லேண்ட் ரோவரின் கடைசி டிஃபெண்டர் கார் வெளியிடப்பட்டது
modified on பிப்ரவரி 01, 2016 11:38 am by sumit for லேண்டு ரோவர் டிபென்டர்
- 114 Views
- ஒரு கருத்தை எழுதுக
மூன்று ஆண்டுகளுக்கு முன்பே, ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தனது டிஃபெண்டர் மாடலின் தயாரிப்பை நிறுத்தப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இங்கிலாந்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள சோலிஹல் என்ற இடத்தில் உள்ள தனது கார் தயாரிப்பு ஆலையில் நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த மாடலின் தயாரிப்பு வேலைகளை நிறுத்தப் போவதாக, 2013 -ஆம் ஆண்டு இந்நிறுவனம் அறிவித்தது. இப்போது, இந்த மாடலின் கடைசி யூனிட் தயாரிக்கப்பட்டு, உற்பத்தி ஆலையில் இருந்து வெளிவந்துவிட்டது. இனி எந்த ஒரு வாடிக்கையாளரும் புத்தம் புதிய டிஃபெண்டர் மாடல் காரை வாங்க முடியாது என்பது வருத்தம் தரக் கூடிய செய்தியானாலும், இந்த கார் தயாரிப்பாளர்கள் இதற்கு மாற்றாக வேறு ஒரு புதிய மாடலை உருவாக்கும் திட்டத்தில் இருப்பதாகக் கூறியுள்ளனர்.
தற்போதுள்ள மாசு மற்றும் பாதுகாப்பு தரக் கட்டுப்பாட்டு திட்டத்திற்குள் இருக்கும்படி, டிஃபெண்டரின் தரத்தை மேம்படுத்துவது மிகக் கடினம் என்று கண்டறியப்பட்டதால் இத்தகைய கடினமான முடிவை லேண்ட் ரோவர் எடுத்துள்ளது. மேலும், இந்த கார் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகாத காரணத்தாலும் இதன் தரத்தை லேண்ட் ரோவர் நிறுவனத்தால் பராமரிக்க முடியவில்லை என்பதும் மற்றொரு காரணமாகும். இந்த முடிவைப் பற்றி செய்திகள் தொகுப்பு நிறுவனத்திடம் விவரிக்கும் போது, “தற்போது, மக்கள் பாதுகாப்பான வாகனத்தையே விரும்புகின்றனர்; ஏர் பேக் கொண்ட வாகனத்தையே விரும்புகின்றனர்; குறைந்த எரிபொருள் புகையை வெளியிடும் வாகனத்தையே விரும்புகின்றனர். மேலும், இந்த வாகனம் விவசாயிகளுக்கானது,” என்று லேண்ட் ரோவர் நிறுவனத்தின் மாதாந்திர பத்திரிகையின் துணை ஆசிரியர் திரு. பேட்ரிக் க்ரேய்வேஜென் கூறினார். புகழ் பெற்ற 4x4 லேண்ட் ரோவர் மாடலின் 70 சதவிகித கார்கள் இன்னும் சாலைகளில் ஆர்ப்பரித்து சென்று கொண்டிருக்கிறது என்பதால், இதன் தீவிர ரசிகர்கள் இந்த அறிவிப்பால் பாதிப்படையவில்லை. தேவைப்படும் போது, ‘ஒரு செகண்ட் ஹேண்ட் டிஃபெண்டர் காரை சொந்தமாக்கி கொள்ளலாம்’ என்று நினைக்கின்றனரோ என்று நமக்கு தோன்றும் அளவிற்கு அவர்கள் போக்கு உள்ளது.
“தற்போது, கிட்டத்தட்ட 70 சதவிகித லேண்ட் ரோவர்கள் இன்னும் நல்ல நிலையில் சாலையில் ஓடிக் கொண்டிருக்கின்றன. எனவே, நாம் அதில் ஏறி சவாரி செய்யலாம் அல்லது செகண்ட் ஹேண்ட் லேண்ட் ரோவரை வாங்கிக் கொள்ளலாம். அனைவரையும் கவர்ந்த காரின் தயாரிப்பு நிறுத்தப்பட்டுவிட்டதை நினைத்து, நாம் அனைவரும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தாலும், தற்போது உள்ள ஏராளமான லேண்ட் ரோவர்களைப் பார்த்து, நாம் மனதைத் தேற்றிக் கொள்ளலாம்,” என்று மிகவும் பிரபலமான வாகனத்துறை பத்திரிக்கையாளர் திரு. க்வென்டின் வில்சன் கூறினார்.
1948 ஆண்டிற்கு பிறகு, ஜாகுவார் 2 மில்லியன் டிஃபெண்டர் கார்களை தயாரித்து வழங்கியுள்ளது. பிரபல ஹாலிவுட் படங்களான ‘ஸ்கைஃபால்’ மற்றும் ‘எட்ஜ் ஆஃப் டுமாரோ’ போன்றவற்றில், இந்த வாகனம் பிரதானமாகக் காட்சிப் படுத்தப்பட்டதால், உலகம் முழுவதும் பிரபலமானது. மேலும், 1952 –ஆம் வருடம் இங்கிலாந்து மகாராணி பட்டத்துக்கு வந்த பின்பு, எஸ்டேட் பகுதிகளில் உள்ள தனியார் ரோடுகளில் செல்வதற்கு இந்த வாகனத்தைப் பயன்படுத்தியதாலும், மேற்தட்டு மக்களின் மத்தியில் இது மிகவும் பிரபலமானது என்பதை மறுக்க முடியாது.
மேலும் வாசிக்க
0 out of 0 found this helpful