இந்தியா -வுக்கு வரவுள்ள Kia Carens EV சோதனையின் போது படம் பிடிக்கப்பட்டுள்ளது
க்யா கேர்ஸ் இவி க்காக மார்ச் 21, 2025 03:20 pm அன்று kartik ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் கேரன்ஸ் இவி, ஃபேஸ்லிஃப்டட் கேரன்ஸ் உடன் அறிமுகப்படுத்தப்படும்.
கியா கேரன்ஸ் இவி எம்பிவி மீண்டும் ஒரு முறை படம் பிடிக்கப்பட்டுள்ளது. இந்த முறை தென் கொரியாவில் வெளிப்புறம் முழுவதுமாக மறைக்கப்பட்ட சோதனை கார் சார்ஜிங் செய்யப்படும் போது படம் பிடிக்கப்பட்டுள்ளது. கியா கேரன்ஸ் இவி -யின் ஸ்பை ஷாட்களில் இருந்து என்ன தெரிந்து கொள்ள முடியும் என்பதை இங்கே பார்க்கலாம்:
என்ன பார்க்க முடிகிறது ?
முந்தைய ஸ்பைஷாட்கள் மூலமாக காரின் முக்கோண வடிவ ஹெட்லைட்களையும் , கனெக்டட் எல்இடி டிஆர்எல் ஸ்டிரிப் ஆகியவை இந்த காரில் இருப்பதை பார்க்க முடிந்தது. லைட்டிங் எலமென்ட்களின் வடிவமைப்பு இவி6 -யை போலவே இருந்தாலும், சார்ஜிங் போர்ட் இடம் மாற்றபட்டுள்ளது. இது ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் காரில் உள்ளதை போலவே உள்ளது.
சமீபத்திய வெளியான் ஸ்பை ஷாட்கள் மூலம் கேரன்ஸ் இவி -ல் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) கொடுக்கப்படலாம் என தெரிகிறது. இது விண்ட்ஷீல்டில் கேமரா இருப்பதால் உறுதி செய்யப்பட்டுள்ளது. பம்பரில் முன்பக்க பார்க்கிங் சென்சார்களையும் பார்க்க முடிகிறது. மேலும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சிரோஸ் காரில் உள்ளதை போலவே பக்கவாட்டு சென்ஸார்களையும் கொண்டிருக்கலாம்.
மேலும் பார்க்க: Renault Triber ஃபேஸ்லிஃப்ட் முதல் முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது
கார் முழுவதுமாக மறைக்கப்பட்டிருந்தாலும் அலாய் வீல்கள் தெரிகின்றன இது தற்போதைய இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் (ICE) கேரன்ஸில் உள்ளதை போன்றவற்றில் இருந்து வேறுபட்ட வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது இவி என்பதால் அதற்கேற்றவாறு அதிக ஏரோடைனமிக் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பின்புறம் கனெக்டட் எல்இடி டெயில்லேம்ப்கள் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கேரன்ஸில் இருப்பதை போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவில் இருக்கும் புதுப்பிக்கப்பட்ட சோனெட் மற்றும் செல்டோஸிலிருந்து வடிவமைப்புக்கு சில விஷயங்களை பெறலாம்.
கியா கேரன்ஸ் இவி எதிர்பார்க்கப்படும் வசதிகள் மற்றும் பாதுகாப்பு
கேரன்ஸ் இவி ஆனது 12.3-இன்ச் டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளே செட்டப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், டூயல்-ஜோன் ஆட்டோ ஏசி மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற வசதிகளை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்புக்காக லெவல் 2 ADAS, முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக) மற்றும் 360 டிகிரி கேமரா (ஸ்பை ஷாட்டில் ஓவிஆர்எமில் பொருத்தப்பட்ட பக்க கேமராவில் தெரிவது) இருக்கலாம்.
கியா கேரன்ஸ் இவி பவர்டிரெய்ன்
கியா தற்போது பவர்டிரெய்ன் பற்றிய எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆனால் இது மல்டி பேட்டரி பேக்குகளுடன் 400 கி.மீ முதல் 500 கி.மீ வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கியா கேரன்ஸ் இவி எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
கியா கேரன்ஸ் இவி சுமார் ரூ.16 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆல் எலக்ட்ரிக் எம்பிவி -யான இமேக்ஸ் வேர்ல்ட் 7 காருக்கு மிகவும் விலை குறைவான ஆப்ஷனாக இருக்கும்
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.