கியா செல்டோஸிடமிருந்து 1.5 லிட்டர் டீசல் எஞ்சினை ஹூண்டாய் வென்யூ பெறவிருக்கிறது
published on செப் 03, 2019 03:35 pm by dhruv for ஹூண்டாய் வேணு 2019-2022
- 14 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஹூண்டாய் தனது பெரும்பாலான கார்களில் தற்போது வழங்கிக்கொண்டிருக்கும் 1.4 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சினுக்கு பதிலாக ஹூண்டாய்-கியாவின் சமீபத்திய 1.5 டீசல் எஞ்சின் இடம்பெறும்.
-
தற்போதுள்ள 1.4 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் டீசல் என்ஜின்கள் BS4 விதிமுறைகளுட்பட்டு இருக்கின்றன.
-
கியா செல்டோஸின் புதிய 1.5 லிட்டர் டீசல் என்ஜின் முதல் ஆரம்பத்திலிருந்தே BS6 விதிமுறைகளுக்குட்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது
-
BS6 விதிமுறைகள் செயல்பாட்டுக்கு வந்தவுடன் சப்-4 மீட்டர் SUV ஆன வென்யூ தொடர்ந்து டீசல் எஞ்சினுடன் கிடைக்கும்
-
கியா செல்டோஸுடன் அறிமுகப்படுத்தப்பட்ட 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தான் என்ஜின் குறித்த கேள்வி.
-
இது வென்யூ தவிர, மேலும் பல ஹூண்டாய் மாடல்களில் வைக்கப்படும்.
BS6 விதிமுறைகள் விரைவில் செயல்பாட்டுக்கு வரவிருக்கும் நிலையில் பெரும்பாலான கார் தயாரிப்பாளர்கள் ஜனவரி 2020 க்குள் புதிய உமிழ்வு விதிகளுக்கேற்ற கார்களை வெளியிட தயாராகி வருகின்றனர். அரசு BS4 லிருந்து BS6 க்கு மாற ஏப்ரல் 2020ஐ கெடுவாக வைத்துள்ள நிலையில் இந்த காலம் மிக மிக முன்கூட்டியது.
சமீபத்தில் இந்தியாவில் வெளியிடப்பட்ட ஹூண்டாய் வென்யூ BS4 விதிமுறைகளுட்பட்ட 1.4 லிட்டர் டீசல் எஞ்சினைக்கொண்டிருக்கிறது. இனி இதைக்கொண்டு ஹூண்டாய் என்ன செய்யப்போகிறது என நீங்கள் ஆச்சரியபடுவீர்களானால், கொரியன் நிறுவனமான ஹூண்டாய் BS6 விதிமுறைகள் செயல்பாட்டுக்கு வந்தாலும் டீசல் கார்களை இந்தியாவில் தொடர்ந்து விற்போம் என ஏற்கனவே அறிவித்துள்ளனர். அதேவேளை சந்தையின் முன்னணி பிராண்டான மாருதி BS6 விதிமுறைகள் செயல்பாட்டுக்கு வந்தபிறகு சந்தை தேவை இருந்தால் மட்டுமே டீசல் கார்களை தொடர்ந்து விற்கும் என அறிவித்துள்ளது.
ஹூண்டாயின் தங்கை பிராண்டான கியா மோட்டார்ஸ் சமீபத்தில் செல்டோஸுடன் இந்திய சந்தையில் நுழைந்தது. இந்த காம்பாக்ட் SUV 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வருகிறது, இது BS6 விதிகளுக்குட்பட்டது. இந்த எஞ்சினைத்தான் ஹூண்டாய் வென்யூவில் பொருத்துவதன் மூலம் அதன் டீசல் பதிப்பை BS6 விதிகளுட்பட்டதாக மாற்றவிருக்கிறது.
செல்டோஸின் எஞ்சின் 115PS மற்றும் 250Nm சக்தியை உருவாக்குகிறது. எஞ்சின் வென்யூவில் பொருத்தப்படுவதற்கு முன்பு சீர்படுத்தபடும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். வென்யூவின் தற்போதைய 1.4-லிட்டர் டீசல் எஞ்சின் 90PS மற்றும் 220Nm சக்தியை வழங்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் இது 6-வேக மேனுவல் வசதியுடன் பொருத்தப்பட்டுள்ளது. செல்டோஸில் கியா வழங்குவது போல ஹூண்டாய் ஒரு தானியங்கு வசதியை வழங்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
தற்போது 1.4 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சினுடன் கிடைக்கும் ஹூண்டாயின் கார்களான வென்யூ, கிரேட்டா, வெர்னா, எலாந்த்ரா போன்ற கார்களில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பதிலீடு செய்யவுள்ளது. இருந்தாலும் எஞ்சின் ஒத்திசைவு நிலை (State of tune) மாடலுக்கு தக்கபடி மாறுபடும்
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வென்யூவுக்கு புதிய எஞ்சின் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
மேலும் படிக்க: வென்யூ- சாலை விலை
0 out of 0 found this helpful