இந்தியாவில் உறுதியாக ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாதிரியானது காட்சிப்படுத்தப்பட்டது; விரைவில் அறிமுகப்படுத்தப்படும்

published on பிப்ரவரி 13, 2020 01:36 pm by dinesh for ஹூண்டாய் வெர்னா 2020-2023

  • 52 Views
  • ஒரு கருத்தை எழுதுக

2019 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சீனா-சிறப்பம்சம் பொருந்திய மாதிரி, அதன் துருவ முனைப்பு வடிவமைப்பால் இந்தியாவுக்கு வர வாய்ப்பில்லை

  •  சமீபத்தில் தான் ரஷ்யாவில் ஹூண்டாய் சோலாரிஸ் ஃபேஸ்லிஃப்ட்டை அறிமுகப்படுத்தியது.

  • இந்தியாவில் முன்பே சோதனை ஓட்டம் செய்யப்பட்டது.

  • க்யா செல்டோஸிடமிருந்து புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களை பெரும்.

  • ஏப்ரல் 2020 க்குள் அறிமுகப்படுத்தப்படும்.

  • விலை ரூபாய் 8 லட்சத்திலிருந்து ரூபாய் 14 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

India-bound Hyundai Verna Facelift Revealed; Launch Soon

ஹூண்டாய் சமீபத்தில் ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் அடுத்த தலைமுறை கிரெட்டாவை அறிமுகப்படுத்தியது. தற்போது கார் தயாரிப்பு நிறுவனம் முகப்பு மாற்றம் செய்யப்பட்ட வெர்னாவையும் அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. இது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதுப்பிக்கப்பட்ட சோலாரிஸ் (வெர்னாவானது ரஷ்யாவில் சோலாரிஸ் என்று அழைக்கப்படுகிறது) என்று நாங்கள் நம்புகிறோம்.

 சீனா-சிறப்பம்சம் பொருந்திய மாதிரியைக் காட்டிலும் ரஷ்யா - சிறப்பம்சம் பொருந்திய மாதிரி குறைவான துருவ முனைப்புடன் காணப்படுகிறது. இது முக்கோண முகப்புவிளக்குகளுடன் கூர்மையான முன் பலகையைக் கொண்டுள்ளது, அவை அடுக்கு பாதுகாப்பு சட்டகத்துடன் வருகின்றன. முகப்பு விளக்குகள் எல்இடி அலக்குகளைப் பெறுகின்றன, ஆனால் இந்திய-சிறப்பம்சம்  மாதிரியில் எவ்வாறு பொருத்தப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். இது முகப்பு மாற்றம் செய்யப்பட்ட எலன்ட்ரா போன்றவை முக்கோண வடிவ மூடுபனியில் பிரகாசமாக எரியக்கூடிய உட்பொதிக்கப்பட்ட விளக்குகளைப் பெறுகிறது. 

 பக்கவாட்டு அமைப்புகள் தற்போதைய மாதிரியைப் போலவே இருக்கிறது. பின்புற அமைப்பு பெரும்பாலும் மாறாமல் இருக்கின்றது, ஆனால் சற்று புதுப்பிக்கப்பட்ட பின்புற மோதுகைத் தாங்கி மற்றும் மாற்றம் செய்யப்பட்ட முகப்பு விளக்குகள் உள்ளன.

India-bound Hyundai Verna Facelift Revealed; Launch Soon

உட்புற அமைவு, இது கொஞ்சம் புதுப்பிக்கப்பட்ட தளவமைப்பைக் கொண்டிருக்கிறது, புதுப்பிக்கப்பட்ட மைய அமைப்புடன் புதுப்பிக்கப்பட்ட ஏசி காற்றோட்ட அமைப்பு (முகப்பு மாற்றம் செய்யப்பட்ட எலன்ட்ரா போன்றது) புதிய தொங்கவிடக்கூடிய தொடுதிரை ஒளிபரப்பு அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த முறை முகப்பு மாற்றம் செய்யப்பட்ட வெர்னா தற்போதைய மாதிரியின் 7 அங்குல அலகைக் காட்டிலும் பெரிய திரையைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வென்யூ, புதிய கிரெட்டா மற்றும் முகப்பு மாற்றம் செய்யப்பட்ட எலன்ட்ரா ஆகியவற்றில் இருக்கக் கூடிய இணைக்கப்படச் சிறப்பம்சங்களைப் பெறும். தானியங்கி முறை குளிர்சாதன வசதி, சூரிய ஒளித் திறப்பு மேற்கூரை மற்றும் காற்றோட்டமான முன் இருக்கைகள் உள்ளிட்ட பிற சிறப்பம்சங்கள் மாறாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

India-bound Hyundai Verna Facelift Revealed; Launch Soon

வாகனத்தின் முன்புற கதவின் கீழ், முகப்பு மாற்றம் செய்யப்பட்ட வெர்னா பிஎஸ்6 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களின் தொகுப்பைப் பெறும், இது க்யா செல்டோஸில் அறிமுகத்தினால் இந்த இயந்திரங்கள் அடுத்த தலைமுறை கிரெட்டாவிலும் அளிக்கப்படும். இரண்டு இயந்திரங்களின் தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் கீழேக்  கொடுக்கப்பட்டுள்ளன:

 

 

பெட்ரோல் 

டீசல்

இயந்திரம்

1.5-லிட்டர்

1.5-லிட்டர்

ஆற்றல்

115பி‌எஸ்

115பி‌எஸ்

முறுக்கு திறன்

144என்‌எம்

250என்‌எம்

செலுத்துதல்

6-வேக எம்‌டி/சி‌வி‌டி

6-வேக எம்‌டி/6-வேக ஏ‌டி

ஏப்ரல் 2020க்குள் ஹூண்டாய் இந்தியாவில் முகப்பு மாற்றம் செய்யப்பட்ட வெர்னாவை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வரவிருக்கும் ஐந்தாவது தலைமுறை கார்களான ஹோண்டா சிட்டி, டொயோட்டா யாரிஸ், மாருதி சுசுகி சியாஸ், ஸ்கோடா ரேபிட் மற்றும் வோக்ஸ்வாகன் வென்டோ போன்றவற்றிற்குத் தொடர்ந்து போட்டியாக இருக்கும். முகப்பு மாற்றம் செய்யப்பட்ட வெர்னாவின் விலைகள் ரூபாய் 8 லட்சத்திலிருந்து ரூபாய் 14 லட்சம் வரை இருக்கும். 

மேலும் படிக்க: புதிய வோக்ஸ்வாகன் வென்டோ காட்சிப்படுத்தப்பட்டது. 2021 இல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்

மேலும் படிக்க: இறுதி விலையில் ஹூண்டாய் வெர்னா

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது ஹூண்டாய் வெர்னா 2020-2023

1 கருத்தை
1
J
jamal azharudeen
Feb 13, 2020, 12:30:28 AM

Is there any chance verna getting a venue's 1.0 litre turbo-petrol making 120PS power combined with 7-speed DCT ??? Because even smaller models like i10 nios and aura gets a turbo-petrol engine.

Read More...
    பதில்
    Write a Reply
    Read Full News
    Used Cars Big Savings Banner

    found ஏ car you want க்கு buy?

    Save upto 40% on Used Cars
    • quality பயன்படுத்திய கார்கள்
    • affordable prices
    • trusted sellers
    view used வெர்னா in புது டெல்லி

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    trendingசேடன் கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience