• English
  • Login / Register

மூடப்படாத நிலையில் மஹிந்திரா ஜீனியோ வேவுப் பார்க்கப்பட்டது

modified on டிசம்பர் 22, 2015 03:09 pm by manish

  • 13 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்ப்பூர்:

மஹிந்திரா ஜீனியோவின் மூடப்படாத நிலையில் அமைந்த தயாரிப்பு மாதிரி மாடலை, பெரும்பாலும் தெலுங்கானாவை ஒட்டிய ஏதோ ஒரு பகுதியில் வேவுப் பார்க்கப்பட்டுள்ளது. தற்போது வேவுப் பார்க்கப்பட்டுள்ள இது, அடுத்து வரவுள்ள புதுப்பிக்கப்பட்ட ஜீனியோ ஆகும். மேலும் இது மஹிந்திராவின் சைலோ MPV-ன் ஒரு பிக்-அப் பதிப்பாக இருக்கலாம். பெரும்பாலும் அடுத்து வரும் சில வாரங்களில் விற்பனைக்கு வரவுள்ள இந்த ஜீனியோ, ஒற்றை மற்றும் இரட்டை கேப் என்ற இரு வகைகளில் அளிக்கப்பட உள்ளது. நீல நிறத்திட்டத்தில் அமைந்த காரை படம் பிடித்துள்ள நிலையில், முன்பக்கம் முற்றிலும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு, ஒரு ஃபோர்டு F150 ரேப்டரை போல காட்சி அளிக்கிறது. ஜீனியோவில் சில்வர் பூச்சு கொண்ட ஒரு குறைந்த பயனை அளிக்கும் கிரில் காணப்படுகிறது. இதன் போனட்டில் துருத்தி கொண்டு நிற்கும் மஹிந்திரா லோகோவை தழுவியதாக ஒரு ஆர்ச் இடம் பெற்றுள்ளது. அதேபோல ஃபோக் லெம்ப் இணைப்புகளும், ஃபோக்லெம்ப் உறையிடுகளை தழுவியதாக கிரோம் அசென்ட்கள் உள்ளன.

தற்போதைய ஜீனியோவின் வகைகளில், சில்வர், வெள்ளை மற்றும் பிரவுன் ஆகிய 3 நிறத்திட்டங்களில் மட்டுமே வெளியிடப்பட்டு வரும் நிலையில், விற்பனை அதிகரிக்கும் வகையில், இந்த நீல நிறத்திட்டத்தின் புதிய சேர்ப்பு அமைந்துள்ளது. அதிகம் கவனிக்கப்படாத நுட்பமான விஷயங்களையும் சற்று ஆழ்ந்து பார்க்கும் போது, புதுப்பிக்கப்பட்ட ஜீனியோவில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் பழைய 2.5-லிட்டர் 4-சிலிண்டர் CRDe டீசல் என்ஜினையே அமையப் பெற்று, 75bhp ஆற்றலும், 220 Nm முடுக்குவிசையும் வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜீனியோவில் ஒரு மைக்ரோ-ஹைபிரிடு அவதாரத்தையும், மஹிந்திரா நிறுவனம் வெளியிட வாய்ப்புள்ளது. இதன்மூலம் இந்த காருக்கு ஒரு ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டத்தை பெறுவதோடு, எரிபொருள் சிக்கன அதிகரிப்பும் கிடைக்கும். இந்தியாவில் வெளியிடப்படும் ஜீனியோவில் ஒரு 2WD கன்ஃபிகரேஷனை மட்டுமே கொண்டிருக்கும். அதே நேரத்தில் ஏற்றுமதி சந்தைகளுக்கு AWD டிரைவ் டைப் அளிக்கப்படும். ஏற்றுமதி மாடல்களில் மஹிந்திராவின் 2.2-லிட்டர் mஹாக் டீசல் என்ஜின் மூலம் 120bhp ஆற்றலையும், 280 Nm அதிகபட்ச முடுக்குவிசையும் பெற முடிகிறது.

மேலும் வாசிக்க

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience