Hyundai Inster மற்றும் Tata Punch EV: விவரங்கள் ஒப்பீடு
published on ஜூன் 28, 2024 06:27 pm by dipan for ஹூண்டாய் inster
- 55 Views
- ஒரு கருத்தை எழுதுக
இன்ஸ்டர் பன்ச் EV காரை விட சிறியது. அதே சமயம் இன்ஸ்டர் காரின் பேட்டரி பேக்குகள் நெக்ஸான் EV காரில் வழங்கப்படுவதை விட அளவில் பெரிதானவை.
ஹூண்டாய் அதன் சிறிய EV -யான இன்ஸ்டர் காரை உலகளவில் வெளியிட்டுள்ளது. இது இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட வாய்ப்புள்ளது. இங்கே அறிமுகப்படுத்தப்பட்டால் சிறிய எலக்ட்ரிக் கார் டாடா பன்ச் EV உடன் போட்டியிடும். பன்ச் இவி இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்பட்டது. இந்த கட்டுரையில் டாடா எலக்ட்ரிக் எஸ்யூவி -யுடன் ஹூண்டாய் இன்ஸ்டர் காரை ஒப்பிட்டு பார்போம்.
அளவுகள்
மாடல்கள் |
டாடா பன்ச் EV |
ஹூண்டாய் இன்ஸ்டர் |
நீளம் |
3,857 மி.மீ |
3,825 மி.மீ |
அகலம் |
1,742 மி.மீ |
1,610 மி.மீ |
உயரம் |
1,633 மி.மீ |
1,575 மி.மீ |
வீல்பேஸ் |
2,445 மி.மீ |
2,580 மி.மீ |
-
டாடா பன்ச் EV ஆனது வீல்பேஸ் தவிர அனைத்து விதத்திலும் ஹூண்டாய் இன்ஸ்டரை விட பெரியது.
-
இன்ஸ்டர் சிறந்த வீல்பேஸை கொண்டிருந்தாலும் பன்ச் EV ஆனது உயரமாகவும் அகலமாகவும் இருப்பதால் பின்புறத்தில் 3 பயணிகளுக்கு மிகவும் பொருத்தமானது.
-
இருப்பினும் இன்ஸ்டர் என்பது எம்ஜி காமெட் இவி போல 4-சீட்டர் கார் ஆகும்.
பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார்
விவரங்கள் |
டாடா பன்ச் EV |
ஹூண்டாய் இன்ஸ்டர் |
||
ஸ்டாண்டர்டு |
லாங் ரேஞ்ச் |
ஸ்டாண்டர்டு |
லாங் ரேஞ்ச் |
|
பேட்டரி பேக் |
25 kWh |
35 kWh |
42 kWh |
49 kWh |
பவர் |
80 PS |
121 PS |
97 PS |
115 PS |
டார்க் |
114 Nm |
190 Nm |
147 Nm |
147 Nm |
கிளைம் செய்யப்பட்டுள்ள ரேஞ்ச் |
315 கி.மீ (MIDC) |
421 கி.மீ (MIDC) |
300 கி.மீக்கு மேல் (WLTP) |
355 கி.மீ வரை (WLTP) |
-
பன்ச் EV மற்றும் Inster EV இரண்டும் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை கொண்டுள்ளன.
-
இருப்பினும் பன்ச் EV -யில் பயன்படுத்தப்படும் பேட்டரி பேக்குகள், இன்ஸ்டரை விட ஒப்பீட்டளவில் சிறியவை.
-
35 kWh பேட்டரி பேக் கொண்ட நீண்ட தூர பன்ச் EV இன்ஸ்டரின் லாங் ரேஞ்ச் பதிப்பை விட அதிக சக்திவாய்ந்த எலக்ட்ரிக் மோட்டாரை பெறுகிறது.
-
சிறிய பேட்டரி பேக் பதிப்புகளுக்கு இன்ஸ்டர் அதிக சக்திவாய்ந்த பவர்டிரெய்னை பெறுகிறது.
-
இன்ஸ்டரின் கிளைம் செய்யப்பட்ட ரேஞ்ச் பன்ச் EV -களை விட குறைவாக உள்ளது. ஆனால் இரண்டும் சோதனை செய்யப்பட்ட விதம் என்பது வேறுபட்டது, மேலும் MIDC அல்லது ARAI ஆல் சோதிக்கப்படும் போது இன்ஸ்டரின் ரேஞ்ச் அதிகமாக இருக்கும்.
-
இரண்டு EV -களிலும் முன் சக்கரங்களை இயக்கும் ஒரே ஒரு எலக்ட்ரிக் மோட்டார் உள்ளது.
