கியா செல்டோஸ் அறிமுகப்படுத்தப்பட்டது! விலைகள் ரூ .9.69 லட்சத்தில் இருந்து ஆரம்பமாகின்றன
published on செப் 03, 2019 03:59 pm by sonny for க்யா Seltos 2019-2023
- 20 Views
- ஒரு கருத்தை எழுதுக
இறுதியாக அறிமுகமாகியுள்ளது கியா செல்டோஸ். இது இந்தியாவின் காம்பாக்ட் எஸ்யூவி பிரிவை புரட்டிப்போடத் தயாராக உள்ளது.
-
கியா செல்டோஸானது 8 வகைகள் ஆனால் அவற்றில் மொத்தம் 16 விருப்பத் தேர்வு வாய்ப்புகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
-
செல்டோஸ் HT லைன் ரகங்களின் விலை ரூ .9.69 லட்சம் முதல் ரூ. 15.99 லட்சம் வரை (எக்ஸ்ஷோரூம், இந்தியா) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-
செல்டோஸ் GT லைன் ரகங்கள் ரூ. 13.49 லட்சம் முதல் ரூ .1599 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம், இந்தியா) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-
BS6 என்ஜின்கள் மூன்று வகைகளில் கிடைக்கும்: 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் ரகங்கள் மற்றும் 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் ரகம்
-
அனைத்து என்ஜின்களும் 6-வேக மேனுவல் க்ளட்சுடன் இணைக்கப்பட்டுள்ளன. தவிர என்ஜின் வாரியாக, CVT(1.5-லிட்டர் பெட்ரோல்), 6-ஸ்பீடு AT (1.5-லிட்டர் டீசல்) மற்றும் 7-ஸ்பீடு DCT(1.4-லிட்டர் டர்போ-பெட்ரோல்) என்ஜிங்களுடன் தானியங்கு விருப்பத்தேர்வு இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது.
-
உட்பொதிக்கப்பட்ட ஈ. ஸிம்மைப் பயன்படுத்தி UVO இணைக்கப்பட்ட கார் அம்சங்களை கியா பெறுகிறது.
-
இந்தப் பிரிவில் முதன்முறையாக, 8 அங்குல HUD, ஸ்மார்ட் ஏர் சுத்திகரிப்பான் மற்றும் மறைவு நிலைப் பார்வை மானிட்டர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
-
ஹூண்டாய் கிரெட்டா, நிசான் கிக்ஸ், ரெனால்ட் கேப்டூர், டாடா ஹாரியர் மற்றும் எம்ஜி ஹெக்டர் போன்ற பிற போட்டி வாகனங்களை மிஞ்சி நிற்கிறது.
-
டர்போ-பெட்ரோல்-ஆட்டோ மற்றும் டீசல்-ஆட்டோவுடன் கூடிய டாப்-ஸ்பெக் ஜிடிஎக்ஸ் + வகை பின்னர் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதற்கான முன்பதிவுகள் தற்போது ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கியா செல்டோஸ் இறுதியாக இந்தியாவில் ரூ .9.69 லட்சம் முதல் ரூ .15.99 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம், பான் இந்தியா) விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மிக அதிகமான அம்சங்கள் நிரம்பியதோடு 8 வகைகள் அவற்றுள் 6 பவர் ட்ரெயின் தேர்வுகளுடன் கிடைகின்றது
செல்டோஸ் ரகங்களின் அறிமுக விலை விவரம் இங்கே:
தொழில்நுட்ப விவரம்
வகை |
பெட்ரோல் |
டீசல் |
HTE ஆர் |
ரூ. 9.69 லட்சம் |
ரூ. 9.99 லட்சம் |
ஹெச்.டி.கே |
ரூ. 9.99 லட்சம் |
ரூ. 11.19 லட்சம் |
HTK + |
ரூ. 11.19 லட்சம் |
ரூ. 12.19 லட்சம் / ரூ. 13.19 லட்சம் (ஏ.டி) |
HTX |
ரூ. 12.79 லட்சம் / ரூ 13.79 லட்சம் (சி.வி.டி) |
|
HTX + |
ரூ. 14.99 லட்சம் / ரூ. 15.99 லட்சம் (ஏ.டி) |
ஜிடி லைன்
வகை |
பெட்ரோல் |
டீசல் |
ஜி.டி.கே. |
ரூ. 13.49 லட்சம் |
|
ஜி.டி.எக்ஸ் |
ரூ.14.99 லட்சம் / ரூ 15.99 லட்சம் (டி.சி.டி) |
