GM மோட்டார்ஸின் உற்பத்தி ஆலையை கையகப்படுத்தும் ஹூண்டாய் நிறுவனம்
published on ஆகஸ்ட் 18, 2023 01:29 pm by tarun
- 38 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்த ஆலை மூலம், ஹூண்டாய் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும்.
-
ஜெனரல் மோட்டார்ஸின் நிலங்கள் மற்றும் கட்டிடங்கள் மற்றும் சில இயந்திரங்கள் மற்றும் உற்பத்தி உபகரணங்களை ஹூண்டாய் கையகப்படுத்துகிறது.
-
மூன்று ஆலைகளின் மொத்த உற்பத்தி திறன் ஆண்டுக்கு 10 லட்சம் கார்கள் வரை இருக்கும்.
-
2025 ஆம் ஆண்டு முதல் இந்த ஆலையில் உற்பத்தி நடவடிக்கைகளைத் தொடங்க கார் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
-
விரிவாக்கத்துடன், ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவிற்கு புதிய EV கார்களை கொண்டு வருவதற்கு ஆலோசனை செய்து வருகிறது.
மகாராஷ்டிராவின் தலேகானில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸின் (GM) ஆலையை கையகப்படுத்த, ஹூண்டாய் சொத்து கொள்முதல் ஒப்பந்தத்தில் (APA) கையெழுத்திட்டுள்ளது. இந்த புதிய ஆலையின் மூலம், ஹூண்டாய் நிறுவனம், தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இரண்டு தொழிற்சாலைகள் உட்பட, நாட்டில் மூன்று உற்பத்தி ஆலைகளைக் கொண்டிருக்கும்.
இந்த கையகப்படுத்துதலின் மூலமாக, ஹூண்டாய் GM -ன் நிலம் மற்றும் கட்டிடங்கள் மற்றும் ஆலையில் சில இயந்திரங்கள் மற்றும் உற்பத்தி உபகரணங்களின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்ளும். புதிய ஆலையின் மூலம், கார் தயாரிப்பு நிறுவனம் ஆண்டுக்கு 10 லட்சம் யூனிட்கள் வரை உற்பத்தி திறனை இலக்காக கொண்டு, 2025 ஆம் ஆண்டு முதல் உற்பத்தி நடவடிக்கைகளைத் தொடங்குகிறது. தற்போது, ஹூண்டாய் நிறுவனத்தின் மற்ற இரண்டு ஆலைகளில் இருந்து ஆண்டுக்கு 8.2 லட்சம் யூனிட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. GM ஆலையின் தற்போதைய திறன் ஆண்டுக்கு 1.3 லட்சம் யூனிட்களாக இருக்கிறது இது ஒட்டுமொத்த இலக்கை அடையும் வகையில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
மேலும் படிக்கவும்: இந்த 5 புதிய SUVகள் இந்த பண்டிகைக் காலத்தில் உங்கள் பயணத்திற்காக வெளிவருகின்றன
இந்தியாவில் அதிக EV கார்களை அறிமுகப்படுத்தும் திட்டங்களை கார் தயாரிப்பு நிறுவனம் மேலும் மதிப்பாய்வு செய்யும், இது அதன் தமிழ்நாடு ஆலைகளில் ஒன்றிலிருந்து தயாரிக்கப்படும். மூன்று ஆலைகளுடன், ஹூண்டாய் இந்தியாவில் அதிக கார்களை கொண்டு வருவதற்கான சாத்தியங்கள் மற்றும் காத்திருப்பு காலத்தை குறைப்பது பற்றியும் ஆராயக்கூடும், அதே நேரத்தில் அதன் ஏற்றுமதியும் அதிகரிக்கக்கூடும். APA கையொப்பமிடப்பட்டாலும், கையகப்படுத்தல் முடிவடைவது இன்னும் சில ஒழுங்குமுறை ஒப்புதல்கள் மற்றும் பூர்த்தி செய்யப்பட வேண்டிய நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்கும்.
தற்போது ஹூண்டாயின் 13 கார்கள் இந்தியாவில் விற்பனையில் உள்ளன, இதில் இரண்டு EV -கள் - அயோனிக் 5 மற்றும் கோனா எலக்ட்ரிக் ஆகியவை அடங்கும். கிரெட்டா, i20 மற்றும் கோனா EV போன்ற மாடல்கள் மேம்படுத்தப்பட உள்ளன, மேலும் அவற்றின் புதிய பதிப்புகள் அடுத்த ஆண்டு அறிமுகப்படலாம்.
எதிர்காலத்தில் இந்தியாவை மையமாகக் கொண்ட புதிய EV -யை அறிமுகப்படுத்தும் திட்டங்களை அறிவித்துள்ள நிலையில், ஹூண்டாய் கிரெட்டா EV பலமுறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டதால், ஒரு நம்பிக்கைக்குரிய ஒன்றாக தெரிகிறது. அதுமட்டுமல்லாமல், ஹூண்டாய் ஒரு MPV -யை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது கேரன்ஸ்- க்கு இணையான விலையில் இருக்கும் மற்றும் டொயோட்டா இன்னோவாவிற்கு மாற்றாக இருக்கும்.
மேலும் படிக்கவும்: Tata Punch CNG vs Hyundai Exter CNG - கிளைம்டு மைலேஜ் ஒப்பீடு
நீண்ட காலமாக இந்திய வாகனத் துறையில் இரண்டாவது பெரிய நிறுவனமாக ஹூண்டாய் இருந்து வந்தது ஆனால் தற்போது டாடா அந்த இடத்தைப் பிடித்துள்ளது. இந்த கையகப்படுத்தல் மற்றும் அதிகரிக்கப்படும் உற்பத்தி திறன் ஆகியவை ஹூண்டாய் நிறுவனத்துக்கு அதற்கு சந்தையில் உள்ள பங்கைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், அது மேலும் வளர்ச்சியடையவும் உதவும்.