ஜாகுவார் நிறுவனம் தங்களது F பேஸ் SUV வாகனங்களை 2016 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்தது

published on பிப்ரவரி 03, 2016 06:07 pm by raunak for ஜாகுவார் சி எக்ஸ்17

  • 11 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜாகுவார் நிறுவனம் தனது  F - பேஸ் SUV வாகனங்களை நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2016 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு  வைத்துள்ளது. இந்த வருட இறுதிக்குள் இந்தியாவில் F - பேஸ் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது. கடந்த வருடம் முதல் முதலாக காட்சிக்கு வைக்கப்பட்ட இந்த SUV ரக வாகனங்கள், இந்தியாவில்  வோல்வோ XC90 , ஆடி Q7 , பிஎம்டபுள்யு X5 மற்றும் இன்னும் சில வாகனங்களுடன் போட்டியிடும் என்று தெரிகிறது.

முன்புற தோற்றத்தைப் பொறுத்தவரை இந்த வாகனங்கள் ஜாகுவார் செடான் வகை கார்கள் போல் தோற்றத்துடன் காட்சியளிக்கிறது. பின்புறம்  F – டைப் வாகன வரிசையில் உள்ள  வடிவமைப்பே இதிலும் காணப்படுகிறது.     ஜாகுவார் நிறுவனம் தங்களது புதிய எடை குறைந்த  அலுமினியம் கட்டமைப்பை கொண்டு உருவாக்கும் மூன்றாவது கார் இந்த F -பேஸ் SUV என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த F - பேஸ் வாகனங்களில் நான்கு வெவ்வேறு  வேரியன்ட்களை ஜாகுவார் இந்தியா அறிமுகம் செய்கிறது.  ப்யூர் , ப்ரெஸ்டீஜ், R - ஸ்போர்ட் மற்றும் பர்ஸ்ட் எடிஷன் என்று அவை பெயரிடப்பட்டுள்ளன. 

என்ஜின் அமைப்பை பொறுத்தவரை இரண்டு டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் மட்டுமே F - பேஸ் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது.  இந்த இரண்டு ஆப்ஷன்களுமே  AWD அமைப்புடன் கூடிய   எட்டு - வேக ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. ப்யூர் மற்றும் ப்ரெஸ்டீஜ் வேரியன்ட்களில் 2.0 லிட்டர் ட்வின் டர்போ இன்ஜீனியம் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின், 1,750 - 2,500  rpmல் அதிகபட்சமாக 430 Nm அளவு டார்க்கையும் 4000 rpm ல்178 bhp அளவு சக்தியையும் உற்பத்தி செய்யும் திறன் பெற்றது. R - ஸ்போர்ட் மற்றும் பர்ஸ்ட் எடிஷன் வேரியன்ட்களில் 3.0 லிட்டர் V6  ட்வின் டர்போ டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின், 2000 rpm ல் அதிகபட்சமாக 700 nm அளவுக்கு டார்க்கையும் 4000 rpm ல் 296 bhp  அளவுக்கு சக்தியையும் உற்பத்தி செய்யு திறன் கொண்டது.   ப்யூர் மற்றும் ப்ரெஸ்டீஜ் வேரியன்ட்களில் 18-  அங்குல அல்லாய் சக்கரங்களும் , R - ஸ்போர்ட் வேரியண்டில்  19 - அங்குல அல்லாய் சக்கரங்களும் பர்ஸ்ட் எடிஷன் வேரியண்டில் 20 - அங்குல அல்லாய் சக்கரங்களும் பொருத்தப்பட்டு அங்குல ள்ளது. இந்த F -பேஸ் வாகனங்களில் கிரௌண்ட் கிளியரன்ஸ் 213 மி.மீ ஆகும்.

 இந்த வாகனங்களில் உள்ள சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை அனைத்து வேரியன்ட்களிலும் 8-  அங்குல  இன்கண்ட்ரோல் இன்போடைன்மென்ட் அமைப்பு, அனலாக் டயல் இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர் உடன் கூடிய   ஒரு 5- அங்குல மல்டி - இன்போ டிஸ்ப்ளே ,மற்றும் 80 W  ஜாகுவார் சவுன்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. ஆப்ஷனாக 12.3 அங்குல விர்சுவல் இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர் மற்றும் 380W   டிஜிடல் சவுண்ட் சிஸ்டம் உடன் கூடிய 10.2 - அங்குல இன் - கண்ட்ரோல் டச் ப்ரோ (10GB இன்டெர்னல் மெமரியை உள்ளடக்கியது ) கிடைக்கிறது.

  மேலும் வாசிக்க 

ஆட்டோ எக்ஸ்போவில் ஜகுவார் XE அறிமுகம்: சோதனை ஓட்டத்தின் போது உளவாளிகளின் கண்களில் தென்பட்டது

ஜாகுவார் F டைப் SVR விரைவில் அறிமுகம்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது ஜாகுவார் C X17

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • போர்டு இண்டோவர்
    போர்டு இண்டோவர்
    Rs.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: மார, 2025
  • டாடா curvv
    டாடா curvv
    Rs.10.50 - 11.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஆகஸ, 2024
  • மஹிந்திரா thar 5-door
    மஹிந்திரா thar 5-door
    Rs.15 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜூன, 2024
  • மஹிந்திரா போலிரோ 2024
    மஹிந்திரா போலிரோ 2024
    Rs.10 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: நவ,2024
  • டொயோட்டா taisor
    டொயோட்டா taisor
    Rs.8 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஏப், 2024
×
We need your சிட்டி to customize your experience