|
GTX+ |
ரூ 15.99 லட்சம் / பெட்ரோல் DCT |
டீசல் AT |
தானியங்கி வசதிகளுடைய GTX+ வகைகளின் விலைகளை கியா பின்னர் அறிவிக்கும். தற்போது அறிமுகத்தேதி குறிப்பிடப்படாத நிலையில் விநியோகஸ்தர்கள் முன்பதிவுகளை ஏற்றுக்கொள்கிறார்கள். செல்டோஸிற்கான இந்த அறிமுக விலைகள், குறிப்பாக உயர்ரக தரத்தில் உள்ள GT லைன் வகைகள், வரும் நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,
டெக் லைன் வகைகள் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களுடனும், GT லைன் வகை பிரத்தியேகமான 1.4 லிட்டர் டர்போசார்ஜ் பெட்ரோல் எஞ்சினுடனும் கிடைக்கிறது. இருப்பினும் GTX+ வகைடீசல்-ஏடி பவர் டிரெயினுடனும் கிடைக்கும். மூன்று என்ஜின்களும் ஏற்கனவே பிஎஸ்6 கட்டுபாட்டைப் பூர்த்தி செய்கின்றன. GT லைன் மாடல்களை, ஸ்போர்ட்டியர் மற்றும் அதிக பிரீமியம் ரகங்களாக, செல்டோஸ் ரகங்களில் கியா நிலைப்படுத்தும் அதே சமயம் GTX+ வகை இந்தியாவின் டாப்-ஸ்பெக் செல்டோஸ் ஆகும். இனி ஒவ்வொரு எஞ்சின்களின் செயல்பாட்டுத் திறன் குறித்து கொடுக்கப்பட்ட விவரங்கள்:
எஞ்சின் |
1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் |
1.5 லிட்டர் பெட்ரோல் |
1.5 லிட்டர் டீசல் |
ட்ரான்ஸ்மிஷன் தேர்வு வாய்ப்புகள் |
6-வேக எம் .டி / 7-வேக டி.சி.டி. (இரட்டை கிளட்ச் டிரான்ஸ்மிஷன்) |
6-வேக எம்.டி / சி.வி.டி. |
6-வேக எம்.டி/ 6-வேக ஏ.டி. |
பவர் |
140 பி.எஸ். |
115 பி.எஸ் |
115 பி.எஸ் |
டார்க் |
242 என்.எம். |
144 என்.எம் |
250 என்.எம் |
எரிபொருள் திறன் |
லிட்டருக்கு 16.1 கி.மீ / 16.5 கி.மீ. |
லிட்டருக்கு 16.5 கி.மீ / 16.8 கி.மீ. |
லிட்டருக்கு 21 கி.மீ / 18 கி.மீ |
செல்டோஸின் சிறப்பம்சங்களில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் சில: இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள 10.25-இன்ச் தொடுதிரையுடைய இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே. தொடர்ந்து இத்தரப் பிரிவுகளில் முதல் முறையாக 8 அங்குல ஹெட்-அப் டிஸ்ப்ளே உடையது. காற்றோட்ட ஏற்பாடுடைய முன் இருக்கைகள், ஸ்மார்ட் காற்று சுத்திகரிக்கும் அமைப்பு, தானியங்கி காலநிலைக் கட்டுப்பாடு, 360 டிகிரி கேமரா பிற அம்சங்களாகும். பல்தரப்பட்ட தகவல்களைக் காட்சிப்படுத்தும் கருவிக்குழுவிற்குத் தகவல் அனுப்பும் திறனுடய மறைவு நிலை மானிட்டர் இதன் பெருமைப்படக்கூடிய அம்சமாகும்
நாங்கள் கியா செல்டோஸை இயக்க வாய்ப்பு கிடைக்கப்பெற்றோம். எங்கள் முதல் இயக்கத்தின் முடிவில் நாங்கள் கண்டறிந்த தகவல்களை எங்கள் மதிப்பாய்வில் படிக்க மற்றும் கீழே காணொளிக் காட்சியில் அதைக் காணலாம்:
கியா, செல்டோஸிற்கு தனது இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்ப அம்சங்களை யு.வி.ஓ கனெக்ட் என்ற பெயரில் வழங்க ஒரு இ ஸிம்மை இணைத்துள்ளது. இதனால் தொலை தூரத்திலிருந்தபடியே எஞ்சின் மற்றும் குளிர் சாதனத்தைப் பயன்படுத்துவதோடு இதன் மூலம் ஓடும் வாகனத்தின் நேரடி இருப்பு மற்றும் இணைய வேலி மற்றும் பல வசதிகளைப் பெறலாம். தகுதியுடய வகைகளுக்கு, முதல் மூன்று ஆண்டுகளுக்கு, இந்த இணைக்கப்பட்ட வசதியை கியா இலவசமாகத் தருகிறது.
