்சியை பெற்றுள்ளது.

  • கியா நிறுவனம் பிப்ரவரி மற்றும் ஜனவரியில் கிட்டத்தட்ட சம எண்ணிக்கையிலான யூனிட்களை அனுப்பியதால் மாதாந்திர விற்பனை சீராக இருந்தது. இது ஆண்டுக்கு ஆண்டு விற்பனையில் 24 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.

  • ஆண்டு விற்பனையில் 21 சதவீதத்திற்கும் அதிகமான இழப்பை ஹோண்டா சந்தித்தது. ஹோண்டா நிறுவனம் பிப்ரவரியில் சுமார் 5,600 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இதன் மாதாந்திர விற்பனையும் 8 சதவீதம் குறைந்துள்ளது.

  • ஸ்கோடா நிறுவனம் அதிகபட்சமாக மாதாந்திர மற்றும் ஆண்டு விற்பனை வளர்ச்சியை எட்டியுள்ளது. அவை முறையே 35 சதவீதம் மற்றும் கிட்டத்தட்ட 148 சதவீதம் ஆக இருந்தது. ஸ்கோடா நிறுவனம் பிப்ரவரி 2025 -யில் சுமார் 5,500 கார்களை விற்பனை செய்தது.

  • எம்ஜி பிப்ரவரி -யில் 4,000 யூனிட்களை விற்பனை செய்தது. இது மாதாந்திர மற்றும் ஆண்டு விற்பனையில் முறையே 10 சதவீதம் மற்றும் கிட்டத்தட்ட 12 சதவீத இழப்பு ஆகும்.

  • ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் YOY விற்பனை 3 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன் மாதாந்திர விற்பனை 7 சதவீதம் குறைந்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் கடந்த மாதம் 3,000 யூனிட்டுகளை விற்பனை செய்தது.

ஆட்டோமோட்டிவ் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்வதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

Share via

Write your கருத்தை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
பேஸ்லிப்ட்
Rs.1.03 சிஆர்*
புதிய வேரியன்ட்
Rs.11.11 - 20.42 லட்சம்*
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
Rs.7 - 9.84 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.13.99 - 24.89 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை