2016 –ஆம் ஆண்டு ஜீப் இந்தியாவிற்கு வருகிறது – அநேகமாக இது இறுதியான முடிவாக இருக்கும்
published on செப் 04, 2015 02:15 pm by raunak
- 15 Views
- 15 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
முடிவற்ற பல தாமதங்களுக்கு பின்னர், புதிய ஜீப் வாகனத்தை இந்தியாவிலேயே பொருத்திக்கொள்ள, ஃபியட் கிறிஸ்லரின் ரஞ்சன்கவுனில் உள்ள தொழிற்சாலையின் வசதியை மேம்படுத்துவதற்கு 280 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்நிறுவனம் முதலீடு செய்துள்ளதை அறிவித்ததிலிருந்து, இப்போது உறுதியாக முடிவானது தெரிகிறது.
ஃபியட் கிறிஸ்லர் ஆட்டோமொபைல் (FCA) ஜீப் ஃபிராண்ட், இறுதியாக இந்திய சந்தையில் அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில், ஐந்து பிரத்தியேக முகவர்களின் மூலம் சந்தைப்படுத்தப்படும். FCA இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான, திரு. கெவின் ஃப்ளைன் இந்த செய்தியை PTI –யிடம் அதிகார பூர்வமாக தெரிவித்தார். 2016 –ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடக்கவிருக்கும் அடுத்த இந்திய வாகன கண்காட்சியில், இந்த நிறுவனம் தனது ஜீப் கிராண்ட் செரோகீ மற்றும் ராங்குலர் SUV -க்களையும் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்த நிறுவனம், மேற்சொன்ன கார்களை இந்தியாவிற்கு முற்றிலும் கட்டமைக்கப்பட்ட தயாரிப்பாக (CBU) இறக்குமதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்நிறுவனம், இந்த வாகனங்களை இந்தியாவிலேயே பொருத்த எண்ணிக்கொண்டிருக்கிறது என்பது இந்த அறிக்கையிலிருந்து தெரிகிறது. கெவின் ஃப்ளைன் இது பற்றி கூறும்போது, “இது (ராங்குளர் மற்றும் செரோகீ உள்ளூரிலேயே பொருத்தப்படுவது) உண்மைப்படுவதைப் பார்க்க எங்களுக்கு ஆசையாக இருக்கிறது,” என்றார்.
அண்மையில், ஃபியட் நிறுவனம் இந்தியாவில் தங்கள் அபார்த் ஃபிரண்ட் கார்களை அறிமுகப்படுத்தியது. அதன் வரிசையில் ஜீப் அடுத்த வாகனமாக இருக்கும். இந்த அறிமுகப்படலமானது, இத்தாலிய வாகன தயாரிப்பாளரான ஃபியட், இந்தியாவில் மென்மேலும் வளர உறுதுணையாக இருக்கும், என்று தெரிகிறது. மற்றொரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், சமீபத்தில் வெளியான அபார்த் 595 காம்படிசன் வாகனத்திற்கு பிறகு, புதிய அபார்த் வரிசைகள் வெளியிடப்பட உள்ளன. அவற்றில், 145 bhp குதிரைத் திறனைக் கொண்ட அபார்த் புண்டோ EVO மற்றும் அவேன்சுரா போன்ற வாகனங்கள் அடங்கும்.
கடந்த ஜூலையில், FCA நிறுவனம் டாடா மோட்டார் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து, ஃபியட் நிறுவனத்தின் இராஞ்சாகாவின் உற்பத்தி திறனை நீட்டிப்பு செய்ய, ஃபியட் ஆட்டோமொபைல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 280 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முதலீடு, புதிய ஜீப் வாகனங்களைத் தயாரிக்க மிகவும் உதவியாக இருக்கும் என்று ஃபியட் கிறிஸ்லர் உறுதி கூறுகிறது. மேலும், 2017 –ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில், இந்த உற்பத்தி தொடங்க, வாய்ப்பு அதிகம் உள்ளதாக இந்நிறுவனம் .கூறுகிறது.
0 out of 0 found this helpful