• English
  • Login / Register

2016 IAE-க்கு முன்னதாகவே ஜீப் ராங்குலர் அன்லிமிடேட் மற்றும் கிராண்ட் செரோகீ SRT ஆகியவை தனிப்பட்ட முறையில் வெளியிடப்பட்டது

ஜீப் வாங்குலர் 2016-2019 க்காக ஜனவரி 20, 2016 10:03 am அன்று manish ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 17 Views
  • ஒரு கருத்தை எழுதுக

Jeep Grand Cherokee SRT

ஜீப் இந்தியா நிறுவனத்தின் அடுத்து வரவுள்ள SUV-களின் வரிசையை, தனிப்பட்ட முறையில் காட்சியகப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் கேரளாவில் நடைபெற்றது. FCA-க்கு சொந்தமான இந்த வாகன தயாரிப்பாளரின் முழுமையான வியாபார செயல்பாட்டை அடுத்த மாதம் முதல் துவங்க உள்ள நிலையில், வரும் பிப்ரவரி 5 முதல் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ள 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் ஒரு பெரிய அளவிலான வெளியீட்டை நடத்த உள்ளது.

Jeep Grand Cherokee SRT HEMI engine

ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நுகர்வோருக்காக தனிப்பட்ட முறையில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், ஜீப்பின் ராங்குலர் அன்லிமிடேட் மற்றும் உயர் வகையை சேர்ந்த கிராண்ட் செரோகீ SRT ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டது. ஆரம்பக் கட்டத்தில் மேற்கூறிய இவ்விரண்டு மாடல்களுடன் தனது செயல்பாட்டை நிறுத்தி கொள்ள உள்ள இந்நிறுவனம், பிற்காலத்தில் ஒரு C-பிரிவை சேர்ந்த SUV-யையும், இந்நிறுவனத்தின் இந்திய தயாரிப்பு வரிசையில் சேர்த்து கொள்ளும். இந்த C-SUV-யின் தயாரிப்பு, இந்நிறுவனத்தின் ராஞ்சன்கயன் தொழிற்சாலையில் வைத்து நடைபெறும்.

Jeep Wrangler Unlimited

ஆற்றலகத்தை பொறுத்த வரை, செரோகீ SRT-யில் ஒரு 6.4-லிட்டர் மோன்ஸ்ட்ரோஸ் HEMI என்ஜினை பெற்று, 475bhp ஆற்றலையும், ஒரு அதிகபட்ச முடுக்குவிசையான 644Nm-யையும் வெளியிட வல்லது. இந்த ஆற்றலகத்தை கொண்டுள்ள இந்நிறுவனத்தின் முன்னணி SUV-யான இது, BMW X5M மற்றும் போர்ஸ் கெய்ன் ஸ்போர்ட்ஸ் போன்ற SUV-களை நேருக்குநேராக எதிர்கொள்ளும். SRT எதை எதிர்நோக்கி உள்ளதோ, அதை பொறுத்தே போட்டியிடும் வகையில் அதற்கான விலை நிர்ணயிக்கப்படும்.

மற்றொருபுறம், ராங்குலரில் ஓப்பீட்டளவில் நவீனமான 3.6-லிட்டர் V6 யூனிட்டை பெற்று, 275bhp ஆற்றலையும், 359Nm என்ற அதிகபட்ச முடுக்குவிசையையும் அளிக்கிறது. இந்த பிரிமியம் ஆப்-ரோடரில் ஒரு டீசல் வகையும் கிடைக்கப் பெற வாய்ப்புள்ள நிலையில், அது ஒரு 2.8-லிட்டர் டர்போசார்ஜ்டு யூனிட்டை கொண்டு, 197bhp ஆற்றலையும், 451Nm முடுக்குவிசையையும் வெளியிட திறன் கொண்டதாக இருக்கும்.

மேலும் வாசிக்க: கிராண்ட் செரோகீ மற்றும் ரேங்க்ளர் அன்லிமிடெட் ஆகியவற்றை காட்டும் ஜீப்-இந்தியாவின் இணையதளத்தின் இயக்கம் துவங்கியது

was this article helpful ?

Write your Comment on Jeep வாங்குலர் 2016-2019

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா பன்ச் 2025
    டாடா பன்ச் 2025
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience