சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

ஹூண்டாயின் N பிரிவைச் சேர்ந்த i20 N ஸ்போர்ட் வெளியீடு

published on ஆகஸ்ட் 31, 2015 02:47 pm by nabeel

தனது N பிரிவை முன்னுக்கு கொண்டு வரும் வகையில், பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் N 2025 விஷன் கிரான் டுரிஸ்மோ தொழில்நுட்பத்தை வெளிப்படுத்திய ஹூண்டாய், அந்த பிரிவின் சீரமைப்பு துறையின் பணிகளை ஏற்கனவே துவங்கிவிட்டது போலத் தெரிகிறது. அந்நிறுவனம், தற்போது விற்பனையில் உள்ள i20, i20 N ஸ்போர்ட் ஆகியவற்றின் மேம்பட்ட பதிப்புகளை தென் ஆப்பிரிக்காவில் விரைவில் அறிமுகப்படுத்தி உள்ளது. மற்ற பிராண்டுகளின் சீரமைப்பை போலவே N பிரிவைச் சேர்ந்த கார்களிலும், தோற்றத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டு, அந்நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளில் இருந்து தனித்தன்மையுடன் காணப்படுகிறது.

தோற்றத்திற்கு மிகவும் ஸ்போர்ட்டியாக காட்சியளிக்கும் வகையில், i20 N ஸ்போர்ட்டின் வெளிப்புறம் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு ஜோடி புதிய 17-இன்ச் அலாய்கள், முன்புற மற்றும் பின்புற பம்பர்களில் ட்ரிம் ஃபினிஷ், புதிய பாடி கிட் மற்றும் பக்க பகுதி திரைகள், முன்புற மட்கார்டுகளில் N-பேட்ஜ்கள் மற்றும் பூட் உடன் கூடிய பின்புற பூட் ஸ்பாய்லர் ஆகிய மேம்படுத்தும் அம்சங்களை கொண்டுள்ளது. அதிகம் கவனிக்கப்படாத நுட்பமான விஷயங்களையும் சற்று ஆழ்ந்து பார்த்தால், 1.4 லிட்டர் பெட்ரோல் மோட்டார் கொண்டு இயங்கும் i20 N மூலம் 113bhp உடன் 160Nm டார்க் கிடைக்கிறது. இது தற்போது விற்பனையில் உள்ள 1.4 பெட்ரோல் மாடல் அளிக்கும் 98.6bhp மற்றும் 136Nm என்ற அளவை விட குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆகும். முன் வீல்களின் மூலம் இயக்கப்படும் இந்த காருக்கு, மேற்கண்டவை 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஆற்றல் மையத்தின் செயல்திறனை மேலும் அதிகரிக்கும் வகையில், ஒரு ஸ்டெயின்லஸ் ஸ்டீல் ப்ரீ-ஃப்ளோ CAT பேக் எக்ஸ்சாஸ்ட் சிஸ்டமும் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு ஸ்போர்ட்டியான செயல்திறனை வெளிப்படுத்தும் வகையில், i20 N ஸ்போர்ட்டில் விறைப்பான சுருள்கள் (ஸ்டிஃப்பர் காயில்கள்) கொண்ட நிலையான சஸ்பென்ஸன் அமைப்பை பெற்று, சாலையில் மேற்கூறிய ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இந்த காரில் 4-வீல் எலக்ட்ரானிக் 4-சேனல் ABS மற்றும் EBD அமைப்பை பெற்று, முன்புறம் வென்ட்டிலேட்டேட் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறம் சாலிட் டிஸ்க் பிரேக்கை கொண்டுள்ளது.

இப்போதைக்கு N பேட்ஜ் i20 கார்கள், வெளிநாட்டு சந்தைகளுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பியட் அபார்த் மற்றும் வோல்ஸ்வேகன் போன்ற தயாரிப்பாளர்கள் மூலம் இந்தியாவிற்கு புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் போது, ஹூண்டாயும் தனது N பிராண்ட்டை களமிறக்கி சோதனையில் ஈடுபடலாம் என்று நம்பலாம். இதன்மூலம் நம் நாட்டில் உள்ள வாகன விரும்பிகளின் கைகளுக்கு சக்தி வாய்ந்த i20 N ஸ்போர்ட் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

n
வெளியிட்டவர்

nabeel

  • 11 பார்வைகள்
  • 4 கருத்துகள்

Write your கருத்தை

Read Full News

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
Rs.10.44 - 13.73 லட்சம்*
எலக்ட்ரிக்
பேஸ்லிப்ட்
Rs.67.65 - 71.65 லட்சம்*
பேஸ்லிப்ட்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை