ஜகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்திற்கு சொந்தமான 5,800 கார்கள் சமீபத்திய சீன டியான்ஜின் துறைமுக வெடி விபத்தில் சேதமடைந்துள்ளன .
published on ஆகஸ்ட் 24, 2015 01:01 pm by nabeel
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
சமீபத்தில் சீன துறைமுகமான டியான்ஜின் துறைமுகத்தில் ஒரு ரசாயன கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்திற்கு சொந்தமான கார்கள் சேதமடைந்துள்ளன. விபத்து பகுதியில் ஆள் நடமாட்டம் தடை செய்யப்பட்டுள்ளதால் சேத விவரம் முழுமையாக தெரியவில்லை.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மும்பை பங்கு சந்தைக்கு இந்த விபத்து பற்றி பின் வரும் விவரங்களை தெரிவித்துள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில் JLR நிறுவனத்திற்கு சொந்தமான 5,800 வாகனங்கள் துறைமுகத்தின் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டிருந்ததாகவும், அவைகள் சமீபத்தில் தான் சீனாவுக்கு கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டவை என்றும் கூறியுள்ளது. அவற்றில் பெரும்பான்மையான வாகனங்கள் சேதமடைந்திருக்கக் கூடும் என்றும் ஆனால் சரியான எண்ணிக்கை அந்த விபத்து பகுதியில் தடை நீக்கப்பட்டு பொதுமக்கள் அனுமதிக்கப்படும் போது தான் கணக்கிட்டு சொல்ல முடியும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வாகனங்கள் சுமார் 15 நாட்களுக்கு முன்னர் தான் சீன துறைமுகத்திற்கு வந்திருக்கக் கூடும் என்று ஆய்வாளர்கள் கூறினார்.
வெடி விபத்து நிகழ்ந்த அன்று ரூ. 6500 கோடி மதிப்பிலான மற்ற கார் தயாரிப்பாளர்களான ரெனால்ட், மிட்சுபிஷி, ஹயுண்டாய், வோல்க்ஸ்வேகன், கியா மற்றும் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவன வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தது.
மார்னிங் ஸ்டார் பத்திரிக்கையின் வாகன விமர்சகர் கூறுகையில்,” இந்த விபத்து JRL நிறுவனத்திற்கு எந்த விதமான பொருளாதார நெருக்கடியையும் ஏற்படுத்தாது.சொகுசு கார் வாங்க வேண்டும் என்று முடிவு செய்யும் ஒரு வாடிக்கையாளர் நிச்சயம் அந்த முடிவை எளிதில் மாற்றிக்கொள்ள மாட்டார். அப்படியே இந்த விபத்தினால் ஒரு சிறு பாதிப்பு இருக்கும் என்றால் புக்கிங் செய்துவிட்டு காத்திருக்கும் நேரம் சற்று கூடுதல் ஆகுமே தவிர விற்கப்படும் காரின் எண்ணிக்கையிலோ அல்லது வேறுவிதமான பெரிய பாதிப்புக்களோ இருந்துவிடாது" என்று கூறினார்.
எகனாமிக் டைம்ஸ் பத்திரிக்கை எழுப்பிய கேள்விகளுக்கு JLR நிறுவனத்தின் பேச்சாளர் டெல் செம்ஹார் ஈமெயில் மூலம் பின் வரும் தகவல்களை கூறினார்.” நாங்கள் தொடர்ந்து துறைமுக அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். துறைமுகம் மீண்டும் திறக்கப்படும் போது பாதிப்பின் அளவை எங்களால் தெளிவாக கூறமுடியும். இப்போது அதைப் பற்றி சொல்வது சரியாக இருக்காது. நாங்கள் கூர்ந்து சூழ்நிலையை கவனித்து வருகிறோம்" .
0 out of 0 found this helpful