மஹிந்திராவின் TUV 300 கார்: சிறப்பம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்
published on செப் 11, 2015 03:04 pm by manish
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
நேற்றைய பொழுதில் வெகு விமரிசையாக, TUV 300 கார் வாகன சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வருடத்திய, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கச்சிதமான SUV ரகங்களில் இந்த காரும் ஒன்றாகும். வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்திழுக்க, மிகவும் விரைவாக மக்களைச் சென்றடையும் விதத்தில் ஒரு விளம்பர பிரச்சாரத்தை மஹிந்த்ரா நிறுவனம் வெளியிட்டது. அது இனிதே வெற்றி பெற்று விட்டது என்பதை, TUV 300- இன் ஆரவார அறிமுகத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த காரின் விலை, புனே ஷோரூம் விலையாக ரூபாய் 6.9 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மஹிந்திராவின் தனிச் சிறப்பான mHawk 80 டீசல் இஞ்ஜின், இந்த கச்சிதமான SUV –இல் பொருத்தப்பட்டு, 2-நிலை டர்போ சார்ஜருடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுப்படியான விலையை வைத்து பரிசீலனை செய்யும்போது, இந்த காரின் அம்சங்கள் மற்றும் அமைப்புகள் அனைத்தும், அறிவிற்கு அப்பாற்பட்டதாக அற்புதமாக இருக்கிறது. எனினும், நாம் அதை இங்கே பரிசீலிப்போம்.
இஞ்ஜின் அமைப்பு
-
TUV 300 கார், BS4 1493 cc இஞ்ஜின் திறனை கொண்டுள்ளது. இதன் உச்ச ஆற்றலின் வெளிப்பாடாக, 84 bhp குதிரை திறனை 3750 rpm என்ற அளவிலும், 230 Nm உந்து சக்தியை 1500 – 2250 rpm என்ற அளவின் இடையிலும் உற்பத்தி செய்கிறது.
-
இதன் இஞ்ஜின் 5 வேக MT/AMT பல்லிணைப்பு பெட்டியுடன் (கியர் பாக்ஸ்) இணைக்கப்பட்டுள்ளது.
-
அடிப்படை ஆதாரமாக (அன்டர் பின்னிங்க்), இரட்டை விஷ்போன் ஃப்ரண்ட் சஸ்பென்ஷன் மற்றும் ஒரு உறுதியான ஆக்ஸில் மல்டி லிங்க் பின்புற சஸ்பென்ஷன் போன்றவை, இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காரின் திரும்பு ஆரம் (டர்னிங் ரேடியஸ்) 5.35 m அளவைப் பெற்று, வளைவுகளில் திருப்பும் போது அருமையாக காரை கட்டுப்படுத்தி நிர்வாகிக்க உதவுகிறது.
நவீன வடிவமைப்பு அம்சங்கள்
-
TUV 300 –இன் உருவ அமைப்பு, ஜீப் செரோகீயை நினைவு படுத்துகிறது. இதன் T8 மற்றும் T6 வகைகளின் முன்புற கிரில்லில் கிரோமிய வேலைப்பாடுகள் செருகி வைக்கப்பட்டுள்ளதைப் போல உள்ளன. எனினும், T8 வகையில் மட்டும் பிரத்தியேகமாக பனி விளக்குகளில் க்ரோமிய பூச்சு செய்யப்பட்டு, பளபளப்பாக மின்னுகின்றன.
-
பிரத்தியேகமான பனி விளக்கு அலங்காரத்தை போலவே, அலாய் சக்கரங்களும் TUV 300 –யின் T8 வகையில் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன.
-
T8 வகைகளுக்கு மட்டும் மாற்று சக்கரத்திற்கு அச்சில் வார்க்கப்பட்ட உறை பெட்டியும் (மொல்ட்டட் கேசிங்க்); மற்ற வகைகளில் வினைல் உறையும் தரப்படுகிறது.
