ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்கவுள்ள ஜீப் ரெனேகேட்: சோதனை ஓட்டத்தின் போது உளவாளிகளின் கண்களில் தென்பட்டது
published on பிப்ரவரி 01, 2016 02:16 pm by nabeel
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜீப் ரெனேகேட் கார், இந்திய ரோடுகளில் சோதனை செய்யப்படும் போது உளவாளிகளின் கண்களில் தென்பட்டது. என்னதான் பெரும்பான்மையான பகுதிகள் மறைக்கப்பட்டிருந்தாலும், ரெனேகேடின் தனித்துவமான வடிவம் அதனை எளிதாக நமக்குக் காட்டிக் கொடுக்கிறது. ஃபியட் கிறிஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் (FCA) நிறுவனம், இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ள கார்களின் அறிமுகப் பட்டியலில், இந்த கார் மூன்றாவது இடத்தைப் பிடிக்கிறது. ஜீப் நிறுவனத்தின், கிராண்ட் செரோகீ மற்றும் ராங்க்லர் அன்லிமிடெட் போன்ற மாடல்களை முதலில் அறிமுகப்படுத்திவிட்டு, அவற்றைத் தொடர்ந்து ரெனேகேட் மாடல் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது. தற்போது, ஃபியட், அபார்த், மாசராட்டி மற்றும் ஃபெராரி ஆகியோரின் வாகனங்களை, FCA நிறுவனம் இந்தியாவில் வழங்கிக் கொண்டிருக்கிறது. FCA –வின் போர்ட்ஃபோலியோவில், ஐந்தாவது நிறுவனமாக ஜீப் இணைந்துள்ளது. ரஞ்சன்கோனில் உள்ள ஃபியட் நிறுவனத்தின் தயாரிப்பு ஆலையை மேம்படுத்த, டாடா மோட்டார்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து, 280 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யப்போவதாக FCA அறிவித்தது. ஜீப் நிறுவனத்தை இந்தியாவில் வேரூன்றச் செய்தபின், RHD மற்றும் LHD என்ற இருவிதமான சந்தைகளுக்கும் ஏற்றவாறு ஜீப் ரெனேகேட் காரைத் தயாரிக்க, இந்தியாவில் ஒரு ஆலை உருவாக்கப்படும் என்று தெரிகிறது.
வெளிநாட்டு சந்தைகளில் வலம்வரும் ரெனேகேட் காரில், 2.4 லிட்டர் டைகர் ஷார்க் i4 இஞ்ஜின் மற்றும் 1.4 லிட்டர் மல்டி ஏர் டர்போ இஞ்ஜின் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. மேலும், 2.4l டைகர்ஷார்க் இஞ்ஜினுடன், 6 ஸ்பீட் C635 மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், இரண்டாவதாக குறிப்பிட்டுள்ள 1.4 லிட்டர் மல்டி ஏர் டர்போ இஞ்ஜினுடன், 9 ஸ்பீட் 948 TE ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது.
18 அங்குலம் x 7.0 அங்குலம் என்ற அளவில் அலுமினிய சக்கரங்கள் பொருத்தப்பட்ட ரெனேகேட் காரின் உயர்ரக மாடல், ஆஃப்-ரோடு திறன் பெற்று வருகிறது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் போது, அனேகமாக இந்த கார் 4WD அமைப்பு கொண்ட வேரியண்ட்டாக, ஃபியட்டின் சிறிய 1.5 லிட்டர் டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டு வரும் என்று தெரிகிறது. உண்மையில், ஜீப் நிறுவனம் இந்திய சந்தையில் நுழைய, இது தான் சிறந்த தருணம். ஏனெனில், இப்போது இந்திய வாடிக்கையாளர்கள் SUV பிரிவு கார்களை வாங்குவதிலேயே ஆர்வமாக உள்ளனர். இதனாலேயே, கிவிட் தனது SUV போன்ற தோற்றத்தின் காரணமாகவும், கிரேட்டா தனது பயன்பாட்டு முறை காரணமாகவும், இந்திய சந்தையில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன.
FCA இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருமான திரு. கெவின் ஃபிளின் அவர்கள் இந்தியாவில் ஜீப் அறிமுகமாவதைப் பற்றி பேசும் போது, “தனிச்சிறப்பு வாய்ந்த ஜீப் பிராண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்திய சந்தையில், FCA நிறுவனம் மேலும் ஒரு புதிய பயணத்தை இன்று தொடங்குகிறது. இந்த ஆரம்பத்தை ஒரு மைல் கல்லாக நாங்கள் பாவிக்கிறோம். இந்திய மண்ணில் அறிமுகமான நாளில் இருந்தே, ஜீப் நிறுவனத்தை இங்கு உறுதியாக நிலைபெறச் செய்வதற்கு, இந்த அமர்க்களமான ஆரம்பம் எங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று கூறினார். “தனது பாரம்பரிய மரபை விட்டுக் கொடுக்காமல், உலகெங்கிலும் பிரபலமான தனது தனித்துவமான தயாரிப்புகளை விரிவாக்குவதை இலட்சியமாகக் கொண்டிருக்கும் இந்த நிறுவனத்தின் நோக்கத்தை, வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள புதிய ஜீப் பிராண்ட் பிரதிபலிக்கிறது. அடுத்து வரும் மாதங்களில், இந்தியாவில் அறிமுகமாகவுள்ள இந்த அற்புதமான பிராண்டைப் பற்றித் தெரிந்துகொள்ளக் காத்திருங்கள்,” என்றும் அவர் கூறினார்.
ஆதாரம்: motoroctane.com
மேலும் வாசிக்க