• English
  • Login / Register

ஜீப் நிறுவனம் 280 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்துள்ளது: 2017-ம் ஆண்டு முதல் புதிய SUVகளை இந்தியாவில் தயாரிக்கத் திட்டம்

published on ஜூலை 28, 2015 12:14 pm by raunak

  • 13 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஃபியட்-கிரிஸ்லர் 2017-ன் இரண்டாவது காலாண்டில் ஒரு புதிய ஜீப் வாகனத்தை இந்தியாவிலேயே தயாரிக்கவிருப்பதாக உறுதிபடுத்தியுள்ளது.

ஃபியட்-கிரிஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் ஃபியட் இந்தியா ஆட்டோமொபைல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் $280 மில்லியன் டாலர் முதலீடு செய்து டாடா மோட்டார்ஸ் நிறுவன உதவியுடன் ரஞ்சன்கோணில் உள்ள ஃபியட்-இன் உற்பத்தி ஆலையை விஸ்தரிக்க போவதாக அறிவித்துவுள்ளது. ஃபியட்-கிரிஸ்லர் புதிய ஜீப் வாகனத்தை உற்பத்தி செய்ய இந்த முதலீடு உதவி செய்யும் என்று உறுதியளித்துள்ளது, மேலும் இந்தியாவில் இதன் தயாரிப்பு 2017-இன் இரண்டாவது காலாண்டில் தொடங்கும் என்றும் திட்டமிட்டுள்ளது.

“இந்தியாவில் செய்துள்ள இந்த முதலீட்டால் எங்களுடைய எஃப்‌சி‌ஏ கம்பெனி இந்திய சந்தையில் சிறப்பாக காலூன்றிவிடும் என்பதில் நாங்கள் பெருமிதமடைகிறோம். மேலும், எங்களது இந்த கூட்டு முயற்சியின் மூலம்  பழம்பெருமை வாய்ந்த ஜீப் முத்திரை கொண்ட உலக தரமிக்க கார்களை போல இங்கும் தயாரிக்க இயலும் என்பதில் உறுதியாக உள்ளோம்” என்று எஃப்சிஏ-இன் தலைமை நிர்வாக அதிகாரி செர்ஜியோ மார்ச்சியோன் கூறினார்.

இந்தப் புதிய ஜீப் வாகனமானது, இந்தியாவில் முதன்முதலாக உலகளாவிய அறிமுகம் முடிந்த கையோடு, உலகத்தரம் வாய்ந்த டொயோட்டா ஃபார்சூனர், ஃபோர்ட் எண்டெவர் மற்றும் மஹிந்த்ராவின் XUV 500 ஆகிய கார்களுடன் கடுமையாக போட்டியிட்டு வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜீப் ரக வாகனமாதலால், இது 4 சக்கர திறனுடன் (4WD) ஓடும் வசதியைப் பெற்றுள்ளது. 

ஜீப்பைப் பற்றி பல விந்தையான வதந்திகள் உலா வந்துகொண்டிருக்கின்றன, அதாவது இதில் இரண்டு மாறுபட்ட இயந்திர தெரிவுகளை தேர்ந்தெடுக்கக்கூடிய வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் என்றும், ஃபியட் நிறுவனம் இந்தியாவுக்காக பிரத்யேகமாக தயாரித்த சிறிதாக்கப்பட்ட 1.5 லிட்டர் மல்டிஜெட் இஞ்ஜின் அவற்றுள் ஒன்றாக இருக்கும் என்று  எண்ணப்படுகிறது. மேலும், மற்றொரு மாடலாக உள்ள 2.0 லிட்டர் மல்டி ஜெட் இயந்திரத்தை 4 சக்கரத்தால் ஓடும் திறன் (4WD) கொண்ட வாகனத்தில்  இணைக்கப்படும் என்ற யூகமும் நிலவிக் கொண்டிருக்கிறது. இப்படி இணைக்கும் நுட்பத்தை, டொயோட்டா ஃபார்சுனருக்கு போட்டியாக தயாரிக்கவுள்ள TATAவின் யூகிக்கப்பட்ட எஸ்‌யு‌வி மாடலில், இருந்து நூதனமாக பெற்றுள்ளது. மேலும் ஜீப் நிறுவனம் இந்திய சந்தைக்கு புதிய அடக்கமான SUV வகை வாகனத்தை வெளியிடவுள்ளது. இந்த வெளியீட்டின் மூலம் ஜீப், தற்போதைய வாகன சந்தையில் உள்ள கச்சிதமான அடக்கமான SUV மாடல்களான ரெனால்ட் டஸ்டர், நிஸ்ஸான் டெர்ரனோ, ஃபோர்ட் எக்கோ ஸ்போர்ட் மற்றும் அடுத்து வரவிருக்கும் ஹுண்டாய் கிரீடா மற்றும் மாருதி சுசூகி S-கிராஸ் ஆகிய அனைத்திற்கும் சவாலாகவும் சிம்மசொப்பனமாகவும் இருக்கும் என்று நம்பப்படுகிறது. 

மேற்கூறிய அடக்கமான SUV வகை ஜீப்  புதிய 1.5 லிட்டர் மல்டி ஜெட் டீசல் இயந்திரத்தின் மூலம் தனது ஆற்றலையும் சக்தியையும் பெறும் என்றும் கூறப்படுகிறது. 
சமீபத்தில் இந்நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்றில், புனேவில் உள்ள ரஞ்சன்கான் ஜீப் வாகன தயாரிப்பு ஆலையானது, அமெரிக்காவிற்கு வெளியே இருக்கும் நான்காவது வசதிமிக்க ஆலையாகும் என்று குறிப்பிட்டுள்ளது. தற்போது, ஜீப் முத்திரையுள்ள வாகனங்கள் இத்தாலியிலும், பிரேசிலிலும் தயாரிக்கின்றனர். மேலும், 2015ன் நான்காவது காலாண்டில் சீனாவிலும் உற்பத்தி தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“ஃபியட் நிறுவனம் மகாராஷ்டிராவுடன் சங்கமமானது புதியது அல்ல. எங்கள் உறவு பல சகாப்தங்களாகவே பலப்பட்டுக் கொண்டிருக்கிறது,” என்று மகாராஷ்டிராவின் முதல்வரான தேவேந்திர ஃபாட்னாவிஸ் கூறினார். அவர் மேலும் கூறுகையில், “ஃபியட்-கிரிஸ்லரின் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் முதலீடு செய்யும் முடிவை நாங்கள் மனமார வரவேற்கிறோம். இம்மாநிலத்தில் ஃபியட்-கிரிஸ்லரின் புதிய முயற்சியை வரவேற்கும் விதமாகவும், உங்களுடனான எங்கள் உறவை மேம்படுத்திக் கொள்ளும் விதமாகவும், எங்களின் முழுமையான ஆதரவை உறுதிபடுத்துகிறோம்” என்றார்.

பின் குறிப்பு:
ஜீப் சின்னத்தைக் கொண்ட வாகனங்களான கிராண்ட் செரோகீ மற்றும் ரேங்க்லர் போன்ற மாடல்கள் CBU (முழுமையான வாகனங்களாகவே இறக்குமதி செய்து விற்பனை செய்யும் முறை) முறையில் இந்த ஆண்டு இந்தியா முழுவதும் வலம் வரவுள்ளது. 

was this article helpful ?

Write your கருத்தை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience