மஹிந்திராவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்ட Mahindra Marazzo : காரின் தயாரிப்பு நிறுத்தப்பட்டதா?
published on ஜூலை 05, 2024 05:46 pm by samarth for மஹிந்திரா மராஸ்ஸோ
- 55 Views
- ஒரு கருத்தை எழுதுக
பிரபலமான டொயோட்டா இன்னோவாவிற்கு போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கார் 7-சீட்டர் மற்றும் 8-சீட்டர் அமைப்புகளில் வழங்கப்பட்டது.
-
மஹிந்திரா மராஸ்ஸோ 2018 ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
-
இதன் விற்பனை சமீபத்திய மாதங்களில் மிகவும் குறைந்தது. செப்டம்பர் 2023 முதல் 100-யூனிட் என்ற இலக்கைக் கூட இதனால் தாண்ட முடியவில்லை.
-
இந்த வாகனம் 7-சீட்டர் மற்றும் 8-சீட்டர் கொண்ட அமைப்புகளில் மூன்று வேரியன்ட்களில் வழங்கப்பட்டது.
-
இந்த MPV ஆனது 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் (123 PS/300 Nm) 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் பிரத்தியேகமாக இணைக்கப்பட்டது.
-
மராஸ்ஸோ காரின் விலை ரூ.14.59 லட்சத்தில் இருந்து ரூ.17 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) உள்ளது.
மஹிந்திரா தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து மஹிந்திரா மராஸ்ஸோவை நீக்கியுள்ளது. இது அதன் தயாரிப்பை நிறுத்துவதற்கான சமிக்ஞையாக கருதப்படுகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் மஹிந்திரா தனது வரிசையிலிருந்து அனைத்து MPV-களையும் படிப்படியாக நீக்கிவிட்டு இந்திய சந்தையில் எஸ்யூவிகளில் மட்டுமே தனது கவனத்தை செலுத்தப்போவதை போல தெரிகிறது. 2018 -ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மராஸ்ஸோ டீசல் இன்ஜின் ஆப்ஷனுடன் பிரத்தியேகமாக கிடைத்தது.
குறைந்த எண்ணிக்கையிலான விற்பனையின் தாக்கம்
கடந்த ஆண்டில், மஹிந்திரா தொடர்ந்து MPV -யின் விற்பனை இரட்டை இலக்கத்தில் மட்டுமே இருந்தது. செப்டம்பர் 2023-இல் அதன் அதிகபட்ச மாதாந்திர விற்பனை வெறும் 144 யூனிட்டுகளாக மட்டுமே இருந்தது. மராஸ்ஸோவின் குறைந்த அளவிலான அப்டேட்டுகள் மற்றும் இந்த காருக்கான தேவைகள் குறைந்ததே அதன் விற்பனை குறைவதற்கு காரணமாக இருக்கலாம்.
மஹிந்திரா மராஸ்ஸோ: ஒரு கண்ணோட்டம்
மஹிந்திராவின் MPV மூன்று வேரியன்ட்களில் வழங்கப்பட்டது மற்றும் 7 மற்றும் 8-சீட்டர் அமைப்புகளிலும் வழங்கியது. இது 123 PS மற்றும் 300 Nm டார்க்கை உருவாக்கும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜினைக் கொண்டிருந்தது. இது 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் பிரத்தியேகமாக இணைக்கப்பட்டது ஆகும்.
மேலும் படிக்க: Mahindra Scorpio N காரின் ஹையர்-ஸ்பெக் வேரியன்ட்கள் அதிக பிரீமியமான வசதிகளை பெறுகிறது
இது 4 ஸ்பீக்கர்கள் கொண்ட 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், உயரத்தை சரி செய்து கொள்ளக்கூடிய டிரைவர் சீட், ரியர் வென்ட்களுடன் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகிய வசதிகளை உள்ளடக்கியது. இதன் பாதுகாப்பு வசதிகளில் டூயல் ஏர்பேக்குகள், ஆல் வீல் டிஸ்க் பிரேக்குகள், ஐஎஸ்ஓஃபிக்ஸ் சீட் ஆங்கர்கள், ரியர் டிஃபோகர் மற்றும் கேமராவுடன் கூடிய ரியர் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை அடங்கும்.
இது மாருதி எர்டிகா, டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா மற்றும் கியா கேரன்ஸ் போன்ற MPV-களுடன் நேரடியாக போட்டியிட்டது. அதன் இறுதியாக விற்பனை செய்யப்பட்ட போது இதன் விலை ரூ. 14.59 லட்சம் முதல் ரூ. 17 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) இருந்தது.
சமீபத்திய லேட்டஸ்ட் ஆட்டோமோட்டிவ் அப்டேட்டுகளுக்கு கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்
மேலும் படிக்க: மஹிந்திரா மராஸ்ஸோ டீசல்