சுசுகி iM – 4 காரின் புதிய பெயர் இக்னஸ்?
published on செப் 02, 2015 02:53 pm by manish
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர்: சப் - காம்பேக்ட் பிரிவிலான கார்கள் பிரபலம் அடைந்து வருகிறது. இதற்கு இந்திய சாலைகளின் தன்மையும் போக்குவரத்து நெரிசலும் முக்கிய காரமாக அறியப்படுகிறது. இந்த சாதகமான சூழ்நிலையை பயன்படுத்திக்கொள்ள விரும்பி சுசுகி நிறுவனம் இந்த வருட துவக்கத்தில் கச்சிதமான SUV பிரிவில் தனது iM -4 வாகனத்தை 2015 ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வெளியிட்டது. காப்புரிமை பெற்ற இந்த வாகனத்தின் படங்கள் வெளிவர தொடங்கியதில் இருந்தே தெளிவாக தெரியாத போதிலும் இந்த வாகனம் உற்பத்திக்கு தயாராக உள்ளதை நம்மால் உணர முடிந்தது. மேலும் சமீபத்தில் கசிந்துள்ள செய்தியின் படி இந்த iM -4 வாகனத்திற்கு இக்னஸ்
என்று புது பெயர் தரப்படலாம் என்றும் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே 2000 - 2008 ஆம் ஆண்டுவரை சுசுகி நிறுவனம் வெளிநாட்டு சந்தையில் இக்னஸ் மொனிகர் என்ற பெயரின் கீழ் வாகனங்களை அறிமுகப்படுத்தி விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இணையத்தளத்தில் சுசுகி இன்ஸ்ட்டாக்ரேம் ரசிகர்கள் பக்கத்தில் இந்த இக்னஸ் கச்சிதமான SUV யின் உற்பத்தியை தொடங்க தயாரான நிலையில் உள்ளது போன்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இந்த வாகனம் பெருமளவு iM - 4 கான்செப்ட் காரை போன்ற தோற்றத்தையே கொண்டுள்ளது என்பது மேலும் ஒரு குறிப்பிடதக்க செய்தியாகும்.
புதிய சுசுகி பலேனோ கார்களில் முதல் முறையாக பொருத்தப்பட உள்ள அதே 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் பூஸ்டர்ஜெட் என்ஜின் இந்த இக்னஸ் அல்லது iM -4 வாகனத்திலும் பொருத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதைத் தவிர வேறு என்ஜின் ஆப்ஷன்களும் இந்த வாகனத்திற்கு கொடுக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது. ஐரோப்பிய ஸ்விப்ட் களில் உள்ள 1.2 லிட்டர் டியூவல்ஜெட் என்ஜின் மற்றும் பியட்டில் இருந்து பெறப்பட்ட 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆகியவை மற்ற என்ஜின் ஆப்ஷன்கலாக இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.
மாருதி நிறுவனம் இதுவரை எந்த விதமான அறிவிப்பையும் வெளியிடாத நிலையில் இக்னஸ் வாகனங்கள் இந்தியாவில் அறிமுகமாகுமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. . மாருதி நிறுவனம் YBA என்று குறியீட்டு பெயர் (கோட் நேம்) வைத்து தற்போது தயாரித்துக் கொண்டிருக்கும் கச்சிதமான SUV பிரிவிலான கார் விரைவில் இந்திய சந்தையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இணையத்தளத்தில் கசிந்த இந்த YBA வாகனத்தின் புகைப்படங்கள் 2012 ஆட்டோ ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்ட XA ஆல்பா கான்சப்டை முன் மாதிரியாக கொண்டு உருவாக்கப்பட்டது போல் தோன்றுகிறது. இப்போது உருவாக்கத்தில் உள்ள இந்த கார் எந்த அளவுக்கு அந்த ஒரிஜினல் கான்செப்ட் ஐ ஒத்து இருக்கிறது என்பதை காண நிச்சயம் நமக்கு ஆவல் கூடுகிறது.
இத்தகைய தன்னுடைய சிலிர்ப்பூட்டும் கன்செப்ட் களை தயாரிப்புக்கு கொண்டு வருவது சுசுகி நிறுவனத்திற்கு புதிது அல்ல. இதற்கு முன்னால் கிசாஷி மற்றும் எ - ஸ்டார் மாடல்களும் இவ்வாறு தான் கையாளப்பட்டன. இத்தகைய நடவடிக்கைகள் வாடிக்கையாளர் மத்தியில் சுசுகி நிறுவனத்தின் அடுத்தடுத்த மாடல்கலைப் பற்றிய எதிர்பார்ப்பையும் , ஆர்வத்தையும் வாடிக்கையாளர் பன்மடங்கு அதிகரிப்பது மட்டுமின்றி இந்த ஜப்பானிய கார் தயாரிப்பாளர் எந்த அளவுக்கு அந்த கான்சப்ட் வடிவமைப்புகளை நிஜத்தில் கொண்டுவருகிறார்கள் என்ற காத்திருப்பையும் ஏற்படுத்தும்.
0 out of 0 found this helpful