சார்ஜிங் விவரங்கள்
விவரங்கள் |
டாடா பன்ச் EV |
ஹூண்டாய் இன்ஸ்டர் |
||
ஸ்டாண்டர்டு |
லாங் ரேஞ்ச் |
ஸ்டாண்டர்டு |
லாங் ரேஞ்ச் |
|
பேட்டரி பேக் |
25 kWh |
35 kWh |
42 kWh |
49 kWh |
ஏசி சார்ஜர் |
3.3 kW / 7.2 kW |
3.3 kW / 7.2 kW |
11 kW |
11 kW |
DC ஃபாஸ்ட் சார்ஜர் |
50 kW |
50 kW |
120 kW |
120 kW |
-
ஹூண்டாய் இன்ஸ்டரின் 120 kW DC சார்ஜிங் ஆப்ஷனால் இரண்டு பேட்டரி பேக்குகளையும் சுமார் 30 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை ரீசார்ஜ் செய்ய முடியும்.
-
11 kW AC சார்ஜிங் 42 kWh பேட்டரிக்கு 4 மணிநேரமும், 49 kWh பேட்டரி பேக்கிற்கு 10 முதல் 100 சதவிகிதம் 4 மணி நேரம் 35 நிமிடங்களும் ஆகும்.
-
மறுபுறம் டாடா பன்ச் EV -யானது 50 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. இதைப் பயன்படுத்தி அதன் இரண்டு பேட்டரி பேக்குகளையும் 56 நிமிடங்களில் 10-80 சதவிகிதம் சார்ஜ் செய்யலாம்.
-
7.2 kW சார்ஜர் 25 kWh பேட்டரிக்கு 3.6 மணிநேரமும், 33 kWh பேட்டரி பேக்கிற்கு 5 மணிநேரமும் 10 முதல் 100 சதவிகிதம் சார்ஜ் செய்ய முடியும்.
-
3.3 kW சார்ஜர் 25 kWh பேட்டரிக்கு 9.4 மணிநேரமும், 35 kWh பேட்டரிக்கு 10 முதல் 100 சதவீதம் சார்ஜ் செய்ய 13 மணி நேரம் 30 நிமிடங்களும் ஆகும்.
வசதிகள்
விவரங்கள் |
டாடா பன்ச் EV |
ஹூண்டாய் இன்ஸ்டர் |
வெளிப்புறம் |
|
|
உட்புறம் |
|
|
கம்ஃபோர்ட் மற்றும் வசதி |
|
|
இன்ஃபோடெயின்மென்ட் |
|
|
பாதுகாப்பு |
|
|
* இந்திய-ஸ்பெக் இன்ஸ்டர் ADAS வசதிகளுடன் வராமல் இருக்கலாம்.
* ஹூண்டாய் இன்ஸ்டர்க்கான முழுமையான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
-
இந்த இரண்டு EV -களின் இன்ஃபோடெயின்மென்ட் பேக்கேஜ்களும் ஒரே மாதிரியானவை. ஆனால் பன்ச் EV ஆனது Arcade.ev உடன் வருகிறது. இது டச் ஸ்கிரீன் வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்ய உங்களை அனுமதிக்கிறது.
-
இருப்பினும் இன்ஸ்டர் வெஹிகிள் டூ ஹெஹிகிள் வசதியுடன் வருகிறது. இது எலக்ட்ரிக் கெட்டில் போன்ற சிறிய உபகரணங்களை இயக்க பயன்படுகிறது.
-
கிடைக்கக்கூடிய விவரங்களின் அடிப்படையில் பன்ச் EV சிறப்பான வசதிகளை கொண்டதாக தெரிகிறது. ஆனால் இன்ஸ்டரில் உள்ள முழு வசதிகளின் பட்டியல் இன்னும் வெளியிடப்படாததால் அதை பற்றி உறுதியாகக் கூற முடியாது.
-
இன்ஸ்டர் சர்வதேச அளவில் ADAS (அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) தொகுப்பையும் பெறுகிறது. அவற்றில் சில வசதிகள் மட்டும் இந்தியாவில் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விலை
மாடல் |
டாடா பன்ச் EV |
ஹூண்டாய் இன்ஸ்டர் |
விலை |
ரூ.10.99 லட்சம் முதல் ரூ.15.49 லட்சம் |
ரூ 12 லட்சம் (எதிர்பார்க்கப்படுகிறது) |
விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் -க்கானவை
ஹூண்டாய் இன்ஸ்டர் அதன் பெரிய பேட்டரி பேக்குகள் காரணமாக அதிக தொடக்க விலையை கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அளவு பன்ச் EV -யை விட சிறியதாக இருந்தாலும் கூட பேட்டரிகள் பெரிதானவை. மேலும் இன்ஸ்டரின் முழுமையான வசதிகளின் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், டாடா பன்ச் காரை எதிர்கொள்ளும் வகையில் அது சிறப்பான வசதிகளுடன் வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இன்ஸ்டர் இந்தியாவிற்கு வரும் என்பதை ஹூண்டாய் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஒரு வேளை அறிமுகப்படுத்தப்பட்டால் இரண்டில் எதை தேந்தெடுப்பீர்கள் என்பதை கீழே உள்ள கமெண்ட் பகுதியில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
வாகனங்கள் தொடர்பாக உடனடி அறிவிப்புகள் வேண்டுமா? கார்தேகோ -வின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: டாடா பன்ச் AMT
0 out of 0 found this helpful