செல்டோஸின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் அதன் புதுமையான அமைப்பாகும். இதன் காரணமாக அது கிட்டத்தட்ட அனைத்து சிறிய எஸ்யூவி போட்டியாளர்களிடமிருந்தும் தனித்து நிற்கிறது. ஹெட்லேம்ப்கள், டி.ஆர்.எல் மற்றும் முன் மூடுபனி விளக்குகள் அனைதும் எல்.ஈ.டி. பெற்றுள்ள அதே நேரத்தில் பின்புற விளக்குகளும் புதுமையான எல்.ஈ.டி கூறுகளைக் கொண்டுள்ளது. உயர்தர வரிசை ரகங்கள், கேபினுக்குள் வசதியான மெத்தைவிரிப்புகளுடன் உயர்தர உணர்வை ஏற்படுத்துவதாக உள்ளன. ஜி.டி.லைன் வகைகள், கேபினுக்குள்ளும் கூடுதல் சிவப்புத் தோற்றங்கள் மற்றும் இளமைத் தோற்றத்துடன் கூடிய 17 இஞ்ச் அல்லாய் சக்கரங்கள் ஆகியவற்றையும் பெற்றுள்ளன.
கியா செல்டோஸ் எஸ்யூவியின் சரியான அளவீடுகள் இங்கே:
நீளம் |
4315 மி.மீ |
அகலம் |
1800 மி.மீ. |
உயரம் |
1620 மி.மீ |
உள்சக்கர அளவு |
2610 மி.மீ |
பொருட்கள் வைக்கும் இட அளவு |
433 லிட்டர் |
செல்டோஸ் சாதாரண வகைகள், ஏ.பி.எஸ். உடன் ஈ.பி.டி., பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் இரட்டை முன் காற்றுப்பைகள் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் கொண்டுள்ளது. மேலும் மேல்தர வரிசை வகை 6 காற்றுப்பைகளுடன் வருகிறது. தவிர நான்கு சக்கரங்களுடனும் இணைக்கப்பட்ட ப்ரேக், தானியங்கி முன்விளக்குகள், முன்வரிசை பார்க்கிங் உணரும் கருவிகள், ஐஸோபிக்ஸ் குழந்தை இருக்கை இணைப்புகள் ஆகியவை உள்ளன. ஆனால் இவை சாதாரண மற்றும் நடுத்தர வகைகலளுக்குப் பொருந்தாது.
செல்டோஸின் மேல்தர வரிசை வகைகளில்,ஓட்டுதல் மற்றும் நிலப்பரப்புக்குத் தகுந்த செயல்வகை தவிர மலை ஏற்ற உதவி, எலக்ட்ரானிக் ஸ்திரத்தன்மை திட்டம், வாகன ஸ்திரத்தன்மை மேலாண்மை ஆகிய செயல்வகைகள் உள்ளன. இவை வெவ்வேறு ஓட்டும் சூழ்நிலைகளைப்பொறுத்து வாகனத்தின் தூண்டுதல் மற்றும் இழுவைக் கட்டுப்பாட்டை மின்னணு செயல்பாட்டின் மூலம் சரிசெய்கின்றன.
கியா, செல்டோஸிற்கு 3 ஆண்டு கால கிலோமீட்டர் வரம்பற்ற விரிவான உத்தரவாதத்தையும் சாலையோர உதவிகளையும் வாகனத்தை வாங்கும் போதும், விருப்பப்பட்டால் 5 ஆண்டுகளாக நீட்டிக்கும் வாய்ப்பும் வழங்குகிறது. நீங்கள் ஏற்கனவே ஒரு செல்டோஸுக்கு ஆர்டர் செய்திருந்தால் அல்லது இப்போது ஒன்றை வாங்கப் போகிறீர்கள் என்றால், அதை கியா உங்கள் இருப்பிடத்திற்கே நேரடியாக அனுப்பத் தயாராக உள்ளது . இருப்பினும், 32,000 க்கும் மேற்பட்ட முன்பதிவுகள் உள்ளதால், அதற்காக சிறிது காலம் காத்திருக்க நேரிடலாம்.
கியா செல்டோஸ், காம்பேக்ட் எஸ்யூவியாக, ஹூண்டாய் கிரெட்டா, நிசான் கிக்ஸ், மாருதி எஸ்-கிராஸ், ரெனால்ட் கேப்டூர் மற்றும் டஸ்டர் போன்றவற்றின் போட்டியாகக் களத்தில் உள்ளது. இருந்த போதும் அதன் ப்ரீமியம் வரிசையின் விலை காரணமாக 5 இருக்கைகள் கொண்ட நடுத்தர அளவிலான எஸ்யூவிக்களான டாடா ஹாரியர் மற்றும் எம்ஜி ஹெக்டர் போன்றவற்றிற்கும் சவாலாக உள்ளது.
0 out of 0 found this helpful