லாண்ட் ரோவரின் மேம்படுத்தப்பட்ட ரேஞ்ச் ரோவர் ஈவோக் நவம்பர் 19 –ஆம் தேதி அறிமுகம்
published on நவ 03, 2015 12:37 pm by raunak for லேண்டு ரோவர் ரேஞ்ச் rover evoque 2016-2020
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
டாட்டாவிற்கு சொந்தமான லாண்ட் ரோவர் நிறுவனம், மேம்படுத்தப்பட்ட ஈவோக் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இம்மாத 19 –ஆம் தேதி சந்தையில் அறிமுகப்படுத்தும். கடந்த மாதம் 20 –ஆம் தேதியில் இருந்து இந்த காருக்கான முன்பதிவு நடந்து கொண்டிருக்கிறது. நடப்பு ஆண்டில், லாண்ட் ரோவர் நிறுவனம் தனது ஈவோக் காரின் டீசல் மாடலை இந்தியாவிலேயே அசெம்பில் செய்தது. அது போலவே, புதிய மேம்படுத்தப்பட்ட டீசல் வெர்ஷனும் இங்கேயே அஸ்செம்பில் செய்யப்படும்.
லாண்ட் ரோவர் நிறுவனம், என்ன விதமான புதிய மாற்றங்களை இந்த புதிய ஈவோக் மாடலில் சேர்த்திருக்கிறது என்பதை விரிவாகப் பார்ப்போம். காரின் முன்பும் பின்பும் உள்ள பம்பர்களின் டிசைனில் மாற்றம் செய்துள்ளனர். இதன் கிரில்லும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. முன்புறத்தில் உள்ள விளக்குகளுக்கும் மாற்றம் வந்துள்ளது, அதாவது, முழுமையான LED விளக்குகள் பொருத்தப்பட்டு, காலையிலும் பிரகாசமாக எரியும் விளக்குகளைக் கொண்டு பளீரென எரிகின்றன. பின்புற விளக்குகளும் (டெய்ல் லைட்) LED -யினால் மட்டுமல்லாமல், புதிய கிராபிக் டிசைனாலும் மேம்படுத்தப்பட்டுள்ளன. இது தவிர, இந்த கார் புதிதாக வடிவமைக்கப்பட்ட அலாய் சக்கரங்களின் மேல் உலா வரும். மேம்படுத்தப்பட்ட புதிய ரேஞ்ச் ரோவர் ஈவோக் மாடலின் உள்ளே அமர்ந்து பயணித்தால், எவ்வளவு தூரம் பயணம் செய்தாலும் அலுப்பு தெரிய வாய்ப்பில்லை ஏனெனில், பயணிகளின் இனிய பயணத்திற்கு, இந்நிறுவனத்தின் பிரெத்தியேக 8 அங்குல டச் ஸ்கிரீன் இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பு உறுதுணையாக இருக்கும். காரில் செல்லும் போது பாட்டுக் கேட்கும் வாடிக்கையாளர்களுக்காக, அவர்களின் ரசனையை மதித்து, 17 ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்ட 825 வாட் மெரிடியன் சரௌண்ட் சவுண்ட் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. இவை தவிர, ஹெட்-அப் டிஸ்ப்ளே, சுற்றிலும் பொருத்தப்பட்ட காமிரா சிஸ்டம் மற்றும் கடைசி இருக்கைக்கென ரியர் சீட் எண்டர்டெயின்மெண்ட் ஆகியன பொருத்தப்பட்டுள்ளன.
தவறாமல் வாசியுங்கள்: மேம்படுத்தப்பட்ட ரேஞ்ச் ரோவர் ஈவோக்கின் முன்பதிவு ஆரம்பம்
உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் மாற்றங்கள் இருந்தாலும், இஞ்ஜினில் இந்நிறுவனம் எந்தவிதமான மாறுதலும் செய்யவில்லை. ஏனெனில், ஏற்கனவே இதில் உள்ள 2.2 லிட்டர் டீசல் இஞ்ஜின் தரமான 190 PS சக்தியையும், 420 Nm டார்க்கும் உற்பத்தி செய்கிறது. மேலும், 9 ஸ்பீட் ZF ட்ரான்ஸ்மிஷனுடன் இந்த இஞ்ஜின் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க: லாண்ட் ரோவெரின் ரேஞ்ச் ரோவர் ஈவோக் – நிபுணர் விமர்சனம்
மேலும் வாசித்து தெரிந்து கொள்ள: லாண்ட் ரோவரின் ரேஞ்ச் ரோவர் ஈவோக்
0 out of 0 found this helpful