சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Hyundai Verna காரின் இப்போது விலை உயர்த்தப்பட்டுள்ளது

ஹூண்டாய் வெர்னா க்காக நவ 04, 2024 09:42 pm அன்று dipan ஆல் திருத்தம் செய்யப்பட்டது

ஹூண்டாய் வெர்னாவின் பேஸ்-ஸ்பெக் EX வேரியன்ட் விலை மட்டும் உயர்த்தப்படவில்லை.

இந்தியாவில் மிகவும் பிரபலமான காம்பாக்ட் செடான் கார்களில் ஒன்றான ஹூண்டாய் வெர்னா -வின் விலை இப்போது உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இப்போது ஒரு புதிய அமேசான் கிரே எக்ஸ்ட்டீரியர் கலரும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் அதன் வடிவமைப்பை இன்னும் ஸ்போர்ட்டியாக மாற்ற கூடுதலாக ஒரு ரியர் ஸ்பாய்லர் சேர்க்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் வெர்னாவின் புதிய விலை விவரங்களை பார்ப்போம். முதலில் 1.5-லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுடன் கிடைக்கும் வேரியன்ட்களின் விவரங்கள்.

வேரியன்ட்

புதிய விலை

பழைய விலை

வித்தியாசம்

EX MT

ரூ.11 லட்சம்

ரூ.11 லட்சம்

வித்தியாசம் இல்லை

S MT

ரூ.12.05 லட்சம்

ரூ.11.99 லட்சம்

ரூ.6,000

எஸ்எக்ஸ் எம்டி

ரூ.13.08 லட்சம்

ரூ.13.02 லட்சம்

ரூ.6,000

SX சிவிடி

ரூ.14.33 லட்சம்

ரூ.14.27 லட்சம்

ரூ.6,000

SX(O) MT

ரூ.14.76 லட்சம்

ரூ.14.70 லட்சம்

ரூ.6,000

SX(O) CVT

ரூ.16.29 லட்சம்

ரூ.16.23 லட்சம்

ரூ.6,000

பேஸ்-ஸ்பெக் EX வேரியன்ட்டை தவிர மற்ற அனைத்து வேரியன்ட்களின் விலையும் ரூ.6,000 வரை உயர்த்தப்பட்டுள்ளன. இப்போது 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் வேரியன்ட்களுக்கான விலை உயர்வை பற்றி பார்க்கலாம்:

வேரியன்ட்

புதிய விலை

பழைய விலை

வித்தியாசம்

SX டர்போ எம்டி

ரூ.14.93 லட்சம்

ரூ.14.87 லட்சம்

ரூ.6,000

SX டர்போ எம்டி டூயல் டோன்

ரூ.14.93 லட்சம்

ரூ.14.87 லட்சம்

ரூ.6,000

SX டர்போ DCT

ரூ.16.18 லட்சம்

ரூ.16.12 லட்சம்

ரூ.6,000

SX டர்போ DCT டூயல் டோன்

ரூ.16.18 லட்சம்

ரூ.16.12 லட்சம்

ரூ.6,000

SX(O) டர்போ எம்டி

ரூ.16.09 லட்சம்

ரூ.16.03 லட்சம்

ரூ.6,000

SX(O) டர்போ டூயல் டோன்

ரூ.16.09 லட்சம்

ரூ.16.03 லட்சம்

ரூ.6,000

SX(O) டர்போ DCT

ரூ.17.48 லட்சம்

ரூ.17.42 லட்சம்

ரூ.6,000

SX(O) டர்போ DCT டூயல் டோன்

ரூ.17.48 லட்சம்

ரூ.17.42 லட்சம்

ரூ.6,000

இந்த வேரியன்ட்களின் விலையும் ரூ.6000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஹூண்டாய் வெர்னாவிற்கு புதிய எக்ஸ்ட்டீரியர் கலர் தீம் மற்றும் ரியர் ஸ்பாய்லர் தவிர வேறு எந்த அப்டேட்டும் வழங்கப்படவில்லை.

மேலும் படிக்க: ரூ. 15 லட்சத்திற்கும் குறைவான விலையில் வென்டிலேட்டட் சீட்களுடன் கிடைக்கும் விலை குறைவான கார்கள்

ஹூண்டாய் வெர்னா: ஒரு பார்வை

தற்போது அதன் ஐந்தாவது தலைமுறை அவதாரத்தில், ஹூண்டாய் வெர்னா ஆல் LED லைட்டிங் செட்டப், 16-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் புதிய டெயில்கேட்டில் உள்ள ஸ்பாய்லர் ஆகியவற்றுடன் வழங்கப்படுகிறது. புதிய சிங்கிள்-டோன் அமேசான் கிரே கலர் உட்பட 8 கலர் ஸ்கீம்களில் இது கிடைக்கிறது.

இது டூயல்-இன்டெகிரேட்டட் ஸ்கிரீன் செட்டப்பை கொண்டுள்ளது (10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே உட்பட). இது 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், 64-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ், சிங்கிள்-பேன் சன்ரூஃப், ஒரு ஏர் ஃபியூரிபையர் மற்றும் வென்டிலேட்டட் மற்றும் ஹீட்டட் முன் சீட்கள் ஆகியவையும் இந்த காரில் உள்ளன.

பாதுகாப்புக்காக இது குளோபல் NCAP -லிருந்து 5-ஸ்டார் கிராஷ் டெஸ்ட் பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது மற்றும் 6 ஏர்பேக்ஸ் (ஸ்டாண்டர்டாக), முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) போன்ற அம்சங்களுடன் வருகிறது. ) இது ஃபார்வர்டு கொலிஷன் வார்னிங் மற்றும் பிளைண்ட்-ஸ்பாட் வார்னிங் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) வசதிகளையும் கொண்டுள்ளது.

ஹூண்டாய் வெர்னா -வில் 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (160 PS/253 Nm) மற்றும் 1.5-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் யூனிட் (115 PS/144 Nm) உட்பட இரண்டு இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. டர்போ-பெட்ரோல் இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு டிசிடியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் வெர்னா: போட்டியாளர்கள்

ஹூண்டாய் வெர்னா ஆனது ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ், ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ், மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா உடன் போட்டியிடுகிறது.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

மேலும் படிக்க: வெர்னா ஆன் ரோடு விலை

Share via

Write your Comment on Hyundai வெர்னா

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் சேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
Rs.6.54 - 9.11 லட்சம்*
பேஸ்லிப்ட்
புதிய வேரியன்ட்
Rs.11.82 - 16.55 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.6 - 9.50 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.11.07 - 17.55 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை