இந்தோனேஷியாவிலிருந்து நேரடி ஒளிபரப்பான ஹோண்டா BR-V மாடல் வெளியீட்டு நிகழ்ச்சி - இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகிறது
published on ஆகஸ்ட் 21, 2015 11:55 am by raunak for ஹோண்டா பிஆர்-வி
- 11 Views
- 2 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
ரெனால்ட் டஸ்டர், ஹுண்டாய் கிரேட்டா, நிஸ்ஸான் டெர்ரானோ ஆகிய போட்டியாளர்களுக்கு பதிலடியாக ஹோண்டா தனது BR-V மாடலை சந்தையில் வெளியிட்டுள்ளது. இது 1.5-லிட்டர் i-VTEC பெட்ரோல் வகை மற்றும் 1.5-லிட்டர் i-DTEC டீசல் வகை என்ற இருவிதமான விருப்பங்களிலும், 7 இருக்கைகளைக் கொண்டு வருகிறது.
தற்போது நடந்து கொண்டிருக்கும் 2015 கைக்கிண்டோ இந்தோனேஷியா சர்வதேச வாகன கண்காட்சியில் (G IIA S) ஹோண்டா நிறுவனம் அதிகாரபூர்வமாக, BR – V மாடல் காரை வெளியிட்டுள்ளது. BR – V மாடலின் விலை தோராயமாக 230 முதல் 265 மில்லியன் இந்தோனேஷியன் ருபியாவாகவும், இந்திய ரூபாய் மதிப்பில் உத்தேசமாக 10.80 – 12.40 லட்சமாகவும் இருக்கும் என நம்பபடுகிறது. இதன் முன்பதிவு இந்தோனேஷியாவில் ஆரம்பிக்கபட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டின் முதல் மாதங்களில், இந்த கார் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என தெரிகிறது.
ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் இம்மாடலை அறிமுகப்படுத்துவதை உறுதி செய்யவில்லை என்றாலும் 2016 பிப்ரவரி மாதத்தில் நடக்கவுள்ள இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் இந்த காரை அறிமுகப்படுத்தி, அதன் பின்னர் வெளியிடும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
ஹோண்டா BR -V - என்ன வசதிகளை கொடுக்கிறது?
- இதன் வெளிப்பகுதியில் அதிரடியான சாலிட் மோஷன் வடிவமைப்புடன், அழகிய தடிமனான குரோமிய கம்பி வலை மற்றும் அதன் அருகில் LED நிறுத்த விளக்குகளுடன் இணைக்கப்பட்ட பிரதிபலிக்கும் முகப்பு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சரிவான சில்வர் தகடும், குரோமிய தகடு சூழ்ந்த மூடுபனி விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.
- இதன் பக்கவாட்டு பகுதி, பிரியோ/ அமேஜ்/ மொபிலியோ ஆகிய கார்களில் உள்ள அதே போன்ற கோடு விளிம்புகளை கொண்டு, நமக்கு அவற்றை நினைவு படுத்துகின்றன.
- இந்த வாகனம் 16 அங்குல வைர வடிவத்திலான ஆலாய் சக்கரங்களுடனும், 200 m m தரை இடைவெளியுடனும் (கிரவுண்ட் க்ளியரன்ஸ்) வலம் வருகிறது.
- BR -V காரில் ஒன்றுடன் ஒன்று இணைந்த LED பின்புற விளக்குகளும் உள்ளன.
- சிறிய மாறுதல்களுடன், சிட்டி மற்றும் ஜாஸ் மாடல்களில் உள்ளது போலவே இதன் உட்புறதோற்றம் உள்ளது.
- இந்தியாவில் உள்ள அனைத்து ஹோண்டா மாடல்களிலும் உள்ளது போலவே BR -V மாடலிலும் தொடுதிரை (டச் ஸ்கிரீன்) ஆடியோ வீடியோ மற்றும் பயண வழிமுறை அமைப்பு (நேவிகேஷன் இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டம்) ஆகியன உள்ளன.
- BR - V காரில், இதன் போட்டியாளர்களைப் போல அல்லாமல், முக்கிய சிறப்பம்சமாக மூன்று வரிசை இருக்கைகளில் 7 பேர் அமர்ந்து கொள்ளும் வசதி உள்ளது. மேலும், இதன் மூன்றாவது வரிசை இருக்கைகளை 50 : 50 என்ற விகிதத்தில் மடித்துக் கொள்ளலாம். அனைத்து வரிசைகளிலும் ஏசி துவாரங்கள் இடம்பெற்று உள்ளன.
பாதுகாப்பு வசதிகள்
- இரட்டை மற்றும் முன்புற SRS பாதுகாப்பு காற்றுப்பை
- பூட்டற்ற பிரேக்கிங் சிஸ்டம் (ABS) மற்றும் மின்னணு பிரேக் பங்கீடு (EBD)
- வாகனத்தின் உறுதிக்கு உதவும் வெகிக்கிள் ஸ்டெபிலிட்டி அஸ்சிஸ்ட் (VSA)
- மலை ஏற உதவும் ஹில் ஸ்டார்ட் அஸ்சிஸ்ட் (HAS)
- அழுத்தமான பிரிடென்சனர் ELR இருக்கை பெல்ட் மற்றும் ISOFIX பொருத்தப்பட்ட முட்புறத்தில் உள்ள மும்முனை லோட் லிமிட்டர்கள்
வண்ணங்கள்
- மெல்லிய சிறந்த பட்டு போன்ற டப்ஃபேட்டா வெள்ளை
- நவீன சில்வர் மெட்டாலிக்
- பளபளக்கும் கிரிஸ்டல் பிளாக் பேர்ல்
- மிருதுவான மூடுபனி பச்சை முத்து
- ஜொலிக்கும் சந்திர சில்வர் மெட்டாலிக்
- புதிய பேஷன் ரெட் பேர்ல்
இயந்திர விருப்பங்களின் அடிப்படையில் பார்க்கும் போது, 120 PS @ 6600 rpm ஓடு திறனும், 145 Nm @4600 rpm அதிக பட்ச முறுக்கு விசையும் தரகூடிய 1.5 லிட்டர் i-VTEC இஞ்ஜினுடன் இணைந்த ஆறு வேக ஆளியக்க பல்லினைப்பு பெட்டி (கியர் பாக்ஸ்), தானியங்கி CVT அமைப்பு (எர்த் டிரீம் டெக்னாலஜி) ஆகியவற்றை கொண்டுள்ளது. 1.5-லிட்டர் i-VTEC பெட்ரோல் இஞ்ஜின் வகை தவிர 1.5-லிட்டர் i-DTEC வகையை, இந்திய சந்தைக்கு பொறுத்த வேண்டும்.
0 out of 0 found this helpful