2016 ஜனவரி 3வது வாரத்தையொட்டி மஹிந்திரா S101-வின் அறிமுகம் நடைபெறுமா?
published on நவ 26, 2015 01:44 pm by raunak
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
இந்த வாகனத்தின் மூலம் சாங்யாங் உடன் கைகோர்த்து தயாரிக்கப்பட்ட மஹிந்திராவின் புதிய பெட்ரோல் என்ஜின்களின் குடும்பமும் அறிமுகம் செய்யப்படுகிறது!
தொழில்துறையில் உலவி வரும் சில தகவல்கள் நிஜமாகும் பட்சத்தில், S101 என்ற சங்கேத பெயரில் அறியப்படும் வாகனத்தை, 2016 ஜனவரி மாதத்தின் 3வது வாரத்தில் மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்கிறது. இந்த வாகனத்திற்கு அதிகாரபூர்வமான இன்னும் பெயர் அளிக்கப்படாத நிலையில், XUV5OO மற்றும் TUV3OO ஆகியவற்றுடன் ஒத்த வரிசையில் அமைந்த பெயரிடப்படும் என்று வதந்திகள் பரவி வருகின்றன. செலரியோ, i10, அடுத்து வரும் டாடா கைட் என்று அறியப்படும் ஸிகா, செவ்ரோலேட் பீட் மற்றும் பல வாகனங்களுடன், இது போட்டியிட உள்ளது.
சாங்யாங் உடன் கைகோர்த்து தயாரித்துள்ள 1.2-லிட்டர் 3-சிலிண்டர் புதிய பெட்ரோல் யூனிட், S101-ல் காணப்படும் ஒரு முக்கிய அம்சமாகும். இந்த என்ஜின் மூலம் 80+ bhp மற்றும் 110 Nm-யை ஒட்டிய முடுக்குவிசையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. S101-ல் 1.2-லிட்டர் பெட்ரோல் என்ஜினை தவிர, TUV3OO-ல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திராவின் புதிய mHawk80 டீசல் என்ஜின் அம்சத்தையும் கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மோட்டார் 83.6 bhp ஆற்றலையும், ஒரு மகத்தான 230 Nm முடுக்குவிசையும் கருத்தில் கொண்டு, இந்த பிரிவில் ஒன்றாக திகழ்கிறது. மாறாக, இந்த என்ஜினை தயாரிப்பாளர் மீண்டும் ட்யூன் செய்யவும் வாய்ப்புள்ளது. டிரான்ஸ்மிஷன் தேர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், TUV3OO-ல் இருந்து பெறப்பட்ட ஒரு தரமான 5-ஸ்பீடு மேனுவல் உடன் கூடிய AMT டிரான்ஸ்மிஷனை, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரு என்ஜின் தேர்வுகளிலும் பெறலாம். XUV5OO-க்கு அடுத்தபடியாக மோனோகோக் கட்டமைப்பு கொண்ட இரண்டாவது வாகனம் இதுவே ஆகும்.
வேவு பார்க்கப்பட்ட S101-ன் உட்புற கட்டமைப்பு படங்களின் அடிப்படையில், இந்த வாகனத்தில் 5+1 சீட்டிங் தேர்வு காணப்படுகிறது. முன்புற நடு வரிசை சீட்டை மடக்கி, ஆம்ரெஸ்ட்டாகவும், கப் ஹோண்டராகவும் பயன்படுத்த முடியும். சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட TUV300-ல் உள்ள இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற சில அம்சங்களையும் இது பெற்றுள்ளது.
இதையும் படியுங்கள்