இந்தியாவிற்கு எதிர்பார்க்கப்படும் சுசுகி விடாரா காரில், 1.4L பூஸ்டர்ஜெட் உடன் கூடிய ஸ்போர்ட்டியான S வகையை பெறுகிறது
published on டிசம்பர் 08, 2015 03:12 pm by raunak
- 21 Views
- 13 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
சுசுகியின் பூஸ்டர்ஜெட் டர்போ பெட்ரோல் குடும்பத்தை சேர்ந்த இரண்டாவது என்ஜினை விடாரா S-ல் அறிமுகம் செய்யப்படுகிறது. முன்னதாக, புதிய பெலினோ ஹாட்ச்பேக் மூலம் 1.0-லிட்டர் பூஸ்டர்ஜெட் அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய 1.4-லிட்டர் பூஸ்டர்ஜெட் என்ஜின் உடன் கூடிய விடாரா S காரை சுசுகி நிறுவனம், இங்கிலாந்தில் அறிமுகம் செய்துள்ளது. வரும் 2016 ஜனவரி மாதமான அடுத்த மாதம் முதல், இந்த வாகனத்தின் விற்பனை அங்கு துவங்கும். புதிய விடாராவில் புதிய என்ஜின் மட்டுமின்றி, 17-இன்ச் கிளோஸ் பிளாக் அலாய் வீல்கள், யூனிக் கிரில்லி டிசைன், ஸ்டின் சில்வர் டோர் மிரர்கள், சிவப்பு பிராஜெக்டர் கவர்களுடன் கூடிய LED ஹெட்லேம்ப்கள், பின்பக்க உயர்ந்த ஸ்பாய்லர் மற்றும் கருப்பு நிற பக்கவாட்டு பாடி மோல்டிங்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. உட்புற அமைப்பில், சிவப்பு தையலுடன் கூடிய ஸ்போர்ட்டிங் தீம்மை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டு, ஏர் கன்டீஷனிங் திறப்பி மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட்களில் சிவப்பு மேலோட்ட வரிகள் (அசென்ட்) மற்றும் அலுமினியம் அலாய் பெடல்கள் ஆகியவை உள்ளன.
சமீபத்தில் நம் நாட்டில் விடாரா கார் உளவுப்படத்தில் சிக்கியுள்ளதால், இது இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் என்று தெரிகிறது. அடுத்து வரும் 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைப்பதற்காக, மாருதி சுசுகி மூலம் இது இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம். தற்போது S-கிராஸை இயக்கிவரும் 1.6-லிட்டர் DDiS320 டீசல் மோட்டார் (ஃபியட் 1.6-லிட்டர் மல்டிஜெட்) மூலம் இந்த கார் இயக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் மாடலை பொறுத்த வரை, இங்கிலாந்து மாடலில் பணியாற்றி வரும் இயற்கையோடு இயல்பாக செயலாற்றும் 1.6-லிட்டர் M16A மோட்டாரை பெறலாம். மேலும் இது சுசுகியின் ஆல்கிரிப் AWD தொழில்நுட்பத்தை பெறவும் வாய்ப்புள்ளது. விடாராவின் முக்கிய போட்டியாளராக ஹூண்டாய் க்ரேடா இருந்தாலும், ஆற்றல் கொண்ட போட்டியாளர்களாக அடுத்துவர உள்ள புதுப்பிக்கப்பட்ட ரெனால்ட் டஸ்டர் மற்றும் ஹோண்டா BR-V ஆகியவை இருக்கும்.
இந்த 1.4-லிட்டர் பூஸ்டர்ஜெட் குறித்து பார்க்கும் போது, டையரெக்ட்-இன்ஜெக்ஷன் டர்போசார்ஜ்டு K14C - DITC 1373 cc மோட்டார் மூலம் 5,500 rpm-ல் 140 PS ஆற்றலையும், ஒரு அதிகபட்ச முடுக்குவிசையாக 220 Nm-யும் அளிக்கும் நிலையில், இதன் துவக்கம் 1,500 rpm என்ற அளவில் இருந்து 4000 rpm என்ற அளவு வரை எட்டுகிறது. விடாரா S-யை 10.2 வினாடிகளில் 0-வில் இருந்து மணிக்கு 100 கி.மீ வேகத்தை எட்டி சேர இந்த என்ஜின் உதவுகிறது. அதிகபட்ச வேகம் மணிக்கு 200 கி.மீ செல்கிறது. இந்த S வகையில் தரமான 6-ஸ்பீடு மேனுவலை கொண்டும், 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் விருப்பத் தேர்வாகவும் அளிக்கப்படுகிறது. மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடலில் EC எரிபொருள் சிக்கனம் 52.3mpg (ஏறக்குறைய லிட்டருக்கு 18 கி.மீ) என்ற அளவில் உள்ளது.
இதையும் படியுங்கள்