ஃபிராங்க்பர்ட்டில் இருந்து நேரடி தகவல்: புத்தம் புதிய BMW X1 மற்றும் 7 சீரிஸ் கார்கள் வெளியீடு
published on செப் 16, 2015 02:41 pm by manish for பிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020
- 16 Views
- ஒரு கருத்தை எழுதுக
அனைவரும் எதிர்பார்த்த 2016 BMW X1 காரை, இன்டர்நேஷனல் ஆட்டோமொபில் – ஆஸ்டெளங்க் என்ற ஃபிராங்க்பர்ட் மோட்டார் ஷோவில், இந்நிறுவனம் வெளியிட்டது. இந்த புதிய X1 காரின் வடிவம், X5 SUV -ஐ ஒத்ததாக இருப்பதால், ஸ்டேஷன் வேகான் ரக கார்களை போல உள்ளது. X1 முதல் தலைமுறை காரில் BMW நிறுவனம், வடிவமைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்காததால், பெரிய அளவு வெற்றி பெற முடியவில்லை. ஆனால், புதிய X1 காரின் அழகான தோற்ற மேம்பாடு, இந்நிறுவனம் இழந்த வாடிக்கையாளர்களைப் பெற்று, வெற்றியை மீண்டும் நிலை நிறுத்த ஒரு முக்கிய காரணியாக இருக்கும் என்று தெரிகிறது. BMW –வின் மினி கார்களின் வரிசையில் உள்ளதைப் போலவே, புதிய X1 காரிலும், முன் சக்கரங்கள் மட்டும் இயங்கும் UKL தொழில்நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது. X1 காரின் வெளிப்புறத்தின் சிறப்பம்ஸங்கள் என்று பார்க்கும்போது, இதன் கம்பீரமான முன்புற முட்டு தாங்கி (பம்பர்) மற்றும் LED முன்விளக்குகளுடன் வரும், ஒளிவட்ட வளையங்களைப் போல உள்ள, காலையிலும் எரியும் தரமான DRL விளக்குகள் பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும்.
கண்ணுக்குத் தெரியாத, X1 காரின் செயல்திறனை முடுக்கிவிடும் அம்ஸங்களைப் பார்க்கும் போது, இரண்டு வித விருப்பத் தெரிவுகளில் வரும், 2.0 லிட்டர் இன்லைன் 4 சிலிண்டர் பெட்ரோல் இஞ்ஜின் பற்றி குறிப்பிட வேண்டும். இதன் வகைகள், 189.4 bhp குதிரை திறன் மற்றும் 227.9 bhp குதிரை திறன்களை உற்பத்தி செய்கிறன. இதன் டீசல் வகை கார்கள், 2.0 லிட்டர் இன்லைன் 4 சிலிண்டர் டர்போ இஞ்ஜின் பொருத்தப்பட்டு வருகிறது. இது, 330 Nm, 400 Nm மற்றும் 450 Nm என்று 3 விதமான உந்து விசைகளைத் தருகிறது. BMW X1 -இன் அடிப்படை நிலை மாடல்களான X1 sட்ரைவ் 16d (1114.4 bhp குதிரை திறன்) மற்றும் X1 sட்ரைவ் 18i (134.2 bhp குதிரை திறன்) ஆகியவை, 2016 ஆம் ஆண்டில், இந்திய வாகன சந்தையை முற்றுகை இடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய X1 தவிர, ஃபிராங்க்பார்ட் மோட்டார் ஷோவில் புதிய 7 சீரிஸ் காரும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த காரில், BMW நிறுவனத்தின் அடையாளமான கிட்னி கிரில் மற்றும் கண்ணுக்கு தெரியும் வகையில் ஏர் பிளாப் கண்ட்ரோலும் பொருத்தப்பட்டுள்ளன. இதன் முன்புறம் மற்றும் பின்புறத்தில் உள்ள விளக்குகளில், LED பல்புகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் பக்கவாட்டு தோற்றத்தை பார்க்கும் போது, L வடிவத்தில் கிரோமிய கீற்று அழகாக காரின் முழுவதும் வேயப்பட்டு, இதன் வடிவத்தை மெருகூட்டுகிறது.
BMW –வின் புதிய 7 சீரிஸ் காரில், 4.4 லிட்டர் இரட்டை டர்போ V8 இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இஞ்ஜின், 750 i மாடலில் 445 bhp குதிரைத் திறனை உற்பத்தி செய்யும். மேலும், 3.0 லிட்டர் இரட்டை டர்போ V6 பெட்ரோல் இஞ்ஜின் மூலம், 740i மாடலில் 320 hp குதிரைத் திறனையும் மற்றும் 3.0 லிட்டர் இரட்டை டர்போ டீசல் இஞ்ஜின் மூலம் 730i மாடலில் 261 hp குதிரைத் திறனையும் உற்பத்தி செய்ய முடியும். இது தவிர, 740e மாடல் கலப்பின பிளக்-இன் மின் வாகனமாக வருகிறது. இந்த மாடல், 2.0 லிட்டர் இரட்டை டர்போ பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் மின்சார இயக்க கருவி (எலக்ட்ரிக் ட்ரைவ் யூனிட்) மூலம் செயல்திறனைப் பெற்று, இயக்கப்படுகிறது. அனைத்து விதமான மாடல்களும் 8 வேக ஸ்போர்ட் ஆட்டோமேடிக் ஸ்டெப்ட்ரோனிக் உட்செலுத்தியுடன் இணைக்கப்பட்டுள்ளன.
0 out of 0 found this helpful