இந்தியா-ஸ்பெக் ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் vs இன்டர்நேஷனல் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட்: இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன ?
published on ஜனவரி 11, 2024 04:05 pm by sonny for ஹூண்டாய் கிரெட்டா 2020-2024
- 129 Views
- ஒரு கருத்தை எழுதுக
உலகளாவிய சந்தை -களில் விற்பனை செய்யப்பட்டு வரும் கிரெட்டாவையே ஹூண்டாய் முதலில் அப்டேட் செய்தது. அதன் பின்னரே இந்தியாவில் அப்டேட் முடிவு செய்தது. ஆகவே இந்த முடிவுக்கு பின்னால் ஒரு நல்ல காரணமும் இருக்கின்றது.
இந்தியா-ஸ்பெக் ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் ஜனவரி 16 அன்று வெளியிடப்படவுள்ளது. விலை விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை என்றாலும் கூட காரின் விவரங்கள் முழுமையாக வெளியிடப்பட்டு விட்டன. அதேசமயம் உலகளவில் விற்பனை செய்யப்பட்டு வரும் இரண்டாம் தலைமுறை கிரெட்டா -வுக்கு ஏற்கனவே, இந்தோனேஷியா மற்றும் மலேசியா போன்ற சர்வதேச சந்தைகளில் உஃபேஸ்லிப்ட் அப்டேட் கொடுக்கப்பட்டு விட்டது. இந்த எஸ்யூவியின் இரண்டு பதிப்புகளுக்கும் இடையே உள்ள வித்தியாசங்களை இங்கே பார்ப்போம்:
முன்பக்க வடிவமைப்பு
சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் கிரெட்டாவில் டுக்ஸான் -காரில் இருப்பதை போன்று பாராமெட்ரிக் ஜூவல் LED விளக்குகளுடன் முன்பக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், புதிய இந்தியா-ஸ்பெக் கிரெட்டா, கிரில்லுக்கான பாக்ஸியர் வடிவமைப்பையும், இன்வெர்டட் L-வடிவ லைட்டிங் எலமென்ட்களுடன் பானட் முழுமைக்கும் புதிய LED DRL கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இரண்டுமே ஒரே மாதிரியான செங்குத்தாக அமைந்த LED ஹெட்லைட்களை கொண்டுள்ளன, ஆனால் இந்தியா-ஸ்பெக் கிரெட்டாவில் பம்பர் மற்றும் ஹவுஸிங்கில் புட்ச் வடிவம் கூடுதலாக உள்ளது.
பின்பக்கம்
இந்தியாவிற்காக கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட்டின் பின்புற ஸ்டைலை புதிய முன்பக்கத்துடன் ஒன்றிப்போகும் வகையில் ஹூண்டாய் புதுப்பித்துள்ளது. கனெக்டட் LED டெயில் லேம்ப் செட்டப் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இது புதிய LED DRL -களுடன் பொருந்துகிறது, அத்துடன் பம்பரில் பெரிய சில்வர் ஸ்கிட் பிளேட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், மற்ற சந்தைகளில் உள்ள புதுப்பிக்கப்பட்ட கிரெட்டா, ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் மாடலுடன் ஒப்பிடும்போது பின்புறத்தில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை.
பக்கவாட்டு தோற்றம்
ஹூண்டாய் கிரெட்டாவின் பக்கவாட்டில் இரண்டு கார்களிலும் எந்த மாற்றங்களும் இல்லை. இருப்பினும், ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ற வகையில் அலாய் வீல்களின் வடிவமைப்பு இருக்கின்றது.
உட்புறம்
புதிய வடிவமைப்பின்படி மூலம், இந்தியாவிற்கான ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மிகவும் கொஞ்சம் சிறப்பானதாக தெரிகிறது, காரணம் இது சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படும் , கிரெட்டாவில் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருக்கான 7-இன்ச் TFT டிஸ்பிளேவுடன் மாடலின் டேஷ்போர்டு அமைப்பைக் கொண்டுள்ளது. இருப்பினும், இந்தியா-ஸ்பெக் கிரெட்டா இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் டிரைவரின் டிஸ்ப்ளேவிற்காக டூயல்-இன்டெகிரேட்ட 10.25-இன்ச் ஸ்கிரீன் மற்றும் மேம்படுத்தப்பட்ட டாஷ்போர்டில் ஒரு புதிய கிளைமேட் கன்ட்ரோல் பேனலையும் பெறுகிறது.
இருப்பினும், இருக்கைகளுக்கு இடையே உள்ள சென்ட்ரல் கன்சோல் வடிவமைப்பு பார்க்கும் போது இரண்டு பதிப்புகளிலும் பெரிய அளவில் மாற்றம் இல்லை. வெவ்வேறு சந்தைகளுக்கு ஏற்ற வகையில் வெவ்வேறு கேபின் தீம்களை பெறுகின்றன, ஆல் பிளாக் அல்லது டூயல் டோன் வெள்ளை நிற அப்ஹோல்ஸ்டரியுடன் இருக்கும்.
பவர்டிரெயின்கள்
ஹூண்டாய் கிரெட்டாவின் இன்ஜின்களின் தேர்வை அந்தந்த மார்க்கெட்களை பொறுத்தும், வேரியன்ட்களுக்கும் ஏற்றபடியும் கொடுக்கின்றது. சில மார்க்கெட்களில் 1.5-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் கிடைக்கும். 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினிலும் கிடைக்கும். இருப்பினும், இந்தியா மூன்று 1.5-லிட்டர் இன்ஜின் ஆப்ஷன்களை பெறும்: நேச்சுரலி ஆஸ்பிரேட்டட், டர்போசார்ஜ்டு மற்றும் டீசல்.
தொடர்புடையது: ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காரின் வேரியன்ட் மற்றும் பவர்டிரெய்ன் ஆப்ஷன் விவரங்கள் வெளியாகியுள்ளன
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹூண்டாய் கிரெட்டா ஜனவரி 16 ஆம் தேதி இந்திய சந்தையில் ரூ.11 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் விற்பனைக்கு வரவுள்ளது. கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, ஸ்கோடா குஷாக், டொயோட்டா ஹைரைடர், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஹோண்டா எலிவேட் மற்றும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்.
மேலும் படிக்க: கிரெட்டா ஆட்டோமெட்டிக்