-
இந்த காரின் T8 மற்றும் T8 AMT வகைகளில், க்ரோமிய வளையங்களுடன் வெள்ளி நிறத்தில் குளிர் சாதன துவாரங்களை கொண்ட, டிவின் பாட் கருவிகள் அமைப்பு முன்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது.
-
மற்றெந்த கச்சிதமான SUV –க்களிலும் இல்லாத வசதியான 7 இருக்கைகள் (5 + 2) TUV 300 –இல் பொருத்தப்பட்டுள்ளன.
தொழில்நுட்ப அம்சங்கள்
-
T8 வகையில், நிலையாக சாய்ந்திருக்கும் முன்புற விளக்குகள் மற்றும் பின்புறமாகவே சென்று காரை இலகுவாக நிறுத்த உதவும் இண்டெலிபார்க் வசதியும் பொருத்தப்பட்டுள்ளன.
-
TUV 300 –இல் காட்சி திரை, 2 – DIN ஒலி அமைப்பு மற்றும் புளு டூத் வசதியுடன் கூடிய இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பு; USB மற்றும் AUX இணைப்பு போன்ற அருமையான பொழுது போக்கு அம்சங்களை உட்புறத்தில் பொருத்தி, இந்நிறுவனம் பயணிகளை உற்சாகப்படுத்துகிறது.
-
TUV 300 –இன் அனைத்து வகைகளுக்கும் ECO முறை பொருத்தப்பட்டு எரிபொருள் சிக்கனம் மேம்படுத்தப்பட்டுள்ளது. எனினும், இந்த கார் 10 வினாடிகள் ஓடாமல் நின்றால் இஞ்ஜினை தானாக நிறுத்தக்கூடிய மைக்ரோ- ஹைபிரிட் தொழில்நுட்பம், T8 வகையில் மட்டுமே பொருத்தப்பட்டு, எரிபொருள் சிக்கன திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
-
T6 மற்றும் T8 வகைகள் மட்டுமே, மஹிந்த்ராவின் புளு சென்ஸ் மொபைல் பயன்பாடு மற்றும் குரல் செய்தி அமைப்புகளைக் (VMS) கொண்டுள்ளன.
பாதுகாப்பு அம்சங்கள்
-
TUV 300 –இன் அடிப்படை T4 மாடல் தவிர, அனைத்து வகைகளிலும் முன்புறத்தில் பாதுகாப்பு காற்று பைகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மாடல்களில் மின்னணு நிறுத்துவிசை பங்கீடு (EBD) கொண்ட பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பு (ABS) பொருத்தப்பட்டுள்ளது.
-
மேலும் பாதுகாப்பை மேம்படுத்த, கொலப்சிபில் ஸ்டியரிங் காலம்ன், பக்க வாட்டில் பொருத்தப்பட்ட இண்ட்ரூஷன் உத்திரங்கள், டிஜிட்டல் இம்மொபிலைசர், இருக்கை பெல்ட் போடுவதற்கு நினைவூட்டும் விளக்கு மற்றும் கார் ஓடிக்கொண்டிருக்கும் போது தானாக கதவுகளை மூடும் ஆட்டோ டோர் லாக் கருவி போன்றவை அனைத்து மாடல்களிலும் வருகின்றன.
-
T6 மற்றும் T8 வகைகளில் திருட்டை தடுக்க, திருட்டு எதிர்ப்பு எச்சரிக்கை அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.
-
அனைத்து வகைகளிலும் முக்கியமான உயர்தர பாதுகாப்பு அம்சங்களை பேதமில்லாமல் பொருத்தி இருப்பதன் மூலம், மஹிந்த்ரா நிறுவனம், பயணிகளின் பாதுகாப்புக்கு அதிகமாக முன்னுரிமை அளித்திருக்கிறது என்பதை உணர முடிகிறது.
0 out of 0 found this helpful