லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம் அறிமுகமாக உள்ள தன்னுடைய டிஸ்கவரி ஸ்போர்ட் கார்களுக்கு 200 ருக்கும் கூடுதலான ஆர்டர்களைப் பெற்றுள்ளன.
published on ஆகஸ்ட் 17, 2015 10:12 am by raunak for லேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் 2015-2020
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
முன்பதிவு தொடங்கி இன்னும் ஒரு வாரம் கூட ஆகவில்லை!
ஜெய்பூர்: லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம் முன்பதிவு தொடங்கிய ஒரே வாரத்தில் தன்னுடைய எஸ்யூவி - 2015 டிஸ்கவரி ஸ்போர்ட் கார்களுக்கு 200 ஆர்டர்களை பெற்று விட்டது. அடுத்த மாதம் 2 ஆம் தேதி இந்த எஸ்யூவி அறிமுகமாக உள்ளது. இந்தியாவில் சிகேடி (CKD) வழியில் (அதாவது வெளிநாட்டில் முழுதும் தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்குள் தனி தனி உதிரி பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் உள்ள ஜாகுவார் - லேண்ட் - ரோவர் தொழிற்சாலையில் பாகங்கள் ஒன்றிணைக்கப்படும் ( அசம்ப்ளிங்) முறை ) இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வர உள்ளன. இந்த டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி மெர்சிடீஸ் பென்ஸ் எம் கிளாஸ், பிஎம்டபுள்யூ X3 , ஆடி Q5, வோல்வோ XC60 போன்ற வாகனங்கள் போட்டியிட தயாராக இருந்தாலும் அவைகளில் இருந்து சற்று வித்தியாசப்பட்டு 5+2 இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன.
ஜகுவார் லேண்ட் ரோவர் இந்தியாவின் தலைவர் திரு. ரோஹித் சூரி பின்வருமாறு கூறினார்.” எங்களது பன்முக திறமை வாய்ந்த படைப்பான டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி வாகனத்திற்கு எங்களது மேலான வாடிக்கையாளர்களிடம் இருந்து கிடைத்திருக்கும் இந்த மாபெரும் வரவேற்பை கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம். எங்களது பெருமைக்குரிய சின்னமான லேண்ட் ரோவருக்கு அவர்கள் அளித்திருக்கும் உற்சாகமான வரவேற்புக்கும், எங்கள் ப்ரேன்ட் மீதான அவர்களது நம்பிக்கைக்கும் நாங்கள் இந்த தருணத்தில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.”
இந்த வாகனம் 9 கியர் தானியங்கி கியர் அமைப்பு 2.2 லிட்டர் டீசல் என்ஜின் மூலம் சக்தியூட்டப்படுகிறது. இந்த 2,179 CC என்ஜின் 150 ps என்ற அளவுக்கு சக்தியையும் 1500 என்ற அளவுக்கு முறுக்கு விசையையும் உருவாக்கி 1750 rpm வரை வேகத்தில் வெளியிடுகிறது. இந்த எஸ்யூவி யை பொருத்தப்பட்டுள்ள மோட்டார் 0 – 100 கி.மீ வேகத்தை வெறும் 10.3 நொடிகளில் அடையச் செய்து பிரமிக்க வைக்கிறது. அதிக பட்ச வேகம் 180 கி.மீ ஆகும். தயாரிப்பாளரின் சான்றிதழ் படி லிட்டருக்கு 12.83 வரை மைலேஜ் தரும் என்று சொல்லப்பட்டுள்ளது. எரிபொருள் டேன்க் 65 லிட்டர் கொள்ளளவு கொண்டதாகவும் அமைக்கப்பெற்றுள்ளது.