அனிமட்ரோனிக் வீடியோ உருவில் F-பேஸை முதல் முறையாக வெளிப்படுத்திய ஜாகுவார்
published on செப் 05, 2015 01:34 pm by அபிஜித் for ஜாகுவார் சி எக்ஸ்17
- 19 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜாகுவார் நிறுவனம், தனது முதல் கிராஸ்ஓவரான F-பேஸின் முதல் படத்தை (டீஸர்) வெளியிட்டுள்ளது. இது தாமதமாக என்றாலும், கடைசியாக பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்வதற்கு முன்பாக, அதன் பக்க பகுதிகள் தெரியும் வகையில் முதல் படத்தில் தோன்றுகிறது. C-X17 தொழில்நுட்பத்தை பெரும்பாலும் ஒத்து காணப்படும் இது, இதன் உடன்பிறப்புகளாக உள்ள கார்களின் வடிவமைப்பு நெறிமுறைகளை தாங்கி உள்ளது.
இந்த காரை எடை குறைவாக, அதே நேரத்தில் வலிமையாகவும் இருக்கும் வகையில், தீவிர அலுமனிய கட்டமைப்பான ஜாகுவாரின் iQ[Al] பிளாட்பாமை அடிப்படையாக கொண்டு திகழ்கிறது. மேலும் இதில் முன்புறம் டபுள் விஸ்போன் ஃபிரண்ட் சஸ்பென்ஸன்ஸ் மற்றும் பின்புறத்தில் இன்டிகிரல் லிங்க் சஸ்பென்ஸன் ஆகியவற்றை பெற்றுள்ளது. உட்புறத்தில் 5 பேர் தாராளமாக அமரவும், பொருட்களை வைக்க கூடிய இடமும் கொண்டு, பரந்த விசாலமான உட்புறத்தை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
ஆற்றல் மிகுந்த நான்கு சிலிண்டர் கியஸோலைன் மற்றும் டீசல் யூனிட்களை உட்கொண்ட இன்ஜினியம் மோட்டார்கள் மூலம், இந்த கார் இயக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் F-பேஸின் “S” ட்ரிமில் 3.0 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு V6 மற்றும் சூப்பர்சார்ஜ்டு 5.0 லிட்டர் V8 மூலம் இயக்கப்படும் நிலையில், இது தாமதமாக அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. மேலும் முழுவதும் மின்னோட்டத்தால் இயங்கும் வாகனம் (ஃபுள்ளி எலக்ட்ரிக் ட்ரைவ் ட்ரெயின்) கொண்டு வர வாய்ப்பு உண்டு என்றாலும், அது விரைவில் வெளிவர வாய்ப்பில்லை.
சோலிஹூல் நகரை பிறப்பிடமாக கொண்ட F-பேஸ், அடுத்த ஆண்டில் இருந்து விற்பனைக்கு வரும். இந்தியாவிற்கும் அடுத்த ஆண்டே கொண்டு வரப்படலாம். இது ஆடி Q5, BMW X3, மெர்சிடிஸ் M-கிளாஸ் மற்றும் இதன் உறவுமுறை வாகனமான லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் ஆகியவற்றின் மீதான விருப்பத்தை கவர போட்டியிடும்.
இந்த அட்டகாசமான காரின் உருவாக்கத்தை பின்வரும் வீடியோவில் பாருங்கள்!
0 out of 0 found this helpful